தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவை போக்குவரத்து படி விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அமைச்சர்கள், பேரவைத் தலைவர், துணை பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு கொறடா ஆகியோருக்கு கார் வாங்க ஒரு காருக்கு ரூ.26 லட்சம் உச்சவரம்பாக நிர்ணயம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்க ஒரு காருக்கு ரூ.15 லட்சம் உச்சவரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் விலை, வரிகள், பதிவு கட்டணம், மோட்டார் வாகனக் காப்பீட்டுக் கட்டணம் ஆகியவை உச்சவரம்பில் அடங்கும் அடங்கும் என்றும் கார் வாங்குவதற்கான உச்சவரம்பு ஆண்டுதோறும் 5% உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 40 கோடி செலவில் கார் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
அமைச்சர்களுக்கான கார்களை அரசும், பேரவைத் தலைவர், துணை பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு கொறடா மற்றும் இதர எம்.எல்.ஏ.க்களுக்கான வாகனங்களை சட்டப்பேரவைச் செயலகம் கொள்முதல் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது
அனைத்து வாகனங்களும் BS-6 வகையின்படி இருக்க வேண்டும் என்றும் அரசு GeM இணையதளம் வாயிலாகவே வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக அந்த பதவியில் இருந்து விலக நேரிட்டால் அந்த வாகனத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பேரவைத் தலைவர், துணை பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு கொறடா ஆகியோர் பேரவை செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள், எரிபொருள் வழங்குதல் மற்றும் ஓட்டுநர் நியமனம் ஆகியவற்றை அரசின் பொதுத்துறை மேற்கொள்ளும்
பேரவைத் தலைவர், துணைப் பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமைக் கொறடா ஆகியோருக்கு வழங்கப்படும் வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள், எரிபொருள் வழங்குதல் மற்றும் ஓட்டுநர் நியமனம் ஆகியவற்றைத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம் மேற்கொள்ளும். மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள், எரிபொருள் செலவு மற்றும் ஓட்டுநருக்கான செலவுகள் ஆகியவற்றை, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களே ஏற்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போக்குவரத்து படி மற்றும் உதவியாளர் பணி அக்டோபர் 1ம் தேதி முதல் சட்டம் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனத்துக்கு எரிபொருள், ஓட்டுநர் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். மேலும், எம்எல்ஏக்கள் தங்களுக்கென்று ஓர் உதவியாளரை பணியமர்த்திக் கொள்ள மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்த சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் அண்மையில் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமைச்சர்கள், பேரவைத் தலைவர், துணை பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு கொறடா ஆகியோர் தவிர்த்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உதவியாளர் பணி மற்றும் வாகனபடி அவர்களது ஊதியத்துடன் சேர்ந்து வழங்கப்பட உள்ளது. தற்போது சட்டமன்ற ஊழியர்களுக்கு 1,05,000 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது 1,80,000 ஆக உயரும். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 17 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது