தொழிலாளர் பயிற்சி திட்டத்தின் கீழ், பயிற்சி இயக்குநராகம் சார்பில் 2027 ஜூலை மாதம் நடைபெற உள்ள அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனித்தேர்வர்களாக தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவம், தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய கையோடு மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ. 200 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் e-Challan முறையில் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து, தேர்வு கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான முதல்கட்ட கோட்பாட்டுத் தேர்வு 26.11.2026 அன்று கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும். இந்த கோட்பாட்டுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தக்கட்டமாக நடைபெறும் செய்முறை தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். செய்முறை தேர்வு 27.11.2026 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வாளர்களாக பங்கேற்க விரும்புபவர்கள் 21.09.2026 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்பிக்க 09.10.2026 கடைசி நாளாகும். கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்வு தொடர்பான முழுமையான வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.