• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /கோயம்புத்தூர்
  • /கோவை : அரசு கேபிள் டிவி முக்கிய அறிவிப்பு! செட்ஆப் பாக்ஸ் ஒப்படைக்க அறிவுறுத்தல்

கோவை : அரசு கேபிள் டிவி முக்கிய அறிவிப்பு! செட்ஆப் பாக்ஸ் ஒப்படைக்க அறிவுறுத்தல்

பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்க கோவை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே

Written ByKarthikeyan Sekar
Published: Aug 18, 2026, 05:41 PM IST|Updated: Aug 18, 2026, 05:47 PM IST
joinshare
கோவை : அரசு கேபிள் டிவி முக்கிய அறிவிப்பு! செட்ஆப் பாக்ஸ் ஒப்படைக்க அறிவுறுத்தல்
Image Credit: BharatNet Franchise Jobs in Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கும் தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக தொழில் பங்கீட்டாளர்களை விண்ணப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளது. கோவை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணபிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (District Level Franchisee Partners - DLFP) தேர்வு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

இதற்காக 01.01.2026 அன்று வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில் நிதி தகுதி விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விண்ணப்பதாரர்களுக்கு கடந்த மூன்று நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்த நிலையில், தற்போது அது 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் என தளர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டப் பணிகள் தற்போது சுமார் 96% வரை நிறைவடைந்துள்ளன. மாநிலத்தின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, கிராமப்புறங்களில் தடையில்லா இணைய சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் (Revenue Division) அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களை கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அந்தந்த துணைப் பிரிவுகளுக்கு தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார். அந்த மாவட்டங்கள், விண்ணப்பிக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் செயல்படும் மாவட்டம் மற்றும்/அல்லது அவர்களின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளில் Optical Fibre Cable (OFC) மற்றும் Optical Network Terminal (ONT) பராமரிப்பு. தடையில்லா இணைய சேவை வழங்குதல், சேவை தடைகளை விரைவாக சரிசெய்தல், Service Level Agreement (SLA) விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும்.

விண்ணப்ப பதிவு நடைமுறை TANFINET இணையதள போர்டல் (https://tanfinet.tn.gov.in) மூலம் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவை (Division) தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் 25,000/- (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 2,00,000/- பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்திய பின்னர் TANFINET தலைமையகத்தால் பணி ஆணை (Work Order) வழங்கப்படும்.

மேலும், ஏற்கனவே விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் அதே வருவாய் உட்கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால் அவர்கள் அதே மாவட்டத்தில் உள்ள பிற துணைப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களுக்கான TANFINET இணையதளத்தில் 12.08.2026 முதல் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவனம் அனைத்து மாவட்டங்களிலும் டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை 01.09.2017 அன்று முதல் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாயிலாக சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி சேவையை துவங்கப்பட்டது. மேலும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் சந்தாதாரர்கள் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை பெறுவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.08.2019 அன்று ரூ.130+GST என்ற குறைந்த மாத கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும் ஒப்பந்தப்படிவம் நிபந்தனை எண் 8-ன் படி செட்டாப்பாக்ஸ் பெற்றுக்கொண்டு ஒரு வார காலத்திற்குள் சந்தாதாரர்களுக்கு வழங்கி அதனை செயலாக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதிருப்பின் அதற்க்கான கொள்முதல் கட்டணத்தை வசூல் செய்யலாம் என ஒப்பந்தப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒப்பந்தப்படிவம் 9-ன் படி செட்டாப் பாஸ்க்களை தொடர்ந்து செயலிழக்கம் செய்யப்பட்டு இருப்பின் அதனை உடனடியாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu