குட்கா கும்பலைப் பிடித்த போலீஸ்.. முதல்வர் விஜய்யை நேரில் அழைத்து பாராட்டு
Coimbatore Crime: கோவையில் குட்கா கடத்தலைத் தடுக்க 40 கி.மீ. தூரம் காரின் மேற்கூரையில் பயணித்த தலைமைக் காவலர் – நேரில் அழைத்துப் முதல்வர் விஜய் பாராட்டுடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Coimbatore Crime: கோவையில் குட்கா கடத்தலைத் தடுக்கத் துணிச்சலுடன் செயல்பட்டு, சுமார் 40 கிலோமீட்டர் தூரம் காரின் மேற்கூரையில் பயணித்த தலைமைக் காவலர் வேல்முருகனை, தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் அழைத்துப் பாராட்டினார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் வேல்முருகன் (காவல் எண் 456), குட்கா பொருட்களைக் கடத்திச் சென்றவர்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
குட்கா கும்பலைப் பிடித்த போலீஸ்
அப்போது, வேல்முருகன் இவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஒரு கார் ஓட்டுநர் சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் தப்பிக்கும் நோக்கில் அந்த கார் அங்கிருந்து நகரத்தொடங்கியது. குட்கா பொருட்களைக் காரில் கடத்திச் சென்றவர்கள், காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதையடுத்து, தலைமைக் காவலர் வேல்முருகன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், தப்பிச் சென்ற காரின் மேற்கூரையில் ஏறி, சுமார் 40 கிலோமீட்டர் தூரம் துணிச்சலுடன் பயணித்தார்.
தொடர்ந்து, காவல்துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அவிநாசி அருகே அந்தக் கார் தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 233 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் படிக்க: கோவை பயணிகளுக்கு குட் நியூஸ்.. போத்தனூர் - பரவுனி சிறப்பு ரயில் அறிவிப்பு!
முதல்வர் விஜய் நேரில் அழைத்து
கடமை உணர்வு, துணிச்சல் மற்றும் சமயோசிதமாகச் செயல்பட்ட தலைமைக் காவலர் வேல்முருகனின் வீரதீரச் செயலைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவரை நேரில் அழைத்துப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும் தலைமைக் காவலர் வேல்முருகனை நேரில் சந்தித்துப் பாராட்டி, அவரது துணிச்சலையும் கடமை உணர்வையும் வெகுவாகப் பாராட்டினார். உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலிலும் கடமையைச் சிறப்பாகச் செய்து, குட்கா கடத்தலைத் தடுக்க உதவிய தலைமைக் காவலர் வேல்முருகனின் துணிச்சலான செயல் காவல்துறையினர் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
அமைச்சர் விக்னேஷ் பாராட்டு
முன்னதாக, தனது பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலருக்கு அமைச்சரிடம் இருந்து நேரடியாக கிடைத்த பாராட்டு, வேல்முருகனுக்கு மகிழ்ச்சியையும், மேலும் சிறப்பாக பணியாற்றுவதற்கான ஊக்கத்தையும் அளித்துள்ளது. மேலும், கோவைக்கு நாளை வருகை தரும் போது தலைமை காவலர் வேல்முருகனை நேரில் சந்தித்து, சிறப்பு பாராட்டு மற்றும் பரிசு வழங்கி கவுரவிப்பதாகவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் கடத்தலை தடுக்கும் பணியில் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு கிடைத்த இந்த பாராட்டு, சக காவலர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் படிக்க: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? கைநிறைய சம்பளத்துடன் வேலை.. தமிழக அரசின் அறிவிப்பு