• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

Vetri women goats scheme : கள்ளக்குறிச்சி பெண்கள் 100% மானியத்தில் தலா 5 ஆடுகள் இலவசமாக பெற 'வெற்றி மகளிர் ஆடுகள் வழங்குதல்' திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 23, 2026, 13:26 IST|Updated: Nov 23, 2026, 13:34 IST
joinshare
வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்
Image Credit: Vetri women goats scheme

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

2

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

3

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

4

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

5

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Vetri women goats scheme : ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசின் 'வெற்றி மகளிர் ஆடுகள் வழங்குதல்' திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஒரு பயனாளிக்கு 5 ஆடுகள் வீதம் வழங்கப்பட உள்ளதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக 2026-2027-ஆம் நிதியாண்டிற்கு, கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை மற்றும் தியாகதுருகம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 869 தகுதிவாய்ந்த பெண்களுக்கு மொத்தம் 4,345 ஆடுகள் வழங்கப்பட உள்ளன.  

மேலும் படிக்க | முதலமைச்சர் பொது நிவாரண நிதி - தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள எச்சரிக்கை

திட்டத்திற்கான அடிப்படைத் தகுதிகள் மற்றும் வழிமுறைகள்

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கால்நடை பராமரிப்புத் துறையின் இணையவழி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, தியாகதுருகம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் நிரந்தரக் குடியிருப்பாளராக இருக்க வேண்டும். பயனாளியின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், 100-க்கும் குறைவான கோழிகளைத் தவிர, பயனாளி வேறு எந்தக் கால்நடைகளையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது என்பது முக்கிய நிபந்தனையாகும்.  

நிலம் மற்றும் வருமான வரம்பு குறித்த நிபந்தனைகள்

விண்ணப்பிக்கும் பயனாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் எவ்வித நிலமும் சொந்தமாக இருக்கக் கூடாது. இருப்பினும், அரசு வழங்கிய குடியிருப்பு மனை அல்லது வீடு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையால் குறிப்பிடப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்களின் கீழ் பயனாளி ஏற்கனவே பயனடைந்திருக்கக் கூடாது. அத்துடன், பயனாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளி மத்திய அல்லது மாநில அரசு, அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் நிரந்தரப் பணியாளராக இருக்கக் கூடாது.  

முன்னுரிமைப் பிரிவினர்

சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தை அல்லது சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினரைக் கொண்ட பெண்கள், பொருந்தும் இடங்களில் குறைந்தபட்சம் 40 சதவீத மாற்றுத்திறனைக் குறிப்பிடும் செல்லத்தக்க UDID சான்றிதழைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர். பெருமூளை முடக்குவாதம் மற்றும் கடுமையான இயக்கக் குறைபாடு போன்ற நிலைகளும் பரிசீலிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் உள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தின் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்படுவர். மேலும், மொத்தப் பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் பேர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC/ST) சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் (இதில் ஆதிதிராவிடர்களுக்கு 29 சதவீதமும், பழங்குடியினருக்கு 1 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது).  

விண்ணப்பிக்கும் முறை

திட்டத்தின் கீழ் பயனாளிக்கு வழங்கப்படும் கால்நடைகளை நிர்ணயிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் பராமரிப்பதற்கும், குடற்புழு நீக்கம், தடுப்பூசி மற்றும் அரசு கால்நடை மருத்துவ நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் இதர கால்நடை மருத்துவச் சேவைகளை முறையாகப் பின்பற்றுவதற்கும் பயனாளிகள் உறுதியளிக்க வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை மற்றும் தியாகதுருகம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர், தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி உரிய திட்ட விளக்கங்களைப் பெற்று விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes