SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கோவை வரும் CM விஜய்.. திறக்கப்படும் பெரியார் அறிவகம்! போக்குவரத்து மாற்றம்

Coimbatore News: கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 7 தளங்களைக் கொண்ட பெரியார் அறிவகம் மற்றும் அறிவியல் மையத்தைத் திறந்து வைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வருகை தரவுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Written By R Balaji
Published: Oct 12, 2026, 06:39 PM IST | Updated: Oct 12, 2026, 06:42 PM IST
Join

கோவை காந்திபுரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் அறிவகம் மற்றும் அறிவியல் மையத்தை திறந்து வைப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் வெள்ளிக்கிழமை கோவைக்கு வருகை தருகிறார். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களின் அறிவுத் தேடலுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம் கொங்கு மண்டலத்தின் முக்கிய கல்வி உள்கட்டமைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 தளங்களுடன் பிரம்மாண்டமாக உருவான அறிவகம்!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பழைய மத்திய சிறை வளாகத்தில் சுமார் 6.98 ஏக்கர் பரப்பளவில் இந்த அறிவகம் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்துடன் ஏழு தளங்களை கொண்ட இந்த கட்டிடம், சுமார் 1.98 லட்சம் சதுர அடி பரப்பில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 300 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தில், ரூ. 1.25 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், ஆங்கில நூல்கள் மட்டுமின்றி வரலாற்று ஆவணங்கள் ஆராய்ச்சிக்கு தேவையான புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நூல்களையும் இங்கு பயன்படுத்த முடியும். மேலும், டிஜிட்டல் நூல்கம், மின்னுல்கள் மற்றும் கணினி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு பயனளிக்கும் அறிவியல் மையம்

புத்தக வாசிப்பை தாண்டி, அறிவியம் மற்றும் தொழிநுட்ப கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் STEM அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பான கருத்துகளை செயல்வழியில் புரிந்துகொள்ளௌம் வகையில் இந்த மையம் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில்புத்தாக்க மையங்களும் இடம்பெற்றுள்ளன.

கோவை வரும் முதல்வர் விஜய் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பெரியார் அறிவகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்கவுள்ளார். அப்போது தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி, அறிவகத்தை திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க இருக்கிறார்.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட உள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காந்திபுரத்தில் போக்குவரத்து மாற்றம்?

முதலமைச்சரின் வருகை மற்றும் திறப்பு விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காந்திபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளக்கூடும்.

எனவே, நிகழ்ச்சி நடைபெறும் நாளில் காந்திபுரம் வழியாக செல்லத் திட்டமிடுபவர்கள், கோவை மாநகரப் போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கவனித்து, அதற்கேற்ப தங்களது பயணத்தைத் திட்டமிடுவது நல்லது. எந்தெந்த சாலைகளில் மாற்றம் செய்யப்படும், மாற்றுப் பாதைகள் எவை என்பது குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டால் அவற்றை பின்பற்ற வேண்டும்.

இந்த மையம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் பயனடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கும் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இது முக்கியமான வாய்ப்பாக அமையும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES