• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /கோயம்புத்தூர்
  • /பக்தர்களே அலர்ட்! கோவை பெருமாள் முடி, மேல் முடி கோயில்களுக்கு செல்ல கட்டுப்பாடு.. முக்கிய அறிவிப்பு

பக்தர்களே அலர்ட்! கோவை பெருமாள் முடி, மேல் முடி கோயில்களுக்கு செல்ல கட்டுப்பாடு.. முக்கிய அறிவிப்பு

Coimbatore News: கோவை மாவட்டத்தில் உள்ள ஆணைகட்டி பெருமாள் முடி, மேல் முடி கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். இதனை அறிந்து, பக்தர்கள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 03, 2026, 01:44 PM IST|Updated: Oct 03, 2026, 01:53 PM IST
joinshare
பக்தர்களே அலர்ட்! கோவை பெருமாள் முடி, மேல் முடி கோயில்களுக்கு செல்ல கட்டுப்பாடு.. முக்கிய அறிவிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இந்துசமய அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு

இந்துசமய அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு

2

ஆபாசம், வன்மம், வக்கிரம்.. சத்யபாமாவை உருவக்கேலி செய்த ஸ்டாலினை விளாசிய CM விஜய்

3

ஆன்லைன் பத்திரப் பதிவுத்துறையில் நடந்த மாற்றம்! தமிழ்நாடு அரசின் அப்டேட்

4

Asian Games 2026: கிரிக்கெட்டில் 2வது தங்கம்; இந்திய ஆடவர் அணி மிரட்டல் - பாகிஸ்தான் படுதோல்வி

5

பக்தர்களே அலர்ட்! கோவை பெருமாள் முடி, மேல் முடி கோயில்களுக்கு செல்ல கட்டுப்பாடு.. முக்கிய அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Coimbatore News: கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளிலுள்ள கோவில்களில் வனச்சூழலை பாதுகாப்பதுடன் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், மாவட்ட அளவிலான இணைய வழி ஒருங்கிணைப்புக் கூட்டம் 30.09.2026 அன்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமையில் அரசுத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் திரு.வெங்கடேஷ் பிரபு, வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார் (வடக்கு), மாருதிபிரியா (தெற்கு), மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பாலுசாமி, துணை காவல் கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர்கள் (இந்து சமய அறநிலையத்துறை), வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பெருமாள் முடி, மேல் முடி கோயில்களுக்கு செல்ல கட்டுப்பாடு

இதன்பிறகு, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ் மாதமான புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்முடி மற்றும் மேல்முடி கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

இந்த இரண்டு கோவில்களும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், அதிக அளவில் பக்தர்கள் கூடுவது வனப்பகுதியை பாதுகாத்தல், வன உயிரினங்கள் மற்றும் பல்லுயிர்களை பாதுகாத்தல், குப்பைகள் சேராமல் தடுத்தல், காட்டுத்தீ ஏற்படாமல் தடுத்தல் மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது போன்றவற்றில் சிரமங்கள் ஏற்படுகின்றன. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்முடி மற்றும் மேல்முடி கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

பெருமாள்முடி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாங்கரை சோதனைச் சாவடியை பயன்படுத்த வேண்டும். மேல்முடி செல்லும் பக்தர்கள் பாலமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடி வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தடாகம் வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது

மேலும் படிக்க: ரயில் பயணிகளே உஷார்.. கோவை சந்திப்பில் 6 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காது!

மேல்முடி மற்றும் பெருமாள்முடி செல்லும் பக்தர்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், தரிசனம் முடித்த பக்தர்கள் மாலை 4 மணிக்குள் அந்தந்த சோதனைச் சாவடியை வந்தடைய வேண்டும். இனிவரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள்முடி கோவிலுக்கு அதிகபட்சம் 1,000 எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

வெளியான முக்கிய அறிவிப்பு

மேலும், வாகனங்களின் நுழைவு எண்ணிக்கை அதிகபட்சம் 250 மட்டுமே (இதில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் இரண்டும் அடங்கும்). மேலும், அதேபோல், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மேல்முடி கோவிலுக்கும் அதிகபட்சம் 500 எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும், வாகனங்களின் நுழைவு எண்ணிக்கை அதிகபட்சம் 150 மட்டுமே (இதில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் இரண்டும் அடங்கும்).

வனப்பகுதியை சுத்தம் செய்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்காக, ஒரு நபரிடமிருந்து ரூ.15/- பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கப்படும். சுகாதாரத்துறையினரால் முறையான உடல்நலப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவர். 

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். மேலும், பக்தர்களின் பாதுகாப்பையும், வனப்பகுதியின் இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பையும் உறுதி செய்ய பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பொதுமக்களுக்கு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி: கங்கா மருத்துவமனை அறிவிப்பு!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu