• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /கோயம்புத்தூர்
  • /கோவை வேலைவாய்ப்பு: 83 காலியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

கோவை வேலைவாய்ப்பு: 83 காலியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

Coimbatore News: கோயம்புத்தூர் மாவட்ட தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 83 தற்காலிகப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 15, ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Written ByR Balaji
Published: Aug 21, 2026, 04:24 PM IST|Updated: Aug 21, 2026, 04:29 PM IST
joinshare
கோவை வேலைவாய்ப்பு: 83 காலியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர் குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் தற்காலிகமான இப்பணிகளுக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 83 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் மற்றும் தகுதி விவரங்கள்

Lab Technician Gr-III

காலியிடங்கள்: 3

கல்வித் தகுதி: மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட CMLT / DMLT படிப்பு

மாத ஊதியம்: ரூ. 17,000/-

வயது வரம்பு: 35 வயதுக்குள்

Occupational Therapist (DEIC)

காலியிடங்கள்: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை அல்லது முதுகலை Occupational Therapy

மாத ஊதியம்: ரூ. 23,000/-

வயது வரம்பு: 40 வயதுக்குள்

District Programme Manager

காலியிடங்கள்: 1

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் BAMS பட்டம், பொது சுகாதாரத்துறையில் பணி அனுபவம், அரசு திட்டங்களில் அனுபவம் மற்றும் MS Office உள்ளிட்ட கணினி அறிவு. (AYUSH துறையில் PG தகுதி மற்றும் பணி அனுபவம் உள்ளோருக்கு முன்னுரிமை)

மாத ஊதியம்: ரூ. 42,000/-

வயது வரம்பு: 59 வயதுக்குள்

RMNCH+A Counsellor (பெண்கள் மட்டும்)

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: MSW / Public Administration / Psychology / Sociology / Home Science / Hospital & Health Management ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மற்றும் சுகாதாரத்துறையில் 1-2 ஆண்டுகள் பணி அனுபவம்

மாத ஊதியம்: ரூ. 21,000/-

வயது வரம்பு: 40 வயதுக்குள்

Assistant cum Data Entry Operator (DEO)

காலியிடங்கள்: 1

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணினி அறிவு (1 ஆண்டு பணி அனுபவம் விரும்பத்தக்கது)

மாத ஊதியம்: ரூ. 17,500/-

வயது வரம்பு: 35 வயதுக்குள்

ULB-UHN / ANM

காலியிடங்கள்: 75

கல்வித் தகுதி: +2 (Higher Secondary) தேர்ச்சி மற்றும் DPH அங்கீகரித்த 2 ஆண்டுகால ANM படிப்பு முடித்திருக்க வேண்டும்

மாத ஊதியம்: ரூ. 17,500/-

வயது வரம்பு: 35 வயதுக்குள்

Cleaner

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

மாத ஊதியம்: ரூ. 11,000/-

வயது வரம்பு: 35 வயதுக்குள்

முக்கிய நிபந்தனைகள்

இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானவை மற்றும் ஒப்பந்த அடிப்படையிலானவை. எந்தக் காரணத்தைக் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேரும்போது 11 மாதங்களுக்கான ஒப்பந்தக் கடிதம் மற்றும் சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (குடும்ப அட்டை / ஆதார் அட்டை) ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும். அதாவது, அசல் சான்றிதழின் நகல் மீது கையெழுத்திட்டு இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவுத் தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்பலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் – 641 018.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2026 அன்று மாலை 05:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu