SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

15,000 காலிப்பணியிடங்கள்: கோவையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு, எப்போது?

Coimbatore News: கோயம்புத்தூர் ஈச்சனாரியில் ஆகஸ்ட் 22 அன்று 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் 15,000 காலிப்பணியிடங்களுக்கான மாபெரும் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 20, 2026, 05:56 PM IST | Updated: Aug 20, 2026, 06:01 PM IST
Join

தமிழகத்தில் இருக்கும் மாவட்டங்களில் அவ்வப்போது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும். வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.

இந்த தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரியில் அமைந்துள்ள இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலை 08 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம் (IT), உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ், ஜவுளித்துறை (Textiles), கட்டுமானம் (Civil), இன்ஜினியரிங், விற்பனை மற்றும் மருத்துவத் துறை சார்ந்த 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இதன் மூலம் சுமார் 15,000க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி & வயது வரம்பு

கல்வித் தகுதி: 8 ம் வகுப்பு, 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ (ITI), டிப்ளமோ, நர்சிங் பயின்றவர்கள், கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் பங்கேற்கலாம்.

வயது வரம்பு: வயது வரம்பு ஏதுமில்லை.

கட்டணம்: அனுமதி முற்றிலும் இலவசம்.

விண்ணப்பிக்கும் முறை & முன்பதிவு

வேலை தேடும் இளைஞர்கள் தங்களின் விவரங்களை தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in என்ற பக்கத்தில் உள்ள Candidate Login பிரிவில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும், இம்முகாம் குறித்து கூடுதல் தகவல்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 06 மணி வரை 0422-2642388 அல்லது 9499055937 தொடர்பு கொள்ளலாம். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES