SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கோவையில் அதிர்ச்சி.. மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற சிறுவன் கைது!

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் அத்துமீற முயன்ற 16 வயது சிறுவனை, தெருநாய் விரட்டிய நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துடியலூர் போலீஸார் கைது செய்தனர்.

Written By R Balaji
Published: Sep 04, 2026, 13:19 IST | Updated: Sep 04, 2026, 13:24 IST
Join

கோவையில் சாலையோரம் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற 16 வயது சிறுவனை துடியலூர் போலீஸார் கைது செய்துள்ளனர். அந்தச் சிறுவன் பெண்ணிடம் அத்துமீற முயன்றபோது, அப்பகுதியில் இருந்த தெருநாய் தொடர்ந்து குரைத்து அவனை விரட்டியதால், அங்கிருந்து தப்பியோடியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கோவை துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகே அசோகபுரம் பகுதியில் பெட்டிக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி நள்ளிரவு அந்தக் கடைக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் துடியலூர் போலீஸார் விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, சாலையோரத்தில் படுத்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற காட்சி போலீஸாரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, அந்த நபர் யார் என்பது குறித்து தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சிசிடிவி பதிவில், சாலையோரத்தில் படுத்திருந்த பெண்ணை அணுகும் அந்த நபர், அருகில் குரைத்து கொண்டிருந்த தெருநாய் குறித்து அவரிடம் கேட்பது தெரிந்தது. பின்னர் அந்த நபர் நாயை அங்கிருந்து விரட்டிவிட்டு, பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் சத்தமிட்டுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணை சுற்றி இருந்த தெருநாய் மீண்டும் அந்நபரை நோக்கி குரைத்ததுடன், அவரை விரட்ட முயன்றது. தொடர்ந்து நாய் அச்சுறுத்தியதால் அந்நபர் அங்கிருந்து ஓட தொடங்கியுள்ளார்.

அவரை தெருநாயும் தொடர்ந்து துரத்தி சென்ற காட்சிகளும் சிசிடிவி பதிவில் இடம்பெற்றிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் அத்துமீற முயன்றவர் துடியலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீஸார் அவரைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES