SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கோவை ரயில் பயணிகள் கவனத்திற்கு: அக்., 3, 4 தேதிகளில் முக்கிய ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்!

கோவை ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் மெமு மற்றும் விரைவு ரயில்களின் சேவை, வழித்தடம் மற்றும் புறப்படும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Written By R Balaji
Published: Oct 04, 2026, 04:37 PM IST | Updated: Oct 04, 2026, 04:44 PM IST
Join

கோவை ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ரயில் சேவைகளில் மாற்ற்ம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமு ரயில்கள் மற்றும் சில முக்கிய விரைவு ரயில்களின் வழித்தடம் இயக்கம் மற்றும் புறப்படும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ரயில் சேவையில் மாற்றம் ‘

கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளங்களை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ரயில்களின் சேவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மேட்டுப்பாளையம் - போத்தனூர் இடையே இயக்கப்படும் மெமு ரயில்கள் அக்டோபர் 3 ஆம் தேதி போத்தனூர் வரை செல்லாது. அதற்கு பதிலாக கோவை வடக்கு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே மாற்றியமைத்து கொள்வது அவசியம்.

விரைவு ரயில்களிலும் மாற்றம்

இதேபோல், அக்டோபர் 4 ஆம் தேதி இயக்கப்பட உள்ள 6 முக்கிய விரைவு ரயில்கள், வழக்கமாக கோவை சந்திப்பு ரயில் நிலையம் வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூர் மற்றும் இருகூர் வழியாக இருக்கப்பட உள்ளன. மேலும், கேரளா  எக்ஸ்பிரஸ் மற்றும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோவை சந்திப்புக்கு பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள், புறப்படும் நேரம் மற்றும் ரயில் நிலையம் குறித்து விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்வது நல்லது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES