Coimbatore Traffic Diversion: தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, தவெக, நாதக, கம்யூனிஸ்ட் என 5 முனைப்போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவிற்கு ஆதரவாக இன்று முதல்வர் விஜய்யும், தவெக தலைவருமான விஜய் இன்று பரப்புரையில் ஈடுபடுகிற்ர். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரத்தில் முதல்வர் விஜய் செல்ல உள்ளார். முதல்வர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து, சின்னியம்பாளையம், ஏர்போர்ட் வழியாக மாநகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம். கோவை மாநகருக்குள் இருந்து அவினாசி சாலை வழியாக வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் லட்சுமி மில்ஸ் சந்திப்பில் U-Turn செய்து புலியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக L&T பைபாஸ் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
கோவை மாநகரில் இருந்து அவினாசி சாலை வழியாக மாநகருக்கு வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள் அவினாசி சாலை, V.K.ரோடு வழியாக வரும் வாகனங்கள், மசக்காளிபாளையம் சாலை வழியாக சிங்காநல்லலூர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அவிநாசி சாலை, ஹோப்ஸ் வழியாக வரக்கூடிய வாகனங்கள், டைட்டல் பார்க் சந்திப்பில் U-Turn செய்து காமராஜர் சாலை, சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
காளப்பட்டி சந்திப்பில் இருந்து சித்ரா அவினாசி சாலை வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் காளப்பட்டி சந்திப்பில் இருந்து தென்னம்பாளையம் வழியாக அவினாசி சாலைக்கு செல்லலாம். கோல்ட்வின்ஸ் சாலையில் இருந்து அவினாசி சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஹவுசிங்யுனிட் ரோடு மாருதி பேக்கிரி ஜங்சனில் இருந்து வலது புறம் திரும்பி வீரையம்பாளையம் சாலை வழியாக காளப்பட்டி சந்திப்பிற்கு செல்லலாம்.
30.09.20266 தேதியன்று தமிழக முதல்வர் வருகையையொட்டி விமான நிலையத்திற்கு பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் வரும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள், தங்களது பயண நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வந்து சேருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.30.09.2026 ஆம் தேதியன்று கால் டாக்ஸிகள் மற்றும் மற்ற வாகனங்கள் விமான நிலையத்திற்குள் Parking செய்ய அனுமதியில்லை. 30.09.2026 ஆம் தேதியன்று காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு we the leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் கூறுகையில், ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.