SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்னை - மங்களூரு சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. திருப்பூர், கோவை பயணிகளுக்கு குட் நியூஸ்!

மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில் சேவை அக்டோபர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கூடுதல் ரயில் வசதி கிடைத்துள்ளது.

Written By R Balaji
Published: Sep 07, 2026, 11:57 IST | Updated: Sep 07, 2026, 12:03 IST
Join

ரயில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு மகளூரு செண்ட்ரல் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை அக்டோபர் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக தொடர்ந்து இயக்கப்பட உள்ளன.

மங்களூரு - சென்னை சிறப்பு ரயில்

ரயில் எண் 06126 கொண்ட மங்களூரு செண்ட்ரல் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 26 ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 4 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்படும். இந்த காலகட்டத்தில் மொத்தம் 8 சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06125 கொண்ட சென்னை எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில், செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 27 ஆம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பிற்பகல் 2 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். இந்த ரயிலும் மொத்தம் 8 சேவைகளை வழங்கும். இந்த ரயில் மறுநாள் காலை 8.40 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த ரயில் நிலையங்களில் நிறுத்தம்

இந்த சிறப்பு ரயில்கள் கோவை போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மங்களூரு - சென்னை செல்லும் ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். மங்களூருவில் இருந்து சென்னை வரும் ரயில் போத்தனூரில் அதிகாலை 12.18 மணி, திருப்பூரில் 01.28 மணி, ஈரோட்டில் 02.10 மணி, சேலத்தில் 03.17 மணி, ஜோலார்பேட்டையில் 05.20 மணி அளவில் சென்றடையும்.

சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் ரயில், ஜோலார்பேட்டையில் மாலை 06.05 மணி, சேலத்தில் 07.37 மணி, ஈரோட்டில் 08.35 மணி, திருப்பூர் 09.28 மணி, கோவை போத்தனூரில் இரவு 10.43 மணி அளவில் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களில் ஏசி2-டயர், ஏசி 3-டயர், ஸ்லீப்பர் மற்றும் பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இடம்பெறும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் கூடிய லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES