• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /கோயம்புத்தூர்
  • /18 மலைகள் விவகாரம்: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் செங்கோட்டையன்!

18 மலைகள் விவகாரம்: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் செங்கோட்டையன்!

தமிழகத்தில் 18 மலைகள் விவகாரத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கனிமவளக் கடத்தல் கட்டுப்பாடு, தவெக அரசியல் மற்றும் சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்தும் கோவையில் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

Written ByR Balaji
Published: Aug 26, 2026, 17:09 IST|Updated: Aug 26, 2026, 17:14 IST
joinshare
18 மலைகள் விவகாரம்: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் செங்கோட்டையன்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ராகு, கேது பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் 5 ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் பிறக்கும்

ராகு, கேது பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் 5 ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் பிறக்கும்

2

திருப்பரங்குன்றம் விவகாரம் : மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!

3

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

4

புதுச்சேரியில் அச்சுறுத்தும் டெங்கு: சிறப்பு வாா்டு அமைக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

5

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கணினி பட்டதாரிகளுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து தமிழக அரசியல், கனிமவள விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

தமிழகத்தில் 18 மலைகள் காணாமல் போயுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பிரபு தெரிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மலைப்பகுதிகளில் இருந்து கற்கள் உள்ளிட்ட கனிமங்கள் எடுக்கப்பட்டபோது செலுத்தப்பட்ட வரி மற்றும் அதுதொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும், விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தின் தேவைக்கான கனிம வளங்களை அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் சுமார் 20 நாட்களுக்கு முன்பே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தை விலக்கி வைத்துவிட முடியாதா என பேசியது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு தரப்பினருக்கும் தனித்தனி நிலைப்பாடும் எண்ணங்களும் இருப்பதாக கூறினார். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்ற எண்ணம் இருந்தபோதுதான் தற்போதைய அரசியல் சூழல் உருவானதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தோழமைக் கட்சிகள் ஏற்கனவே தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளதாகவும், அவர்கள் தங்களுடன் இருப்பதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

அவைக்குறிப்பில் வார்த்தைகள் நீக்கம் ஏன்?

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும் சில வார்த்தைகள் பின்னர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், சட்டப்பேரவை பதிவேட்டில் இடம்பெறக்கூடாத வார்த்தைகள் மற்றும் அவை விதிகளுக்கு பொருந்தாத கருத்துகள் நீக்கப்படுவது நீண்டகாலமாக பின்பற்றப்படும் மரபு என விளக்கம் அளித்தார்.

சபாநாயகர் அனைவராலும் பாராட்டப்படும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், சட்டப்பேரவை நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதற்காக தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் பரவும் நீக்கப்பட்ட வார்த்தைகள்

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருவது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதுகுறித்து செய்தித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். ஒரு விவகாரம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆரம்பத்தில் தெரியாமல் இருக்கலாம் என்றும், பின்னர் அது மக்களிடம் வேகமாக பரவும் வகையில் சில செயல்பாடுகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக செய்தித்துறையுடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேட்டூர் அணை திறப்பு -  முதலமைச்சர் வருவாரா?

மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்பாரா என்ற கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்தார். முதலமைச்சரே அது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என்றும், விரைவில் அவர் தனது முடிவை அறிவிப்பார் என்றும் கூறினார்.

இதனிடையே, 18 மலைகள் காணாமல் போனதாக சட்டப்பேரவையில் கூறப்பட்ட விவகாரம் வெளியானவுடன் எதிர்க்கட்சிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து அமைச்சர் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜி ஸ்கொயர் விவகாரம்

ஜி ஸ்கொயர் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், அது குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம் அளிப்பார் என தெரிவித்தார். இதன் மூலம், கனிமவள விவகாரம், சட்டப்பேரவை நடைமுறைகள், தவெக குறித்த அரசியல் நிலைப்பாடு, மேட்டூர் அணை திறப்பு மற்றும் ஜி ஸ்கொயர் விவகாரம் என பல்வேறு முக்கிய கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu