• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /கோயம்புத்தூர்
  • /விஜய் நினைப்பது வேறு, நடப்பது வேறு.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

விஜய் நினைப்பது வேறு, நடப்பது வேறு.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

விஜய்யின் பேச்சில் தடுமாற்றம் இருந்ததாகவும் என்ன பேச வேண்டும், அதை எப்படி பேச வேண்டும் என்பதில் அவருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த தடுமாற்றமே அவருக்கு பெரிய மாற்றமாக அமையும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Written ByR Balaji
Published: Oct 01, 2026, 06:03 PM IST|Updated: Oct 01, 2026, 06:07 PM IST
joinshare
விஜய் நினைப்பது வேறு, நடப்பது வேறு.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
‘சிக்மா’ ரிலீஸ்..ஜேசன் சஞ்சய்க்கு ஜோதிகா வாழ்த்து! என்ன கூறியிருக்கிறார்?

‘சிக்மா’ ரிலீஸ்..ஜேசன் சஞ்சய்க்கு ஜோதிகா வாழ்த்து! என்ன கூறியிருக்கிறார்?

2

விஜய் நினைப்பது வேறு, நடப்பது வேறு.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

3

Explained : மரண தண்டனை..2 முறை விஷ ஊசி போட்டும் சாகாத பெண்! என்ன காரணம்?

4

ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி விவகாரம்.. திமுக நிர்வாகி கைது!

5

Explainer: LPG சிலிண்டர் மகிழ்ச்சி செய்தி... தொடரும் மானியம், மத்திய அமைச்சரவை ஒப்புதல்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நியினார் நாகேந்திரன், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். மதுராந்தகத்தில் ஏற்கனவே பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதாக கூறிய அவர், அங்கு அதிமுகவுக்கு சாதகமான சூழல் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல், தாராபுரத்தில் இருந்தும் வரும் தகவல்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

விஜய் பேச்சில் தடுமாற்றம்

தாராபுரம் பிரச்சாரத்தின்போது முதல்வர் விஜய், பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டதாக விமர்சித்திருந்தார். இது குறீத்து நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், விஜய்யின் பேச்சில் தடுமாற்றம் இருந்ததாக கூறினார். என்ன பேச வேண்டும், அதை எப்படி வேண்டும் என்பதில் அவருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த தடுமாற்றமே அவருக்கு பெரிய மாற்றமாக அமையும் என்றும் தெரிவித்தார்.

தவெக சார்பில் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பணிகள் குறித்து பட்டியலிடப்பட்டு வருவதாக குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என கேள்வி எழுப்பினர்.

ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர்கள் பல்வேறு கோப்புகளில் கையெழ்த்திடுவது வழக்கம் என்றும், தற்போதைய அரசு எந்த முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளது, மக்களுக்காக என்ன செய்துள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் மின்வெட்டு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, சொத்து வரி அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் முடிவிலும் எதிரொலிக்கும்

முதலமைச்சர் விஜய் ஒன்றை நினைத்து மற்றொன்றை பேசுவதாகவும், அவர் பேச வந்தது வேறு, நினைத்தது வேறு, ஆனால் தற்போது நடப்பது வேறு என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார். இதன் தாக்கம் தேர்தல் முடிவிலும் வெளிப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தூய சக்தி, தீய சக்தி என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்

பிரச்சாரங்களில் “ஓம் காளி”, “ஓம் சக்தி” உள்ளிட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கும் நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

சனாதன தர்மம் குறித்து பலருக்கும் முழுமையான புரிதல் இல்லை என்று கூறிய அவர், திமுகவை எதிர்த்து முன்பு இந்து மதம் தொடர்பான கருத்துகளை முன்வைத்தவர்கள் தற்போது வேறு நிலைப்பாடுகளை எடுத்து வருவதாக விமர்சித்தார். விஜய் தனது பிரச்சாரத்தில் “ஓம் சக்தி, பராசக்தி” மற்றும் “தூய சக்தி” உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்கால தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்றால், யார் நல்ல சக்தி, யார் தீய சக்தி என்பதை மக்கள் தங்களது முடிவின் மூலம் தீர்மானிப்பார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

பணம் பட்டுவாடா குற்றச்சாட்டு

தவெக சார்பில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக, அக்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சண்முகம் குற்றம்சாட்டியிருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விஜய் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu