2026 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இப்பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையே ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை மற்றும் காயங்குளம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்பட உள்ளன.
கோவை பகுதியை சேர்ந்த பயணிகள் போத்தனூர் ரயில் நிலையத்திற்கு சென்று இந்த சிறப்பு ரயிலில் ஏறிக்கொள்ளலாம். சென்னை சென்ட்ரல் - கொல்லம் ரயில் இரவு 11:13 மணிக்கு போத்தனூர் வந்தடைந்து, 11:15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில், கொல்லம் - சென்னை சென்ட்ரல் ரயில் மாலை 6:20 மணிக்கு போத்தனூர் வந்தடைந்து, 6:22 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
மேலும், இந்த சிறப்பு ரயில்கள் மூன்றாம் வகுப்பு ஏசி எகனாமி (AC 3-Tier Economy) பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்து உள்ளது.