SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அதிமுக டூ தவெக.. ரூ. 35 கோடி? பொள்ளாச்சி ஜெயராமன் பரபரப்பு குற்றச்சாட்டு!

பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு மாறிய முன்னாள் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.35 கோடி வழங்கப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டு தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written By R Balaji
Published: Sep 19, 2026, 13:45 IST | Updated: Sep 19, 2026, 13:49 IST
Join

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்த விவகாரம் மீண்டும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் அதிமுக மூத்த நிர்வாகி பொள்ளாச்சி ஜெயராமன் கட்சி மாறிய முன்னாள் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ. 35 கோடி வழங்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன் கூறியது என்ன?

பொள்ளாச்சியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் கட்சி மாறிய எம்எல்ஏக்களுக்கு தலா ரூ. 35 கோடி வழங்கப்பட்டதாக கூறினார். மேலும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் இந்தி பணம் வழங்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். தங்களது வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற பின்னர் கட்சி மாறியவர்களுக்கு மக்கள் உரிய பதிலை அளிக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.

இடைத்தேர்தலால் மீண்டும் எழுந்த விவகாரம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏக்களின் கட்சி மாற்றம் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய விவாதமாகி உள்ளது.

தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும் தாராபுரத்தில் பானுமதியும் களம் காண்கின்றனர்.

ஏன் கட்சி மாறினார்கள்?

கட்சி மாறிய முன்னாள் எம்எல்ஏக்களின் முடிவையும் பொள்ளாச்சி ஜெயராம கடுமையாக விமர்சித்தார். ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் ஆளும் தரப்புக்கு சென்றதாகவும், சிலர் தங்கள் மீதான வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால் கட்சி மாறியதாகவும் அவர் கூறினார். மேலும், அவர்கள் தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகவே கட்சி மாறியதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

குதிரை பேர புகார்

தமிழக அரசியலில் கட்சி மாறிய எம்எல்ஏக்கள் தொடர்பாக பண பரிமாற்றம் நடந்ததாக பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ள ரூ. 35 கோடி குற்றச்சாட்டு அந்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. இது தொட்ர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES