செப்டம்பர் 15, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பாலக்காடு டவுன், - திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட நாட்களில் இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் மாற்றங்களை கவனித்து பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மூர்த்திபாளையம் - கரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஸ்லீப்பர் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி பாலக்காடு டவுனில் இருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் ரயிலின் சேவையில் முதலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 16844 பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் வழக்கமாக காலை 6.30 மணிக்கு செப்டம்பர் 15, 17 மற்றும் 19 ஆகிய மூன்று நாட்களிலும் அதாவது திருச்சி வரை செல்லாமல் புகலூரில் தற்காலிகமாக நிறுத்தப்படும். புகலூர், கொடுமுடி மற்றும் கரூர் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், புகலூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இந்த ரயில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். வழக்கமான 16844 ரயிலுக்கு இருக்கும் அதே நிறுத்தங்களுடன் இந்த சிறப்பு சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ரயில் எண் 16322 கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் வழித்தடத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் வழக்கமாக கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும். செப்டம்பர் 15, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் முதல் திண்டுக்கல் வரையிலான வழித்தடத்தில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அதன்படி, கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் போத்தனூர், பொள்ளாச்சி, பழனி வழியாக திண்டுக்கல் செல்லும். இதனால் வழக்கமான வழித்தடத்தில் உள்ள பல ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்காது.
குறிப்பாக கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகலூர், கரூர், பாலையம் மற்றும் ஏரியோடு ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிற்காது. அதே நேரத்தில், மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமைப்பேட்டை, பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
எனவே செப்டம்பர் 15, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இந்த ரயில்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் வழக்கமான ஆட்டவணையை மட்டும் நம்பாமல் மாற்றப்பட்ட சேவை விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்து பயணத்தை மேற்கொள்வது அவசியம்.