Tamil Nadu Government : கோவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் முன்னிலையில் “சுற்றுலாவின் அனைத்து நிலைகளிலும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல்” கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் “சுற்றுலாத்துறையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல், டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், சுற்றுலாத்துறை அமைச்சர், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த சுற்றுலா புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான மற்றும் எளிதான முன்பதிவு அனுபவத்தை வழங்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (TTDC) புதுப்பிக்கப்பட்ட www.ttdcbooking.com இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலம் TTDC விடுதிகள், சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் படகு இல்லங்களைப் பார்வையிட்டு, நிகழ்நேர அறை இருப்பு விவரங்களை அறிந்து ஆன்லைனில் முன்பதிவு செய்யவும், பாதுகாப்பான ஆன்லைன் கட்டணம், OTP சரிபார்ப்பு மற்றும் QR குறியீடு அடிப்படையிலான முன்பதிவு சீட்டு உள்ளிட்ட வசதிகளைப் பெறவும் முடியும். மேலும், சுற்றுலாத் தலங்கள், கோயில்கள், கடற்கரைகள் மற்றும் மலைவாசஸ்தலங்கள் குறித்த தகவல்களை ஒரே தளத்தில் அணுகி, பயணத்தை எளிதாகத் திட்டமிடும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
"Reimagine TN” - AI காணொளிப் போட்டி இளைஞர்கள், மாணவர்கள், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் -TN AI Video Competition #ReimagineTN" அறிமுகப்படுத்தப்பட்டது. AI தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள், இயற்கை, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் தனித்துவமான சுற்றுலா அனுபவங்களை புதிய கோணத்தில் வெளிப்படுத்தும் வகையில் 60 விநாடிகளுக்குள் Instagram Reel காணொளிகளை உருவாக்கி பங்கேற்கலாம்.
“உலகம் தமிழ்நாட்டை அனுபவிக்கும் விதத்தை மறுவடிவமைத்தல்” (Reimagining How the World Experiences Tamil Nadu) என்ற கருப்பொருளில் “தமிழ்நாடு சுற்றுலா புதுமைச் சவால் - 2026” அறிமுகப்படுத்தப்பட்டது. Startups, Innovators, மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் பங்கேற்று சமையல், கிராமப்புறம், பாரம்பரியம், பண்பாடு, சுற்றுச்சூழல், சாகசம் மற்றும் டிஜிட்டல் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் புதுமையான யோசனைகள் மற்றும் தீர்வுகளை முன்வைக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் முன்மொழிவுகளுக்கு Mentoring, Boot camp மற்றும் Final Pitch வாய்ப்புகள் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2026. ஆகும்.