• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /கோயம்புத்தூர்
  • /ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! 3 நாட்கள் 2 எக்ஸ்பிரஸ் ரயில்களில் மாற்றம்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! 3 நாட்கள் 2 எக்ஸ்பிரஸ் ரயில்களில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக செப். 22, 24, 26 ஆகிய தேதிகளில் செங்கோட்டை–ஈரோடு மற்றும் பாலக்காடு–திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Written ByR Balaji
Published: Sep 21, 2026, 02:04 PM IST|Updated: Sep 21, 2026, 02:07 PM IST
joinshare
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! 3 நாட்கள் 2 எக்ஸ்பிரஸ் ரயில்களில் மாற்றம்

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை - ஈரோடு மற்றும் பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் செப்டம்பர் 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மூர்த்திபாளையம் மற்றும் கரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஸ்லீப்பர் புதுப்பித்தல் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ்

செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் ரயில் எண் 16846 செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், செப்டம்பர் 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கரூர் சந்திப்பு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர், கரூரில் இருந்து ஈரோடு சந்திப்பு வரை இந்த ரயில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும் வழக்கமாக செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் அதே ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரயிலும் நின்று செல்லும்.

பாலக்காடு - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ்

அதேபோல், பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் எண் 16844 பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ், செப்டம்பர் 22, 24 ஆகிய தேதிகளில் புகலூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இருக்கப்படும்.

புகலூர் ரயில் நிலையம் கொடுமுடி மற்றும் கரூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் அடைந்துள்ளது.பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு, புகலூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இந்த ரயில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரயிலும் வழக்கமான பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் ரயிலின் அதே நிறுத்தங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, செப்டம்பர் 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்த ரயில்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், மாற்றப்பட்ட சேவை விவரங்களை கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu