SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

3வது மனைவியை விவாகரத்து செய்கிறார் பவன் கல்யாண்! இணையத்தை பரபரப்பாக்கிய அறிவிப்பு..

ஆந்திர அரசியலின் முக்கியப்புள்ளியாகவும், தெலுங்கு சினிமாவின் முக்கிய ஸ்டாராகவும் இருக்கிறார் பவன் கல்யாண். இவர், தன்னுடைய 3வது மனைவியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 10, 2026, 06:54 IST | Updated: Nov 10, 2026, 07:02 IST
Image Credit: பவன் கல்யாண் அன்னா கொனிடேலா | X Page
Join

ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வரும், தெலுங்கு சினிமாவின் முக்கிய புள்ளியாகவும் இருக்கிறார் பவன் கல்யாண். இவர், தன்னுடைய மனைவி அண்ணா கொனிடேலாவை பிரிவதாக அறிவித்திருக்கிறார். இது, அவருடைய ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.

பவன் கல்யாண் - அண்ணா கொனிடேலா:

பவன் கல்யாண், ரஷ்யாவை சேர்ந்த அண்ணா கொனிடேலாவை 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2011ல் சந்தித்த இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் உள்ளனர். இருவரும் 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள், விவாகரத்து பெற இருப்பதாக சமீப சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன. தற்போது அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விவாகரத்து பெறுவதாக அறிவிப்பு..!

பவன் கல்யாண் மற்றும் அண்ணா இருவரும் இணைந்து திங்கட்கிழமையான நேற்று (நவம்பர் 10) கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அதில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.

“எங்கள் நலம் விரும்பிகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும்... எங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியை ஒன்றாகக் கழித்த பிறகு, பரஸ்பர புரிதலுடனும் மரியாதையுடனும் பிரிந்து செல்ல நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், நாங்கள் தொடர்ந்து நல்ல நண்பர்களாகவும், எங்கள் அருமையான பிள்ளைகளுக்குப் பொறுப்பான பெற்றோர்களாகவும் இருப்போம்.

மேலும் படிக்க | பிக்பாஸ் பாலாஜி வீட்டில் போதைப்பொருள் சோதனை! வைரலாகும் வீடியோ..பரபரப்பு பதிவு

எங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சியும் நலனுமே எப்போதும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். வாழ்க்கையின் இந்த மாற்றமான கட்டத்தில், உங்கள் புரிதலையும், கனிவையும், எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு நீங்கள் அளிக்கும் மரியாதையையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். இந்த நீண்ட பயணத்தில் எங்களுக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்திருக்கின்றனர்.

எப்படி காதல் ஏற்பட்டது?

அன்னா கொனிடேலாவின் உண்மையான பெயர், அன்னா லெஜினோவா. இவர், ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் எனும் இடத்தை சேர்ந்தவர். இவர் பவன் கல்யாணை திருமணம் செய்யும் முன்னர் ஒரு மாடல் ஆகவும் நடிகையாகவும், இசைக்கருவிகளை இசைப்பவராகவும் இருந்ததாக கூறப்படுகிறது. 2011ல் வெளியான டீன் மார் எனும் படம் மூலம் இவர் பவன் கல்யாணை சந்தித்ததாக கூறப்படுகிறது. அந்த படத்தில் அவரும் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அங்கு தொடங்கிய அவருடைய நட்பு, காதலுக்கும் பின்னர் திருமணத்திற்கும் வழிவகுத்தது.

முதல் இரு மனைவிகள் எங்கே?

பவன் கல்யாண், 1997ஆம் ஆண்டு நந்தினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் 1999ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். பின்னர், 2008ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். இது பெரியவர்களால் பார்த்து வைத்த திருமணம் என கூறப்படுகிறது.

பவன் கல்யாண், 2009ஆம் ஆண்டு, ரேணு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து, சில நாட்கள் லிவ்-இன் உறவில் இருந்து பின்னர் திருமண உறவில் இணைந்தனர். ஆனால் இதுவும் பல நாட்கள் நீடிக்கவில்லை. இவர்கள் 2011ஆம் ஆண்டில் பிரிந்து, 2012ஆம் ஆண்டில் பிரிந்து விட்டனர். இவர்களுக்கு அகிரா, ஆத்யா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். தற்போது மூன்றாவது மனைவியான அன்னாவையும் அவர் பிரிந்திருக்கிறார்.

மேலும் படிக்க | அனிருத் காவ்யா திருமணம்! கிரீஸிக்கு கிளம்பிய பிரபலங்கள்-வைரல் போட்டோஸ்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES