SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

’இருமுடி’ படக்குழுவுக்கு வந்த சிக்கல்! குழந்தை நட்சத்திரம் குறித்து பேசியதால் வந்த வினை..

சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம், இருமுடி. இந்த திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தால் தற்போது இப்படக்குழு பிரச்சனையில் மாட்டி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 03, 2026, 12:11 PM IST | Updated: Nov 03, 2026, 12:29 PM IST
Join

கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி, ரவி தேஜா நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம்தான் இருமுடி. இந்த படத்தில் அவருடன் சேர்ந்து நக்‌ஷத்திரா எனும் குழந்தை நட்சத்திரம் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது அவரை பற்றி ரவி தேஜா பேசிய ஒரு விஷயம்தான், அப்படத்தை தயாரித்த மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு சட்ட நடவடிக்கையை தேடி தந்துள்ளது.

இருமுடி திரைப்படம்:

சிவா நிர்வானா இயக்கத்தில் உருவான திரைப்படம்தான், இருமுடி. இந்த படத்தில் ரவி தேஜா, நக்‌ஷத்திராவுடன் பிரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். படத்தின் கதையை பொருத்தவரை, டிரக் ட்ரைவராக இருக்கும் ரவி தேஜா, மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார். தன் மகள் சொல்வதை கேட்டு, 41 நாட்கள் மதுப்பழக்கத்தை விட்டு சபரிமலைக்கு மாலை போடுவார்.

அந்த சமயத்தில் அவர் பெண்கள் பாலியல் சீண்டல், அதற்கு எதிராக குரல் கொடுப்பது போன்றவற்றையும் செய்கிறார். இதனால் அவருடைய மகள் இறக்க நேரிடுகிறது. இதனால் சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டே அவர் தன் மகள் இறப்பிற்காக எதிரிக்ளையும் பழி வாங்குகிறார். இதுதான் இப்படத்தின் கதையாகும்.

நெடு நாட்களாக எந்தவித ஹிட்டும் இல்லாமல் தவித்து வந்த ரவி தேஜாவிற்கு, இப்படம் நல்ல ஹிட் ஆக அமைந்தது. இப்படம், உலகளவில், சுமார் ரூ.247.51 கோடி வரை வசூலித்திருக்கிறது. இந்த வெற்றியால் தெலுங்கு திரையுலகில் ரவி தேஜாவிற்கு மீண்டும் நல்ல பெயர் கிடைத்தது.

மேலும் படிக்க | இதெல்லாம் அடுக்குமா? மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலை! ஒரே நேரத்தில்..இரண்டு இடத்திலா?

படக்குழுவிற்கு நோட்டீஸ்!

இருமுடி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான நக்‌ஷத்திராவின் பாதுகாப்பு, பணிச்சூழல் மற்றும் ஊதியம் தொடர்பாக, ஜெய் லோக் சத்தா அமைபின் நிறுவனர் தலைவர் சி.மகேஷ் பாபு தொழிலாளர் துரையில் புகார் கொடுத்திருக்கிறார். இதன் அடிப்படையில் தெலங்கானா தொழிலாளர் நலத்துறை படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு நோடீஸ் அனுப்பி இருக்கிறது.

இதில், குழந்தை தொழிலாளர் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், மாவட்ட அட்சியரின் அனுமதி மற்றும் பெற்றோரின் சம்மதம் பெறப்பட்டதா என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும், நக்‌ஷத்திராவின் வேலை நேரம், வருகை பதிவு, கல்வி மற்றும் பாதுகாப்பு ஏறபடுஅக்ள் குறித்த விவரங்களை வழங்குமாறும் தயாரிப்பாளர்களுக்கு தொழிலாளர் துறை அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், விளம்பர நிகழ்வுகளில், அவர் பங்கேற்றது குறித்த விவரங்களையும், அவருடைய வருமானத்தில் 20 சதவீத தொகை அவருடிஅய பெயரில் நிலையான வைப்பு நிதி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி படுத்துமாறும், கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தேவையான அனைத்து ஆவணங்களுடனும் விசாரணைக்கு ஆஜராகுமாறும் படக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை நவம்பர் 4ஆம் தேதியான நாளை நடக்க இருக்கிறது.

குழந்தை நட்சத்திரம் குறித்து பேசிய விஷயம்..

சில வாரங்களுக்கு முன்பாக, இருமுடி படத்தின் வெற்றிவிழா நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, விழாவின் ஒரு பகுதியாக ரவி தேஜாவிடம் குழந்தை நட்சத்திரமான நக்ஷத்தரா சில கேள்விகளை கேட்டார். அப்போது, “எனக்கு ஒரு செல்லப்பெயர் வைக்க வேண்டும் என்றால், என்ன வைப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ரவி தேஜா தெலுங்கில் “முதுரு முண்டா” என்று ஒரு வார்த்தையை கூறினார். இதற்கு அந்த குழந்தை, “எனக்கு இதற்கு அர்த்தம் தெரியவில்லை, அர்த்தம் கூற முடியுமா?” என்று கேட்க, அதற்கு ரவி தேஜா, “நான் உனக்கு பின்னர் தெரிவிக்கிறேன்” என்று கூறினார். ரவி தேஜா உபயோகித்த அந்த வார்த்தை மிகவும் அவச்சொல்லாக கருதப்படுகிறது. இது பின்னாளில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

மேலும் படிக்க | தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் 3 படங்கள்! சீன் to ராமாயணா..எதை எந்த தேதியில் பார்ப்பது?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES