e-NAM Portal: விவசாயிகளின் நலனிற்காக மத்திய அரசு பல வித வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று e-NAM போர்ட்டல். தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய உள்ளூர் வேளாண் சந்தைகளை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு இந்த தளம் மிக உதவியாக இருக்கும்.
பெரும்பாலும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதில்லை. இவற்றை வாங்க சரியான நபர்கள் கிடைக்காதது, இடைத்தரகர்களின் தலையீடு போன்ற காரணங்களே இதற்கு முக்கியமாக அமைகின்றன. இந்தச் சிக்கலைத் தீர்க்க, அரசாங்கம் 'e-NAM' (மின்னணு தேசிய வேளாண் சந்தை - Electronic National Agriculture Market) என்ற இணையதளத்தை (போர்ட்டல்) உருவாக்கியுள்ளது. இந்தத் தளத்தின் மூலம், விவசாயிகள் தங்கள் பயிர்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முடியும்.
e-NAM போர்ட்டலின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இது நாடு முழுவதும் உள்ள பல்வேறு வேளாண் சந்தைகளை ஒன்றிணைக்கிறது. இது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் உள்ள சிரமங்களைக் குறைத்து, சரியான வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளவும், நியாயமான விலையைப் பெறவும் உதவுகிறது.
விவசாயிகள் இந்தத் தளத்தில் பதிவு செய்து இப்படிப்பட்ட பல பலன்களைப் பெறலாம். இந்தத் தளத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களையும், வீட்டிலிருந்தபடியே இதைப் பயன்படுத்தி எவ்வாறு பயனடையலாம் என்பதையும் இங்கே காணலாம்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை e-NAM போர்ட்டல் மூலம் விற்பனை செய்ய விரும்பினால், பின்வரும் செயல்முறையைப் பின்பற்றிப் பதிவுசெய்யலாம்:
e-NAM போர்ட்டலில் பதிவு செய்ய சில குறிப்பிட்ட ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இதில் விவசாயிகளின் ஆதார் அட்டை, வங்கிப் புத்தக நகல் அல்லது வங்கிக் கணக்கு விவரங்கள், மொபைல் எண் மற்றும் நில ஆவணங்கள் (நிலப் பதிவேடு/கதோனி போன்றவை) அடங்கும்.