கவின்-நயன்தாரா நடித்த ‘Hi’ திரைப்படத்தின் விமர்சனம்! படம் எப்படியிருக்கு?
Hi Movie Review : கவின் – நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கிற ‘ஹாய்’ படம் எப்படி இருக்கு? குடும்பத்தோட பார்க்குற அளவுக்கு படம் நன்றாக இருக்கிறதா? வாங்க பார்க்கலாம்!
Hi Movie Review : ‘ஹாய்’ படத்தில் கவின், நயன்தாரா முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்கியிருக்கிறார்.
கதை என்ன?
படத்தின் கதை ரொம்ப சிம்பிளான காதல் கதையிலிருந்துதான் ஆரம்பிக்கிிறது. கவின் காதல், கல்யாணம் என்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைக்கும் இளைஞராக இருக்கிறார். ஆனால் அவருக்கு சரியான துணை அமையவில்லை.
இன்னொரு பக்கம் நயன்தாரா. பிடிக்காத திருமணத்துக்கு சம்மதிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
இந்த சூழ்நிலையில்தான் கவின் – நயன்தாரா ரெண்டு பேரும் சந்தித்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதையாக நகர்கிறது.
கவின், நயன்தாராவை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் நயன்தாரா அவரை நண்பராகத்தான் பார்க்கிறார். ஒரு கட்டத்தில் நயன்தாராவை ஒரு பிரச்சனையிலிருந்து காப்பாத்த கவின் சொல்லும் ஒரு பொய்யால், கதை இன்னும் சுவாரஸ்யமாக மாறுகிறது.
அதன் இந்த பொய் எப்படி பெரிய பிரச்சனையாக மாறுகிறது? கவின் – நயன்தாரா காதல் என்ன ஆகிறது? இதுதான் படத்தின் மெயின் கதை.
ப்ளஸ் என்ன?
படத்தின் பெரிய பிளஸின் லிஸ்டில் முதலில், நடிகர் கவின் – நயன்தாரா இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேருமே அவர்களின் கேரக்டருக்கு நன்றாகவே பொருந்தி இருக்கிறார்கள். குறிப்பாக கவினின் காமெடி டைமிங் பல இடங்களில் நன்றாகவே ஒர்க் ஆகியிருக்கிறது.
நயன்தாராவும் மிகவும் யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.முதல் பாதியில் காதல், காமெடி, ரொமான்ஸ் என படம் ஜாலியா போகுது. சில காட்சிகள் நம்மளையும் சிரிக்க வைக்கிறது.
இரண்டாம் பாதியில் குடும்ப சென்டிமென்ட் அதிகமாக வருகிறது. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் தங்களின் கேரக்டர்களை சிறப்பாக செய்துள்ளனர்.
மைனஸ் என்ன?
படத்தில், சில மைனஸும் இருக்கிறது. சில காட்சிகள் கொஞ்சம் இழுவையாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சில இடங்களில் வேகம் குறைகிறது.
நயன்தாரா கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தமான காட்சிகள் கொடுத்திருக்கலாமோ என்று கேட்க தோன்றுகிறது.
இருந்தாலும், பெரிய சீரியஸ் கதையின், ஆக்ஷன் படமோ இல்லாமல் ஒரு லைட்டான காதல் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படத்தை பார்க்கணும்னு நினைப்பவர்களுக்கு ‘ஹாய்’ திரைப்படம் ஒரு நல்ல சாய்ஸ்.