• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

free dairy cow scheme Tamil Nadu : ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு. தகுதிகள், கடைசி தேதி என்ன? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 27, 2026, 18:24 IST|Updated: Nov 27, 2026, 18:36 IST
joinshare
ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு
Image Credit: free dairy cow scheme Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

free dairy cow scheme Tamil Nadu : கிராமப்புறப் பெண்கள் மற்றும் திருநங்கைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தி, அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரும் நோக்கில், தமிழ்நாடு அரசு 100 சதவீத மானியத்தில் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.  

மேலும் படிக்க | வீடு வாங்கியவர்களுக்கு இனி ஜெயில் பயம் இல்லை: RERA சட்ட விதியில் தமிழக அரசு அதிரடி திருத்தம்!

1. காஞ்சிபுரம் மாவட்டம்: 100% மானியத்தில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 100 சதவீத அரசு மானியத்தில் விலையில்லா கறவை மாடுகள் பெறுவதற்கு உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய கிராமங்களைச் சேர்ந்த 200 தகுதியான பெண்கள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.  

தகுதிகள் மற்றும் முன்னுரிமை விவரங்கள்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

குடும்பத்தில் ஏற்கனவே கறவை மாடுகள் இல்லாதவராகவும், மாடு பராமரிப்பதற்கான போதிய வசதி கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள்ளும், நிலம் 2.5 ஏக்கருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க (MPCS) உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  

தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், கைபேசி எண், மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் UDID அட்டை மற்றும் சுய சான்றளிப்பு விவரங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் கால்நடை பராமரிப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையவழி மூலமாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 05.12.2026 கடைசி நாளாகும்.  

2. ராமநாதபுரம் மாவட்டம்: வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் 100% மானியம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் உள்ள திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி மற்றும் பரமக்குடி ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் "வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்" 100 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

திட்டத்தின் மூலம் கிடைக்கும் பயன்கள்

தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு ரூ.30,000 மதிப்புள்ள 5 செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள், அதாவது 1 கிடா மற்றும் 4 பெண் ஆடுகள் அல்லது 5 பெண் ஆடுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். மேலும், ஆடுகளுக்கான 2 ஆண்டு காப்பீடு, போக்குவரத்து மற்றும் தீவனச் செலவிற்காக ரூ.2,500 வழங்கப்படும். வழங்கப்பட்ட ஆடுகளை நன்கு பராமரிக்கும் பயனாளிகளுக்கு ஓராண்டிற்குப் பிறகு ரூ.2,000 ஊக்கத்தொகையாகவும் அளிக்கப்படும்.  

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? யாருக்குத் தகுதியில்லை?

இத்திட்டத்தில் 18 முதல் 60 வயதுடைய ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி மகளிர் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்களை உடைய மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதேநேரம், சொந்தமாக நிலம் உள்ளவர்கள், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், கால்நடைத் துறை திட்டத்தில் ஏற்கனவே பயன்பெற்றவர்கள், கால்நடை வைத்திருப்போர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்ப்பவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.  

விண்ணப்பிக்கும் தேதி மற்றும் உதவி மையங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பயனாளிகள் 27.11.2026 முதல் 17.12.2026 வரை tnahschemes.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், இராமநாதபுரம் மாவட்ட இணை இயக்குநர் அலுவலகம், முதுகுளத்தூர், திருவாடானை, கமுதி, சாயல்குடி கால்நடை மருந்தகங்கள் மற்றும் பரமக்குடி கால்நடை மருத்துவமனை ஆகிய உதவி மையங்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ramanathapuram.nic.in அல்லது www.ahd.tn.gov.in ஆகிய இணையதளங்களைப் பார்வையிடலாம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes