Scene Twitter Review : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் சூர்யா, மலையாள இயக்குநரான ஜீத்து மாதவன் இயக்கத்தில் ’சீன்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சூர்யா பல நாட்களுக்கு பிறகு போலீஸாக நடித்திருக்கிறார். தீபாவளியை முன்னிட்டு சீன் திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ட்விட்டர் ரிவ்யூ என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
’சீன்’ திரைப்படத்தின் ரைட்டிங், செம ஸ்மார்ட் ஆக இருப்பதாக ஒரு ரசிகர் குறிப்பிட்டிருகிறார்.
#SCENE - 🤝 Suriya Super. Smart Writing by Jithu. FUN Timepass Film!
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 6, 2026
சூர்யாவும் சூப்பராக நடித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
சீன் படத்தை ஒரு ரசிகர், ஈசியான தீபாவளி வின்னர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“ஒரு தனித்துவமான மற்றும் விறுவிறுப்பான, வேடிக்கையான குற்றப் புலனாய்வுத் திரைப்படம். வலிமையான வில்லன், வலிமையான கதாநாயகன் மற்றும் வலிமையான கதாநாயகியைக் கொண்ட, மிகவும் பொழுதுபோக்கு நிறைந்த ஒரு குற்றப் புலனாய்வுத் திரைப்படம். நடிகர் தேர்வுதான் மிகப்பெரிய பலம்... சூர்யா, நஸ்லன் மற்றும் நஸ்ரியாவின் அற்புதமான நடிப்பு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
#SCENE – 3.75/5. A Unique & Engaging Crime Fun Investigation Film. A Highly Entertaining Crime Investigation Film With A Strong Villain, Strong Hero & Strong Heroine. Casting Is The Biggest Plus... Superb Performances From Suriya, Naslen & Nazriya. Though Most Of The Sequences Take Place Inside A House, The Film Keeps Us Engaged Throughout. Liked Suriya & Nazriya's Portions. Good Background Score As Well. Suriya Is Currently At "Careerin Utcham" And It's Interesting To See How He Believed In Jeethu And Chose Such A Unique Role. Jeethu Has Perfectly Delivered A Film That Everyone Will Enjoy! Investigation Sequences In The 2nd Half And The Suriya–Naslen Portions Are Major Highlights. All The Supporting Characters Have Also Done Their Parts Well. Overall, A Very Unique & Entertaining Film From Suriya. Surely A Film That Will Satisfy All Types Of Audiences. EASY DIWALI WINNER 🔥
— Trendswood (@Trendswoodcom) November 6, 2026
“பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டிற்குள் நடந்தாலும், படம் முழுவதும் நம்மை ஈடுபாட்டுடன் வைத்திருக்கிறது. சூர்யா மற்றும் நஸ்ரியாவின் பகுதிகள் பிடித்திருந்தன. பின்னணி இசையும் நன்றாக இருந்தது. சூர்யா தற்போது 'கரீரின் உட்சம்' தொடரில் நடித்து வருகிறார். அவர் ஜீத்துவை நம்பி, இப்படி ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தது சுவாரஸ்யமாக இருக்கிறது. அனைவரும் ரசிக்கும் ஒரு படத்தை ஜீத்து கச்சிதமாக வழங்கியுள்ளார்” என்று அந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.
கடைசியாக, படம் பயங்கர எண்டர்டெயினிங் ஆக இருப்பதாகவும், இது சூர்யாவின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் முழுமை படுத்தும் என்றும் கூறியிருக்கிறார். தொடர்ந்து, இதுதான் ஈசியான தீபாவளி வின்னர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு ரசிகர், சூர்யாவை இது போன்ற ஒரு கேரக்டரில் இதுவரை பார்த்ததில்லை என்று கூறியிருக்கிறார்.
#Scene - Saravedi 🧨 Never Seen #Suriya In This Kind Of Character Before! A Completely Fresh Avatar And A Good Performance ❤️ Naslen Semma Performance Raa Paa! 👌 Nazriya Also Gets A Good Role. Investigation And Situational Comedies Are Blended Really Well. Well Written By Jithu 🤝 Sushin’s BGM Elevates The Film. Cameos, Twists And Turns Are Super 😁 The Climax Face-Off Fight Is A Pakka Theatrical Moment 💥
— Trendsetter Bala (@trendsetterbala) November 6, 2026
“சூர்யாவை இதற்கு முன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்த்ததே இல்லை! முற்றிலும் ஒரு புத்தம் புதிய அவதாரம் மற்றும் ஒரு நல்ல நடிப்பு. நாஸ்ரயாவுக்கும் ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. புலனாய்வும் சூழ்நிலை நகைச்சுவையும் மிகச் சிறப்பாகக் கலக்கப்பட்டுள்ளன. ஜித்துவின் எழுத்து அருமை. சுஷினின் பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. சிறப்புத் தோற்றங்கள், திருப்பங்கள் எல்லாம் சூப்பர். கிளைமாக்ஸில் நடக்கும் நேருக்கு நேர் சண்டை ஒரு பக்கா தியேட்டர் மெட்டீரியல்..” என்று அந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.
சூர்யா இந்த வருடத்தில் மட்டும் கருப்பு, விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்த இரு படங்களுமே நல்ல வெற்றியை பெற்றிருக்கின்றன. மூன்றாவதாக சீன் படம் வெளியாகி இருப்பதை அடுத்து, இதுதான் இந்த வருடத்தில் வெளியான சூர்யா படங்களிலேயே ரொம்ப சிறந்த படம் என்று ஒரு ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
#Scene has been watched... Best #Suriya film of 2026. It isn't easy to follow up a unique star vehicle like #Aavesham, but #JithuMadhavan has done just that with Scene, and does it with a lot of conviction and style. #Nazriya and #Naslen lead a formidable ensemble that hardly miss a beat... And yeah... @Suriya_offl, you are a Rockstar. DRCS
— Avinash Ramachandran (@Avinash_R13) November 6, 2026
மேலும், சூர்யாவை ராக்ஸ்டார் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சூர்யாவின் இன்னொரு சிக்ஸர்!
ஒரு ரசிகர், இது சூர்யாவின் இன்னொரு சிக்ஸர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Man, this is another SIXER from Suriya. Three solid films in a row is a rarity for a star in Indian cinema, let alone Kollywood. May be the only ONE to do it in recent memory. What a streak, Suriya 🙏 #SCENE
— Siddarth Srinivas (@sidhuwrites) November 6, 2026
மொத்தத்தில், சூர்யாவின் ‘சீன்’ படமும், இந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் சேரும் என்று கூறப்படுகிறது.