• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்... இந்திய திரையுலகிற்கு பேரிழப்பு

மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்... இந்திய திரையுலகிற்கு பேரிழப்பு

Singeetham Srinivasa Rao Passed Away: மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் (95) வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்றிரவு (அக். 3) காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவர் பல திரைப்படங்களை இயக்கி உள்ளார். திரைக்கதை ஆசிரியராகவும் புகழ்பெற்றவர் ஆவார்.

Written BySudharsan G
Published: Oct 03, 2026, 11:28 PM IST|Updated: Oct 04, 2026, 12:00 AM IST
joinshare
மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்... இந்திய திரையுலகிற்கு பேரிழப்பு
Image Credit: Singeetham Srinivasa Rao Passed Away | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்... இந்திய திரையுலகிற்கு பேரிழப்பு

மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்... இந்திய திரையுலகிற்கு பேரிழப்பு

2

நாளை (அக்டோபர் 4) 4 மாவட்டங்களில் கனமழை: சென்னையில் மழை உண்டா?

3

தாய்மாமன் தங்க மோதிரம் : நாமக்கல் மாவட்டத்தில் எந்தெந்த தேதிகளில் வழங்கப்படுகிறது?

4

உணவு பார்சல்களில் ஸ்டேப்ளர் பின்களுக்கு அதிரடி தடை: FSSAI அதிரடி உத்தரவு

5

DA Hike: ஜனவரி 2027 முதல் 67% அகவிலைப்படி? அரசு ஊழியர்களுக்கு AICPI-IW கொடுத்த குட் நியூஸ்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Veteran Director Singeetham Srinivasa Rao Passed Away: மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் (95) காலமானார். வயது மூப்பு காரணமாக அவதிப்பட்ட சிங்கீதம் சீனிவாசராவ், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றிரவு (அக். 3) அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கீதம் சீனிவாசராவ்வின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

సింగీతం శ్రీనివాసరావు గారు ఇక లేరన్న వార్త ఎంతో బాధాకరం. ఆదిత్య 369, పుష్పక విమానం, మయూరి… కాలానికి ముందే ఆలోచించి, తరాలు మారినా కొత్తగా అనిపించే సినిమాలు అందించిన దార్శనికుడు. వారి కుటుంబ సభ్యులకు నా ప్రగాఢ సానుభూతి.
ఓం శాంతి 🙏

— Jr NTR (@tarak9999) October 3, 2026

1972ஆம் ஆண்டில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானாலும், தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து எண்ணற்ற பல சிறப்பான திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

சிங்கீதம் - கமல் கூட்டணி

ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம், காதலா காதலா உள்ளிட்டவை சிங்கீதம் - கமல் கூட்டணியில் உருவான குறிப்பிடத்தக்க படங்கள் எனலாம். கமல் நடிப்பில் உருவான மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தையும் இயக்கியது இவரே.

பிற தமிழ் திரைப்படங்கள்

கமல்ஹாசன் தயாரித்த மகளிர் மட்டும் படத்தையும் இவரே இயக்கினார். பிரபு கதாநாயகனாக நடித்த சின்ன வாத்தியார் திரைப்படத்தையும் இவரே இயக்கியிருந்தார். இது சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாகும். ஜோதிகா நடித்திருந்த லிட்டில் ஜான் திரைப்படத்தையும் இவர் இயக்கினார்.

94 வயதில் படத்தை இயக்கியவர்

90 வயதை தாண்டியும் திரைப்பட சிந்தனையிலேயே ஆழந்திருந்தார். இவரது இயக்கத்தில் 'Sing Geetham' என்ற தெலுங்கு திரைப்படம் இந்தாண்டு ஜூன் 12ஆம் தேதி வெளியாகியிருந்தது. 94 வயதில் திரைப்படத்தை இயக்கி கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் சாதனையை முறியடித்தார்.

ஹாலிவுட் இயக்குநரும், நடிகருமான கிளின்ட் ஈஸ்ட்வுட்டை பின்னுக்குத் தள்ளி உலகின் வயதான ஆக்டிவ் திரைப்பட இயக்குநர் என்ற பெருமையை பெற்றார். இத்திரைப்படம் அவருக்கு 61வது திரைப்படமாகும். இவர் சில திரைப்படங்களுக்கு திரைக்கதை மட்டும் எழுதியிருக்கிறார்.

புதுமை விரும்பி சிங்கீதம்

இந்திய சினிமாவின் முன்னோடியான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவர் பல திரைப்படங்களை இயக்கி உள்ளார். திரைக்கதை ஆசிரியராகவும் புகழ்பெற்றவர் ஆவார். புதுமை விரும்பியான இவர் பல்வேறு பரிசோதனை முயற்சிகளின் மூலம் பெயர் பெற்றவர் இவர்.

வசனம் இல்லாத திரைப்படம் 'புஷ்பக்' (தமிழில் பேசும் படம்), சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம் 369 உள்ளிட்டவை இவரது படைப்பாற்றலுக்கு மிகச் சிறந்த உதாரணங்கள் எனலாம். 1972ஆம் ஆண்டில் தெலுங்கில் 'நீதி நிஜயிதி' (Neethi Nijayithi) திரைப்படம் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார்.

தமிழில் இவரது முதல் திரைப்படம் 'திக்கற்ற பார்வதி' ஆகும். 1974இல் வெளியான இத்திரைப்படம் இவருக்கு தேசிய திரைப்பட விருதை வென்றுக் கொடுத்தது. நடிகர்கள் லஷ்மி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்த திரைப்டமாகும்.

சிங்கீதம் சீனிவாசராவ் - ஆரம்ப காலம்

1931ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி அன்று ஆந்திர பிரதேசத்தின் உதயகிரி பகுதியில் பிறந்தவர் சிங்கீதம் சீனிவாசராவ். சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் வென்ற இவர் திரைப்படத்துறைக்குள் நுழைந்து பிரபல இயக்குநர் கே.வி.ரெட்டியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

அவற்றில் மாயாபஜார், ஜகதேக வீருனி கதா உள்ளிட்ட படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவர் இயக்கம் மட்டுமின்றி திரைக்கதை, தயாரிப்பு, இசை, நடிப்பு என சினிமாவின் பல துறைகளிலும் பணியாற்றிய அனுபவத்தை கொண்டவர்.

'அபூர்வ சிங்கீதம்...'

கடந்த 2024ஆம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் சிங்கீதம் சீனிவாச ராவின் திரைப்பட வாழ்வை நினைவுக்கூறும் வகையில் "அபூர்வ சிங்கீதம்" என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த வயதிலும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவருக்கே உரிய நகைச்சுவை தொனியில் சீங்கிதம் சீனிவாசராவ் மிரட்டியிருந்தார்.

அந்த நிகழ்வு அவரது திரைப்பட வாழ்வை ரசிகர்கள் புரிந்துகொள்ள பெரிதும் உதவும். நிகழ்ச்சி நான்கு பாகங்களாக 'Raaj Kamal Films International' யூ-ட்யூப் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்தியத் திரைப்படத் துறையில் தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநரான அவர், பல தலைமுறை இயக்குநர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவர், இன்னும் பல தலைமுறை இயக்குநர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cinema