SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஜெயிலர் 2 படத்துக்கு இலவச டிக்கெட்! ஆனா ஒரே ஒரு கண்டீஷன்..என்ன தெரியுமா?

ரஜினிகாந்த் நடிப்பில், சமிபத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் ஜெயிலர் 2. இந்த திரைப்படத்திற்கு தான் இலவச டிக்கெட் தருவதாக கூறியிருக்கும் திருப்பூர் அதிமுக கவுன்சிலர், அதற்கு ஒரு கண்டீஷனையும் வைத்திருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 22, 2026, 04:02 PM IST | Updated: Oct 22, 2026, 04:13 PM IST
Join

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் படம்தான், ஜெயிலர் 2. 2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகத்தையொட்டி, இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கான இலவச டிக்கெட்டுகளை தருவதாக ஒரு எம்.எல்.ஏ தெரிவித்திருக்கிறார்.

ஜெயிலர் 2:

ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் ரஜினிகாந்துடன் சேர்ந்து, மோகன்லால், ஜாக்கி ஷ்ராப், சுராஜ், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கேமியோ ராேலில் நடித்திருக்கின்றனர். இப்படம், அக்டோபர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. நீண்ட நாட்களுக்கு பிறகு, இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பான திரை விருந்தாக இருப்பதாக நம்பப்படுகிறது.

படத்தின் ஆக்ஷன், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, நடனம், பாடல்கள் என அனைத்தும் பாராட்டை பெற்றிருப்பதால், படத்திற்கு வசூலும் குறையாமல் இருக்கிறது. இந்த சமயத்தில், ஜெயிலர் 2 படத்திற்கு தான் இரண்டு டிக்கெட்டுகளை இலவசமாக தரப்போவதாக திருப்பூர் கவுன்சிலர் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக கவுன்சிலர் சொன்ன செய்தி..!

திருப்பூர் அதிமுக கவுன்சிலரான திவ்யபாரதி, உங்கள் வீட்டில் மின்வெட்டு ஏற்பட்டால் செல்ஃபி எடுத்து அனுப்புங்கள், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசமாக தருகிறேன் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பை இவர் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து, மொத்தம் 340க்கும் மேற்பட்டோர் செல்ஃபி எடுத்து அனுப்பியதக கூறப்படுகிறது. இதில், தன்னுடைய வார்டில் இருந்து 55 பேரை செலக்ட் செய்து அந்த டிக்கெட்டுகளை வழங்கியதாக கூறப்படுகிறது. கூடவே, அந்த 55 பேரும், தலா ஒருவரை படத்திற்கு அழைத்து செல்லலாம். இதனால், இதன் மூலம் 110 பேருக்கு ஜெயிலர் 2 படத்தை ஃபீயாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிமுக கட்சியின் 55வது ஆண்டு விழாவையொட்டி இப்படியொரு முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ’சாப்பாட்டுக்காக பிச்சை எடுத்தேன்..’ உருக்கமாக பேசிய பிரபல பாடகர்! தெருக்களில் உலாவி வீடியோ

மின்வெட்டு பிரச்சனைகளின் மீது கவனம்!

தமிழ்நாடு முழுவதும், மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் தலைத்தூக்கி இருக்கிறது. ஆங்காங்கே மின்வெட்டு நிகழ்வதும் சகஜமாகி வருகிறது. இதனை கண்டித்து பொதுமக்கள், எதிர்கட்சிகள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இதன் மீது அனைவருக்கும் கவனம் ஈர்க்கும் வகையில் இந்த நூதன போராட்டம் இடம் பெற்றிருக்கிறது. அதிமுக கவுன்சிலரின் இந்த செயல், தற்போது மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

வெற்றிநடைப்போடும் ஜெயிலர் 2!

ஜெயிலர் 2 திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ.50 கோடி வசூலை கடந்தது. இதையடுத்து, தற்போது படம் வெளியாகி 8 நாள் வரை ஆகி விட்டது. இதையடுத்து இந்த படம் அக்டோபர் 22 ஆம் தேதியான இன்று வரை சுமார் ரூ.600 கோடியை நெருங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.375 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.

ரூ.1000 கோடியை எட்டுமா?

இந்தியாவை பொறுத்தவரை இந்தி மாெழியில் வெளியான பல படங்கள் ரூ.1000 கோடியை கடந்திருக்கின்றனர். தெலுங்கிலும், கன்னடத்திலும் கூட பல படங்கள் ரூ.1000 கோடி வசூலை தாண்டி விட்டன. ஆனால், என்னிலடங்கா கமர்ஷியல் படங்களை வழங்கி வரும் தமிழ் திரையுலகால் இன்னும் ஒரு பான் இந்திய ஹிட் கொடுக்க முடியவில்லையே என்பது தமிழ் ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்கிறது. இதனை, ஜெயிலர் 2 முடித்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட இந்தியாவின் சில இடங்களில் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால், இந்த படமும் ரூ.1000 கோடி அடிப்பதில் சந்தேககம் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | டிராப் ஆனதா வாடிவாசல்? உண்மையை உடைத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES