Explainer : ‘டாக்சிக்’ ஏன் ஒர்க்-அவுட் ஆகவில்லை? யாஷ், கீது மோகன்தாஸ் படத்தில் மிஸ் ஆன 8 விஷயங்கள்!
Toxic Film Mistakes : யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த டாக்சிக். இந்த படம் ரிலீஸாகி எதிர்பாராத வகையில் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
Toxic Film Mistakes : 2026ஆம் ஆண்டில் வெளியான படங்களில், இந்திய மக்களை அதிகம் எதிர்பார்க்க வைத்த படங்களில் ஒன்று, டாக்சிக். கேஜிஎஃப் நாயகன் யாஷ் நடிக்கிறார் என்பதை தாண்டி, படத்தின் இயக்குநர் கீது மோகன்தாஸ், இதற்கு முன்னர் விருதுகளை அள்ளிய படங்களை கொடுத்தவர் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியது. அதையும் தாண்டி இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி, ஹூமா குரேஷி என்று பான் இந்தியாவையே இறக்கி இருந்தனர். இத்தனையும் இருந்தும், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கான விமர்சனங்களை பெறவில்லை என்பதே நிதர்சனம். சரி, படம் சொதப்பியது எங்கே என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
படத்தின் கதை..!
1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும், கோவாவில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் தொடரும் காலகட்டத்துல கதை ஆரம்பிக்கிறது.இதில், யாஷ், ராயா என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். அவருடைய சகோதரியாக நயன்தாரா நடித்துள்ளார்.
பெற்றோரை கொன்றவங்களை பழிவாங்க வேண்டும் என்ற நாேக்கத்தோடு, ராயாவும் கங்காவும் போதைப்பொருள் கடத்தல் உலகத்திற்குள் செல்கிறார்கள். அதன் பிறகு ராயாவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் மொத்தக் கதையாக நகர்கிறது.
படத்தின் பாசிடிவான விஷயங்கள்..
முதலில் படத்தின் பெரிய பாசிடிவாக பார்க்க வேண்டியது, நடிகர் யாஷ்தான். அவருடைய ஸ்கிரீன் பிரசென்ஸ் ரசிகர்களை உண்மையாகவே ஆட்கொள்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும் சரி, மாஸ் காட்சிகளிலும் சரி, யாஷ் படத்தின் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது.
நயன்தாரா, கியாரா அத்வானி என இருவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை நன்றாகவே ஸ்கிரீனில் காண்பித்துள்ளனர். படத்தின் விஷுவல்ஸ், கேமரா வொர்க், 1940s மற்றும் 60s காலகட்ட கோவாவை காட்டிய விதம் எல்லாமே பிரம்மாண்டமாக இருக்கிறது. இத்துடன் ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் படத்துக்கு ஒரு பெரிய பலம்.
1.அளவுக்கு மீறிய சண்டை காட்சிகள்:
கேங்ஸ்டர் படம் என்றாலே ஆக்ஷன் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் டாக்சிக் படத்தில் சண்டைக்காட்சிகள் கொஞ்சம் ஓவராகவே இருப்பது தெரிகிறது.
சில காட்சிகள் அளவுக்கு மீறிய வன்முறையாகவும், சில காட்சிகள் தேவையில்லாமல் நீளமாக இருப்பது போலவும் தோன்றுகிறது.
முதல் பாதி ஓரளவுக்கு சுவாரஸ்யமாக சென்றாலும், இடைவேளைக்குப் பிறகு படம் கொஞ்சம் தடுமாற ஆரம்பிக்கிறது.
2.படத்தின் நீளம்:
குறிப்பாக இரண்டாம் பாதியின் நீளம் ஆடிியன்ஸின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. முக்கியமான ட்விஸ்ட் வரும் முன்பு கதை மெதுவாக நகர்வதால், ‘என்னதான் நடக்குது?’என்று நமக்கே ஒரு கட்டத்தில் நமக்கே தோன்றுகிறது.
3.கதாப்பாத்திரங்களின் வலிமையின்மை:
யாஷின் சகோதரியாக நயன்தாரா, காதலியாக கியாரா ஆகிய இருவரை தவிர, பிற இரண்டு முக்கிய கதாப்பாத்திரங்களாக எழுதப்பட்டிருக்கும் ஹூமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோரின் கேரக்டர்களும் மனதில் நிற்காத வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
படத்தின் நீளம் பெரிய பிரச்னையாக இருக்கிறது. படத்தை பார்த்தே சோர்வடைந்தது போன்ற உணர்வு, ஆடியன்ஸிற்கு வந்து விடுகிறது. இதனாலேயே, பல காட்சிகள் படத்தை மனதுடன் ஒட்ட விடாமல் செய்து விடுகிறது.
4.உச்சபட்ச ‘டாக்சிக்’ இதுதான்!
இந்திய படங்களின் மிது இருக்கும் ஒரு பெரிய குற்றச்சாட்டு, பெண்களை வெறும் காட்சிப்பொருளாக சினிமாவில் உபயோகின்றினர் என்பதுதான். பெண் இயக்குநர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்று நிரூபித்திருக்கிறார், கீது மோகன்தாஸ். இந்த படத்தில் கடைசி வரை, பெண் கதாப்பாத்திரங்ளுக்கு தேவையற்ற கவர்ச்சி கொடுப்பதும், அவர்களை ஆடியன்ஸின் பார்வைக்கு ஏற்றவாறு காண்பித்திருப்பதோடு, வயலன்ஸை விரும்பும் ஒரு மனிதனுக்கு கடைசி வரி ஹீரோயிச சாயம் பூசுவதுதான் இப்படத்தின் உச்சபட்ச டாக்ஸிக் ஆன விஷயமாக இருக்கிறது.
5.லாஜிக் மீறல்கள்..!
ஒரு படத்தை வெற்றிபெற செய்ய, சினிமாவில்தான் அதிக லாஜிக் வேண்டும், இயல்பு வாழ்க்கையில் அவ்வளவு லாஜிக் தேவையில்லை என்று கூறுவார்கள். அது, டாக்சிக் படத்தில் மிஸ் ஆகி இருக்கிறது.
6.எடிட்டிங்கில் பிரச்சனை:
டாக்சிக் படத்தை தியேட்டரில் அமர்ந்து பார்க்கும் போது, படத்தை எப்படியாவது நகர்த்த வேண்டும் என்கிற கட்டாயத்தின் பேரில் எடிட் செய்தார்களோ என்றே தோன்றுகிறது. இதன் காரணமாகவே கதையோட்டத்தை ரசிகர்களால் பிடிக்க முடியாமல் போகிறது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்கும் போது எப்படி ஒரு விஷயத்தை முன்கூட்டியோ கூறி விடுவார்களோ, அதைத்தான் இந்த படத்திலும் பின் தொடர்ந்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.
7.ஒன்றை சொல்லிவிட்டு..இன்னொன்றை காண்பித்துள்ளனர்!
டாக்சிக் படக்குழு இந்த படத்தை சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி என பல நகரங்களுக்கு சென்று ப்ரமோட் செய்தனர். அப்படி செய்யும் போதும், படத்தின் ட்ரெயிலர் மற்றும் டீசரை பார்க்கும் போதும் இப்படம் அதிக ஆக்ஷன் காட்சிகளுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தியேட்டரில் அதை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சண்டைக்காட்சிகளில் சில ரசிக்கும்படியாக இருந்தாலும், அதையே ஓவராக திணித்து, ட்ராமாவை இடையிடையே சொறுகி இருப்பதால் “இப்போது எதை ரசிப்பது?” என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
8.மொழி பிரச்சனை!
டாக்சிக் திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கப்பட்டது. இதன் காரணமாகவோ என்னவோ, படத்தில் பல இடங்களில் Lip-Sync இல்லாத உணர்வு படம் பார்ப்பவர்களுக்கு ஏற்பட்டது. இந்த தவறு படத்தின் ப்ரொடக்ஷன் பணிகளின் போது டப்பிங் சமயத்தில் நடந்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
9.கீது மோகன்தாஸ் சொல்வது என்ன?
நளதமயந்தி திரைப்படத்தின் மூலமாக தமிழில் நடிகையாக அறியப்படுபவர் கீது மோகன்தாஸ். இவர், டாக்சிக் திரைப்படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசுகையில், தான் ஒரு ஸ்கிரிப்டை எழுதினால், வேறு ஒன்றை படமாக எடுப்பேன் என்றும், படமாக எடுத்ததை வேறு ஒன்றாக எடிட் செய்வேன் என்றும் கூறியிருந்தார். இதனாலேயே தயாரிப்பாளர்களிடம் ஸ்கிரிப்டை கொடுக்கும் போது “இதுவே படமாக வராது” என்பதை தெளிவாக தெரிவிப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோவும் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது.
10.தேவையற்ற பஞ்ச் டைலாக்குகள்:
டாக்சிக் படத்தில் யாஷை மாசாக காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கு தேவையற்ற பல பஞ்ச் டைலாக்ஸ் படத்தில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த டைலாக்ஸை யாஷே கூட எழுதியிருக்கலாம் என ரசிகர்கள் அனுமானிக்கின்றனர்.
இறுதியாக..
'டாக்ஸிக்' திரைப்படம், ’யாஷ்’ என்கிற ஒருவரை மையமாகக் கொண்ட ஒரு ஸ்டைலான சினிமா அனுபவத்தை வழங்கினாலும், அதன் உருவாக்கம் பார்வையாளர்களுக்கு ஒரு விநோதமான அனுபவத்தை கொடுத்தூள்ளது. ஒரு சில ரசிகர்கள் படத்தின் சண்டைக் காட்சிகள், பிரம்மாண்டமான விஷுவல்கள் மற்றும் கற்பனைக்கு எட்டாத காட்சிகளை ரசிக்க, பிறர் அதன் படத்தொகுப்பு, தொடர்ச்சி மற்றும் கதை சொல்லும் விதம் ஆகியவற்றை சீறற்றதாக இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.