வேலைத்தேடி வெளிநாட்டிற்கு போன பெண்..மதுக்கடை ஓனருக்கு விற்கப்பட்ட கொடூரம்!
போர்ச்சுகல் நாட்டில், அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி, ஒரு இந்திய பெண் மதுக்கடை ஓனருக்கு விற்கப்பட்ட கொடூரம் அரங்கேறி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் பலர், தங்களுக்கு அதிக சம்பளம் கிடைக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு தான் வேலைக்கு செல்கின்றனர். ஆனால் அங்கு அவர்கள் பல இடங்களில் தவறான நபர்களின் கைகளில் சிக்கி விபரீத விஷயங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அப்படி இந்தியாவை சேர்ந்த ஒரு பெண், பெரும் ஆபத்தில் சிக்கி சித்திரவதைக்கு உள்ளானது அதிர வைத்துள்ளது.
சித்திரவதைக்கு ஆளான பெண்!
இந்தியாவின் நாக்பூரை சேர்ந்த 28வயதான திருமணமான பெண்ணை அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, போர்ச்சுகலில் இருக்கும் மதுபான கடைக்கு விற்கப்பட்டு உத்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஒரு வழியாக அந்த கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்து இந்தியா வந்திருக்கும் நிலையில் புனே போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
Instagram மூலம் சிக்கினார்..
பிகாம் படித்த பட்டதாரியான அந்த பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புனேவை சேர்ந்த 'We Migrate' எனும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் போர்ச்சுக்கல் நாட்டில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கேஷியர் வேலை இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு அதற்கு மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாகவும் தினசரி 8 மணி நேர வேலை என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனை நம்பி அந்தப் பெண் விசாவிற்காகவும் பிற ஆவணங்களுக்காகவும் அந்த நிறுவனத்திலும் சுமார் ரூ.11 லட்சம் வரை பணம் செலுத்தியிருக்கிறார்.
இந்தப் பெண் கடந்த மே மாதம் போர்ச்சுகல் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அந்தப் பெண்ணை அங்கிருக்கும் உள்ளூர் ஏஜெண்டுகள் வரவேற்று அழைத்துச் சென்றதோடு, உபசரித்துள்ளனர். ஆனால் அவரை சொன்னபடி வேலைக்கு அனுப்பாமல் ஒரு அறைக்குள் அடைத்து வைத்து அவருடைய பாஸ்போர்ட்கள் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். பாஸ்போர்ட்டை திருப்பி தர வேண்டும் என்றால் மேலும் 40000 தரவேண்டும் என்று கூறி மிரட்டி இருக்கின்றனர். இதன் பின்னர் புனே கன்சல்டன்சி நிறுவனம் தங்களை இவருக்கு விற்று விட்டதாக கூறியதோடு, அங்கிருந்தவர்கள் அவரே ஒரு மதுபான கடை உரிமையாளரிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். அந்தப் பெண் அங்கு காலை 8:00 மணி முதல் இரவு 11 மணி வரை கட்டாயத் தொழிலாளியாக வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளார், பின்னர் அவரை பாலியல் தொழிலில் ஈடுபடக் கோரியும் கடுமையான உடல் மற்றும் மன சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.
இந்தியாவிற்கு தப்பித்து வந்தது எப்படி?
பல சித்திரவதைக்கு மத்தியிலும் அந்த பெண் சாதுரியமாக செயல்பட்டு கடந்த ஜூன் 29ஆம் தேதி அங்கிருந்த நபர்களிடமிருந்து எப்படியோ தப்பித்து லிஸ்ட் லிஸ்பன் மற்றும் மாட்ரிட் வழியாக தோகா சென்று அங்கிருந்து புதுடெல்லிக்கு பாதுகாப்பாக வந்தடைந்துள்ளார். இந்தியாவிற்கு வந்த பிறகும் அந்த பெண்ணிடம் இருந்து சுமார் மூன்று லட்சத்தை கேட்டு அந்த கும்பல் அவரை மிரட்டி உள்ளது, கூடவே அவருடைய கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
விசாரணை..
அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் புனேவை சேர்ந்த ஏஜெண்டுகள் மற்றும் போர்ச்சுகலில் இயங்கும் கும்பல் என மொத்தம் ஏழு பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் ஏமாற்றுதல், ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்