கடிப்பிடித்ததால் வந்த விணை! மனைவியின் மார்பு எலும்புகளை உடைத்த கணவன்..
சீனாவின் ஜிகான்சு எனும் பகுதியை சேர்ந்த ஒருவர், தன் மனைவியை ஆசையாக கட்டிப்பிடித்துள்ளார். ஆனால், கட்டிப்பிடித்த பின்புதான் தெரிந்தது, தன் மனைவியின் எலும்புகளை தான் உடைத்திருக்கிறோம் என்று. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
நம் மீது ஒருவருக்கு அதிக அன்பு அல்லது காதல் வரும் போது அவர்களை கட்டிப்பிடிப்போம், தேவைப்பட்டால் முத்தமிடுவோம். ஒரு சில சமயங்களில் அந்த அன்பு அதிகரிக்கும் போது நம்மவரை இருக்கமாக கட்டியணைப்போம். அப்படி ஒரு கணவர் கட்டியணைக்க போய், அது பெரிய பிரச்சனையில் முடிந்துள்ளது.
கட்டிப்பிடித்த கணவர்..!
சீனாவை சேர்ந்த அந்த நபரின் பெயர், வாங் என கூறப்படுகிறது. இவரது மனைவியும் இவரும் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், அவரது மனைவி தனக்கு குளிராக இருப்பதாக தன் கணவரிடம் தெரிவிக்கிறார். அதற்கு அவருடைய கணவர், ஓடி வந்து கட்டிப்பிடிக்கிறார். ஆனால், அப்படி கட்டிப்பிடித்ததால் அந்த பெண்ணின் மார்பெலும்பு உடைந்திருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாங், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி இரவு முழுவதும் தன் மனைவி வலியால் அவஸ்தை பட்டதாகவும் அதன் பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் கூறியிருக்கிறார். மேலும், மார்பை ct ஸ்கேன் எடுத்ததில், அவருக்கு 5 விலா எலும்புகள் உடைந்து விட்டதாகவும், உடலின் வேறு ஒரு பகுதியில் Hairline fracture ஆகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மருத்துவர்கள், இதற்கு அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லை என்றும், மருந்து மாத்திரைகள் மூலமாகவே குணமாக்கி விடலாம் என தெரிவித்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து அந்த பெண், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் 5 நாட்கள் கழித்து மருத்துவர்கள் அவரை மீண்டும் வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறியிருக்கின்றனர்.
எதனால் எலும்பு உடைந்தது?
வாங்கின் மனைவிக்கு Osteoporosis எனும் நோய் இருந்ததன் காரணமாகத்தான் இந்த எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறியிருக்கிறார். இதன் அர்த்தம், எலும்புப்புரை அல்லது எலும்புத்த்துளை நோய் ஆகும். இது, எலும்புகள் தங்கள் அடர்த்தியையும் வலிமையையும் இழைந்து, மிகவும் பலவீனமாகவும் உடையக்கூடியதாகவும் மாறும் ஒரு மருத்துவ நிலையாக இருக்கிறது.
இது, அறிகுறிகளை வெளியில் காட்டாத அமைதியான நோயாக கருதப்படுகிறது. வயது அதிகரிப்பு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு, கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு காரணமாக இந்த நோய் வருகிறது.
பாதிக்கப்பட்ட இந்த பெண்ணிற்கு 45 முதல் 50 கிலோ வரைதான் உடல் எடையே இருக்கிறதாம். அவர் டயட் இருக்கிறேன் எனும் பெயரில், இரவு உணவை பல முறை தவிர்த்திருக்கிறார். மேலும் ஒரு நாளைக்கு ஒரு கப் காபியை ஆவது அவர் குடித்திருக்கிறார்.
மேலும், வெளியில் பெரிதாக செல்லாத அந்த பெண், அவர் சூர்ய ஒளியில் பெரிதாக இல்லாததால் வைட்டமின் டி கிடைக்காமல் போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தம்மாம் விமான நிலையத்தில் திடீர் தாக்குதல்... இந்தியர் உயிரிழப்பு -என்ன நடந்தது?