SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

ட்ரம்பின் ஆதரவாளராகவும், வெள்ளை மாளிகையின் ஊடக தொடர்பாளராகவும் இருப்பவர், கேரலைன் லீவிட். இவர், சமீபத்தில் கிறிஸ்தவர்களிடம் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து பேசியது வைரலாகி வருகிறது.

Written By Yuvashree M
Published: Nov 22, 2026, 16:39 IST | Updated: Nov 22, 2026, 16:47 IST
Image Credit: Karoline Leavitt | X Page
Join

அமெரிக்காவில், சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசாங்கமே பல்வேறு சமயங்களில் பேசும் விஷயங்கள், அந்த குற்றங்களை ஆதரிப்பது போன்ற உணர்வை தருகின்றன. அப்படி சர்ச்சைக்குறிய வகையில், தற்போது ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் பேசியிருக்கிறார்.

கிறிஸ்தவர்களை விட இஸ்லாமியர்கள் எண்ணிக்கை குறைந்து விடுமா..?

வாஷிங்டன் போஸ்ட், சமீபத்தில் ஒரு தகவலை செய்தியாக வெளியிட்டிருந்தது. அதாவது, 2035ஆம் ஆண்டிற்குள், கிறிஸ்தவர்களை விட இஸ்லாமியர்கள் அதிகமாகி விடுவார்கள் என்பதுதான் அந்த செய்தி. அந்த செய்தியை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட கேரலின், “திருமணம் செய்து கொள்ளுங்கள், நிறைய குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள், அவர்களை தேவாலயத்தில் வளருங்கள், மற்றும் அமெரிக்காவை நேசிக்க கற்றுக்கொடுங்கள்”

Pew எனும் அராய்ச்சி மையம் தற்போது ஒரு ஆய்வை வெளியிட்டிருக்கிறது. அதில்தான் இப்படியொரு தகவல் வெளியாகி இருக்கிறது. உலகளவில், இஸ்லாமியர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை 2035ஆம் ஆண்டிற்குள், 2.57 பில்லியனை எட்டும் என்ரும், கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை 2.52 பில்லியன் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிறிஸ்தவர்களை ஒப்பிடும் போது, இஸ்லாமியர்கள் 2.02 பில்லியன் அதிகமான மக்கள் தொகையுடன் இருப்பார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதுதான், தற்போது விவாதத்தை கிளப்பி இருக்கிறது. இந்த ஆய்வை பொருத்தவரை இரு மதங்களும் பெருகும் என்றாலும், இஸ்லாமிய மதம் இன்னும் வேகமாக பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ”என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா..?” நாடாளுமன்றத்தில் காதலிக்கு ப்ரப்போஸ் செய்த அமைச்சர்!

அதே போல, இஸ்லாமிய பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் விகிதம் பெருகியிருப்பதாலும் இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆய்வறிக்கையில், ஒரு இஸ்லாமிய பெண், சராசரியாக 3.1 குழந்தைகள் வரை 2020-2025 ஆண்டுகளில் பெற்றெடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ பெண்கள், 2.5 குழந்தைகளை சராசரியாக அதே வருட கணக்கில் பெற்றெடுத்துள்ளனர்.

அடுத்த 50 ஆண்டுகளில் என்ன ஆகும்..?

2020 முதல் 2070 ஆண்டுகளில், இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 1.6 பில்லியன் அதிகரித்துக்கும் என்றும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 792 மில்லியனாக இருக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. 2070ஆம் ஆண்டுக்குள், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 3.6 பில்லியன் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இனப்படுகொலை: ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு கிடைத்த நீதி.. காசா மக்களுக்கு பொருந்துமா?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES