• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /Explained : 5 மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட நேபாள வெள்ளம்! பாதிப்பை தவிர்க்காதது ஏன்?

Explained : 5 மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட நேபாள வெள்ளம்! பாதிப்பை தவிர்க்காதது ஏன்?

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. இதையடுத்து, இந்த வெள்ளம் குறித்து 5 மாதங்களுக்கு முன்னரே வார்னிங் கொடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

Written ByYuvashree M
Published: Aug 30, 2026, 19:17 IST|Updated: Aug 30, 2026, 19:24 IST
joinshare
Explained : 5 மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட நேபாள வெள்ளம்! பாதிப்பை தவிர்க்காதது ஏன்?
Image Credit: நேபாள வெள்ளம் | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

2

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

3

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

4

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

5

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மத்திய நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, பல ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல, வெள்ளத்தில் மாயமானோரை மீட்கும் பணி, இன்னும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. கன நேரத்தில் இத்தனை ஆயிரம் வாழ்க்கையை மாற்றிய இந்த வெள்ளப்பெருக்கு குறித்த வார்னிங், 5 மாதங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஐந்து மாதங்களுக்கு முன்பே வந்த வார்னிங்!

ஐந்து மாதங்களுக்கு முன்பாக, HKH எனும் இந்து குஷ் இமயமலை மக்களின் சார்பாக செயல்படும் ஒரு அரசு சார்பான அறிவு மற்றும் கற்றல் மையம், இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது. இந்த நூற்றாண்டு தொடங்கியது முதலே, பனி இழப்பு விகிதமானது இரட்டிப்பாகி இருப்பதாகவும், பனி ஆறுகள் மிக வேகமாக உருகி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் பிராந்திய உறுப்பினர்களை கொண்ட ICIMOD எனப்படும் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம், காத்மாண்டுவை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இது, தனது இரண்டு அறிக்கைகளிலும், கடந்த 1975ஆம் ஆண்டு முதலாக 27 மீட்டர் வரையிலான பனியாற்றுப்படியின் அடர்த்தி குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த அறிக்கைகளில், ‘ஆசியாவின் நீர் கோபுரங்கள்’ என அழைக்கப்படும் இடங்களுக்கு கீழ் நிலையில் வாழும் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் மக்களின் வாழ்வாதாரம் இந்த பனிமலை உருகுதலால் பாதிப்படையும் என்கிற அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்டும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில், 1990 முதல் 2020 வரை HKH பனிச்சருகுகள் 12 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து விட்டதாகவும்

மக்களின் வாழ்வாதாரம் குறித்த குறிப்பேடு..!

அந்த அறிக்கைகளில், ‘ஆசியாவின் நீர் கோபுரங்கள்’ என அழைக்கப்படும் இடங்களுக்கு கீழ் நிலையில் வாழும் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் மக்களின் வாழ்வாதாரம் இந்த பனிமலை உருகுதலால் பாதிப்படையும் என்கிற அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்டும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ICIMODன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில், 1990-2020க்கும் இடையிலான காலங்களில், HKH பனிப்பாறைகள் அவற்றின் மொத்த பரப்பளவில், சுமார் 12 சதவீதத்தையும், மதிப்பிடப்பட்டிருக்கும் பனி இருப்பில் 9 சதவீதத்தையும் இழந்திருப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு அறிக்கையில், கண்காணிக்கப்பட்டிருக்கும் 38 பனிப்பாறைகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்து, 2000ம் ஆண்டிலிருந்து பனிப்பாறைசிதைவு இரு மடங்காக ஆகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது, இமயமலையின் பனிக்கோளத்தின் சில பகுதிகளில், மீள முடியாத அளவிற்கு நெருக்கடியான சூழலை உருவாக்கக்கூடும் என்றும், அதற்கான அறிகுறி தெரிவதாகவும் அந்த ஆய்வு கண்டறிந்திருந்தது.

அந்த அறிக்கையில், காரகோரம், சிக்கிம், ஜான்ஸ்கர் மற்றும் பூட்டான் உள்ளிட்ட பெரும்பகுதிகளில் பல இடங்களில் இன்னும் கண்காணிக்கப்படாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. கண்காணிக்கப்பட்டிருக்கும் 38 பனிப்பாறைகளில், ஏழு மட்டுமே WGMS எனப்படும் உலக பணிப்பாறை கண்காணிப்பு சேவையின் அளவுகோளின் தரநிலைகளை பூர்த்தி செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

வெள்ளப்பெருக்குக்கு என்ன காரணம்?

பல நூற்றுக்கணக்கானோர் நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதை அடுத்து, அதற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து தற்போது பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயரமான இடத்திலிருந்து உருவான பனிப்பாறைச்சரிவு, இந்த வெள்ளப்பெருக்கை தூண்டியிருக்குமா? என்பதை ICIMOD ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலையின்படி, போதே கோஷி எனும் ஆற்றின் துணை நதியான லெண்டே கோலாவிற்குள் பெருமளவிலான பனி மற்றும் பாறைசிதல்கள் நுழைந்து, அது நீர், வண்டல்மண் மற்றும் பாறைகளை கீழ்நோக்கி அடித்துச்சென்றதால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.  

ICIMODன் மூத்த நிபுணர் ஒருவர் இது குறித்து பேசுகையில், பனிப்போர்வைகள் குறைவதாலும், பனியாறுகள் பின்வாங்குவதாலும், அந்த இடங்களில் அதிக பாறைகள் நிரம்புவதாலும் வெப்பம் உரிஞ்சப்படுவதில்லை என கூறியிருக்கிறார். இதற்கான காரணம் இன்னும் அறியப்பட வேண்டும் என கூறியிருக்கும் அவர், பனிப்போர்வைகள் குறைந்ததற்கு காரணம் இதுதான் என்பதை சுட்டிக்காட்டினார்.

உயிரிழப்புகள்:

நேபாளத்தில் உயிரிழந்தவர்கள், உள்ளூர் வாசிகள் மட்டும் கிடையாது. அங்கு டூர் சென்றவர்களான இந்தியர்கள், சீனர்கள் என பல பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தேதியின் படி, சுமார் 768 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த பேரிடரில் சிக்கியிருக்கும் சுமார் 2,500க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இதில் பல ஆயிரம் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்த மாவட்டங்களில், 227 வெளிநாட்டினர் உள்அட, 8,186க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றி இருப்பதாக நேபாள பேரிடர் மீட்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

மீண்டும் வெள்ளப்பெருக்கு?

போடே கோஷி ஆற்றில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால், நேபாள அரசு புதிய எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், ஆற்றில் வெள்ள ஓட்டம் அதிகரித்திருப்பதாகவும் நேபாள தேசிய பேரிடர் மீட்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்த வெள்ளப்பெருக்கில் இருந்து, 108 இந்தியர்கள் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 275 இந்தியர்கள் காணாமல் போயிருக்கின்றனர்.

பாதிப்புகள்:

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக, பல்வேறு கிராமங்கள் நேபாளத்தில் அழிந்துள்ளன. அதே போல முக்கிய அணைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமாகி இருக்கின்றன. நீர்மின் நிலையங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன.

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer