திபெத் - நேபாளம் எல்லையில் கடந்த புதன்கிழமை காலை 9 மணியளவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி நேபாள் நாட்டில் 750 பேரும், திபெத்தில் 16 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாறைகள், பனிக்கட்டிகள், மண், இடிபாடுகள் என அனைத்தும் சேர்ந்த பெருவெள்ளம் கட்டடங்களையும், பாலங்களையும், மின் நிலையங்களையும் என நேபாளின் உட்கட்டமைப்பையே பதம் பார்த்துள்ளன. நேபாளத்தில் இன்னும் 2,498 பேரை காணவில்லை. திபெத்தின் கைராங் கவுண்டியில் மட்டும் 546 பேரை காணவில்லை என சமீபத்தில் தகவல்கள் கூறுகின்றன.
கண் இமைக்கும் நொடியில் ஆயிரக்கணக்கானோரின் உயிரை பறித்த இந்த பேரிடரில், 47 வயது ஆசிரியர் ஒருவரின் ஒரு நிமிட சாதுர்யத்தால் 1,643 குழந்தைகளின் உயிரும் காப்பற்றப்பட்டுள்ளது என சொன்னால் நம்பமுடிகிறதா...? ஆனால் அதுதான் உண்மை.
நேபாளின் பெருவெள்ளம் கோர தாண்டவமாடிய நுவகோட் மாவட்டத்தின் திரிசூலி பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர்தான் ராஜேந்திர தாவாடி. ஆங்கில பாடம் நடத்தும் இவர் வெள்ளப்பெருக்கு சம்பவத்தின் போது பள்ளியில்தான் இருந்திருக்கிறார்.
பள்ளியில் உள்ள அனைத்து பிள்ளைகளின் உயிருக்கும் பொறுப்பேற்ற அந்த துணிச்சலான ஆசிரியர் ஒரு முக்கிய முடிவை உடனடியாக அப்போது எடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் வெள்ளப்பெருக்கு பள்ளியை பாதிக்காது என நினைத்திருக்கிறார்.
மூன்று மாடிகள் கொண்ட அந்த பள்ளிக் கட்டடம் கான்கிரீட்டால் கட்டப்பட்டது. ஆற்றின் மட்டத்தில் இருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில்தான் பள்ளி அமைந்திருந்தது. மேலும் அந்த கிராமத்தை கிழக்கு கரையுடன் இணைக்கும் எஃகுப் பாலமுமே அதே மட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.
அப்போது பெற்றோர் ஒருவர் தாவாடிக்கு அவசரநிலையை புரியவைத்து தகவல் சொல்லியுள்ளார். நீரின் அளவு வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார். அன்று காலை 9.20 மணியளவில் ஒரு நண்பரும் ராஜேந்திர தாவாடிக்கு அழைத்து தகவல் சொல்லியுள்ளார். "ஆற்று வெள்ளம் மொத்தமாக கிராமத்தையே வாரிச்சுருட்டி கொண்டுபோய்விட்டது என கூறினார், என்னை ஓடிவிடும்படியும் கூறினார்" என அதுகுறித்து ராஜேந்திர தாவாடி தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் உடனே ராஜேந்திர தாவாடி பள்ளி மணியை அடித்து, மாணவர்கள் அனைவரையும் வகுப்பறையில் இருந்து வெளியேற்றும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். ராஜேந்திர தாவாடி உடனே அவரது பள்ளி பேருந்து ஓட்டுநர்களை போன் செய்து அழைத்துள்ளார்.
How a headmaster, Rajendra Dadabi, saved the lives of 1643 kids through his decisive leadership and presence of mind in a school in Trishuli, Nepal devastated by the flash floods! 🙏pic.twitter.com/cQs7lnXPhA
— Keh Ke Peheno (@coolfunnytshirt) August 30, 2026
ஆனால் ஒருவரை மட்டும் அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை. மற்ற அனைவரையும் பேருந்துகளை திருப்பிவிடுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரால் தொடர்புகொள்ள முடியாத அந்த ஒரு பேருந்து பாலத்தைக் கடந்து செல்வதை அவர் பார்த்திருக்கிறார்.
அதற்கு குழந்தைகள் தங்களுக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்தனர். பயத்தில் சிறுமி ஒருவருக்கு வலிப்பே வந்துவிட்டது. அவரை மேடான பகுதிக்கு மோட்டார் சைக்கிள் மூலம் அழைத்துச் சென்றனர். மற்ற அனைவரும் காலநடையாகவே தப்பித்து ஓடி மேடான பகுதிக்கு தப்பித்தனர். தாவடி அவர்களை பின்தொடர்ந்து ஓடினார்.
பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளி கட்டடத்தில் இருந்து தப்பித்துச் சென்று மேடான பகுதியில் இருந்த போதி மரத்திற்கு பின்பகுதிக்குச் சென்றுவிட்டனர். இதனால் வெள்ளத்தில் பள்ளி கட்டடம் சிக்கி சின்னாபின்னமானாலும் மாணவர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.
ராஜேந்திர தாவடியின் உடனடி நடவடிக்கையால் 1,643 மாணவர்களின் உயிர்களும் காப்பாற்றப்பட்டன. ஆற்றுக்கு பின்புறத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சாண்டோஸ் பரியார் எனும் வரலாற்று ஆசிரியர் காலை உணவு சமைத்துக்கொண்டிருந்தபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிவந்தார். அதேபோல், பள்ளி பணியாளர் சுல்தான் லாமா என்பவர் கதவை மூடிவிட்டு திரும்பும்போது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அவரை உள்ளூர் மக்கள் ஹீரோவாக பார்க்கிறார்கள். ஆனால் அவரோ மிகுந்த சோகத்தில் இருந்தார். பள்ளி இருந்த இடம் தற்போது சேறும் சகதியால் நிரம்பியிருக்கிறதை கண்டு வருத்தமடைந்தார். நேபாளில் நிகழ்ந்த இந்த பேரிடர் உலகையே பேரச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.