• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /2 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு... இவர்களின் கண்டுபிடிப்பு என்ன?

2 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு... இவர்களின் கண்டுபிடிப்பு என்ன?

2026 Nobel Prize For Chemistry: 2026ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் ஹென்றி பி.காகன் மற்றும் கென்சோ சோய் ஆகிய இருவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Written BySudharsan G
Published: Oct 07, 2026, 03:58 PM IST|Updated: Oct 07, 2026, 04:39 PM IST
joinshare
2 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு... இவர்களின் கண்டுபிடிப்பு என்ன?
Image Credit: 2026 Nobel Prize For Chemistry | Image Source : X/@NobelPrize

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
5 மாடி கட்டடம் இடிந்து விபத்து... இடிபாடுகளில் சிக்கிய பொதுமக்கள் - டெல்லியில் மீண்டும் ஷாக்

5 மாடி கட்டடம் இடிந்து விபத்து... இடிபாடுகளில் சிக்கிய பொதுமக்கள் - டெல்லியில் மீண்டும் ஷாக்

2

Life Certificate: அக்டோபரில் எந்தெந்த ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்? முக்கிய அப்டேட்!

3

2 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு... இவர்களின் கண்டுபிடிப்பு என்ன?

4

புதுச்சேரி மக்களே கவனம்... அக்டோபர் 8-ல் இந்த பகுதிகளில் மின்தடை -முழு பட்டியல்

5

சாமியார் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடி வாங்கினாரா விராட் கோலி...? உண்மை என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2026 Nobel Prize For Chemistry: 2026ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முன்தினம் (அக்.5) முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு துறை சார்ந்த பெரும் பங்களிப்பாளருக்கு விருது அறிவிக்கப்படும். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் குழுவினர் விருதுகளை அறிவிப்பார்கள்.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று முன்தினமும் (அக். 5); இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்றும் (அக். 6); வேதியியலுக்கான நோபல் பரிசு இன்றும் (அக். 7) அறிவிக்கப்பட்டன. நாளை (அக். 8) இலக்கியத்திற்கான நோபல் பரிசும், நாளை மறுதினம் (அக். 9) அமைதிக்கான நோபல் பரிசும், அக். 10ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட இருக்கின்றன.

மேலும் படிக்க | Explained : 2 விஷ ஊசி போட்டும் சாகாத பெண்..இப்போது உடல்நிலை எப்படி இருக்கு?

வேதியியலுக்கான நோபல் பரிசு

அந்த வகையில், 2026ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹென்றி பி.காகன் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கென்சோ சோய் ஆகிய இருவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமச்சீரற்ற கரிமத் தொகுப்பில் நேரியல் அல்லாத விளைவுகள், தன்வினையூக்கத்தை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING NEWS The Royal Swedish Academy of Sciences has decided to award the 2026 #NobelPrize in Chemistry to Henri B. Kagan and Kenso Soai “for the discovery of non-linear effects and autocatalysis in asymmetric organic synthesis.” https://t.co/nH090ql1Xc

— The Nobel Prize (@NobelPrize) October 7, 2026

வேதியியலுக்கான நோபல் குழுவின் தலைவர் ஹெய்னர் லிங்கே கூறுகையில், 
"இந்த ஆண்டுக்கான பரிசு அடிப்படை வேதியியலுக்கானது ஆகும். பல மூலக்கூறுகள் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. அவை கைகளை போல்... அவை ஒன்றுக்கொன்று கண்ணாடிப் பிம்பங்கள், பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தோன்றும். ஆனால் அவை முற்றிலும் ஒன்றானது இல்லை.

என்னால் என் கைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க முடியாது. அத்தகைய மூலக்கூறுகள் Chiral என்றழைக்கப்படும், அதாவது கிரேக்க மொழியில் இதன் அர்த்தம் 'கை' ஆகும்" என்றார்.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு

நேற்று முன்தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது. நரம்பு செல்களின் செயல்பாட்டை இயக்கவும், நிறுத்தவும், மூளை பயன்டுத்தும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்த அமெரிக்காவின் கார்ல் டீசெரோத் (54), ஜெர்மனியின் பீட்டர் ஹெகமன் (71), ஜெர்மனியின் ஜார்ஜ் நாகல் (73) ஆகியோர் இந்தாண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெறுகின்றனர்.

மேலும் படிக்க | உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நியூட்ரினோ ஆய்வு! இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற பிரான்சிஸ் ஹால்சன்

இயற்பியலுக்கான நோபல் பரிசு

நேற்றைய தினம் (அக். 6) இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஹேல்சனுக்கு அறிவிக்கப்பட்டது. ஜஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நோபல் பரிசு வழங்கப்படுவது ஏன்?

ஸ்வீடன் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஆல்பிரட் நோபலின் உயிலில் நிறுவப்பட்ட அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான சாதனைகளுக்கான பரிசுகள் 1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. உலகப்போர் காரணமாக சில ஆண்டுகள் மட்டும் வழங்கப்படவில்லை.

தொழில் ரீதியாக ஆல்பிரட் நோபலும் ஒரு வேதியியலாளர் ஆவார். ஸ்வீடன் மத்திய வங்கியின் நிதியுதவியுடன் பிற்காலத்தில் பொருளாதாரத்திற்கும் நோபல் பரிசு சேர்க்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் ஸ்வீடனில் அறிவிக்கப்படாது. நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அவ்விருது அறிவிக்கப்படும்.

எப்போது விருது வழங்கப்படும்?

ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10ஆம் தேதி அன்று, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில், ஸ்வீடன் மன்னர் 16ஆம் கார்ல் குஸ்தாஃப்பிடம் இருந்து விருதாளர்கள் தங்கள் பதக்கங்களைப் பெறுவார்கள்.

ரொக்கப்பரிசு எவ்வளவு?

நோபால் பரிசுடன் 12 மில்லியன் ஸ்வீடன் குரோன்களை ரொக்கப்பரிசும் விருதாளர்களுக்கு வழங்கப்படும். அமெரிக்க டாலர் மதிப்பில் 1.2 மில்லியனாகும், இந்திய ரூபாய் மதிப்பில் 11.52 கோடியாகும். தற்போது வேதியியலுக்கான நோபல் பரிசை 2 பேர் வென்றிருக்கும் நிலையில், இந்த பரிசுத்தொகை சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படும்.

மேலும் படிக்க | சவுதிக்கு எதிராக ஹூதிகளின் மிகப்பெரிய தாக்குதல்.. அமெரிக்க கப்பல்களை குறிவைக்கும் ஈரான்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Awards