SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சவுதி சட்டம்: பின்பற்ற வேண்டியவை என்னென்ன? எதற்கெல்லாம் தடை.. Explained

Saudi Arabia Laws Explained: சவுதி அரேபியாவில் அமலில் சட்டங்கள் என்ன, விதிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். அண்மையில், வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்நாட்டின் சட்டம் குறித்து வெளிநாட்டினர் மத்தியில் கவலையை எழுப்பியுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

Written By Umabarkavi K
Published: Oct 23, 2026, 03:05 PM IST | Updated: Oct 23, 2026, 03:25 PM IST
Join

Saudi Arabia Laws Explained: சவுதி அரேபியாவில் உள்ள சட்டங்கள் குறித்து உலகளவில் மீண்டும் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில், சவுதி அரேபியாவில்  வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மெக்காவில் உள்ள மசூதியில் தகாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு  முன்கூட்டியே தெரிவிக்காமல் மரண தண்டனை விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், அந்நாட்டின் கடுமையான விதிகள் மீண்டும் பேசும்பொருளாகியுள்ளன.

சவுதி அரேபியா சட்டங்கள்

உலக நாடுகளில் கடுமையான சட்டங்கள் பெயர்ப்போனது சவுதி அரேபியா. சௌதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், அங்கு இஸ்லாமிய சட்டம் (ஷரியா) கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. சவுதி அரேபியாவில் பல்வேறு விதிகள், கடுமையான சட்டங்களை அந்நாடு செயல்படுத்தி வருகிறது. இது ஒருபக்கம் குற்றங்களை குறைவாக்க உதவினாலும், வெளிநாட்டினருக்கு பெரும் சிக்கல்களை கொடுத்து வருகிறது. ஆடை முதல்  மத வழிபாடு தளங்கள் வரை அனைத்துக்குமே சில சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.

சவுதியில் சட்டங்களை மீறினால், குற்றத்தின் தன்மையை பொறுத்து, கைது, அபராதம், சிறை, நாடு கடத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயண எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.  இதில் , பலருக்கு மரண தண்டனை வரை விதிக்கப்பட்டுள்ளது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் கூற்றுப்படி, 2026ஆம் ஆண்டில் மட்டும் 100 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  

மேலும் படிக்க: தம்மாம் விமான நிலையத்தில் திடீர் தாக்குதல்... இந்தியர் உயிரிழப்பு -என்ன நடந்தது?

இவர்களில் பலர் போதைப் பொருள் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.  மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் சவுதி அரேபியா முன்னிலையில் உள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  கொலை, பயங்கரவாதம், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 81 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்படியாக கடுமையாக அங்கு சட்டங்கள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள சட்டங்கள் குறித்து பார்ப்போம்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சட்ட வழிகாட்டுதல்கள்

சவுதி அரேபியாவில் மொத்தம் 27,47,551 இந்திய தொழிலாளர்கள் உள்ளனர். அங்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி,

ஆடைக்கட்டுப்பாடு

சவுதி அரேபியாவில் முழு உடலையும் மறைக்கும் கருப்பு அபாயா அணிய வேண்டும். ஆனால், இது வெளிநாட்டுப் பெண்களுக்கு கட்டாயமில்லை. பொது இடங்களில் ஆண்கள், பெண்கள் தோள்கள், முழங்கால்களளை மறைக்கும்படியான ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. மசூதிகள் அல்லது பாரம்பரிய இடங்களுக்கு செல்லும்போது நீண்ட கால்சட்டைகளும் முழுக்கை ஆடைகளும் அணிவது அவசியமாகும். பெண்கள் sleeveless, shorts போன்றவற்றை அணிய முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.  பொது இடங்களில் இழிவான வார்த்தைகள், ஆபாசமான படங்கள் அல்லது குறியீடுகள் அடங்கிய ஆடைகளையும் பெண்கள், ஆண்கள் அணிவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு சிறை முதல் அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும் படிக்க: Explained : இனிமே போராட்டம் பண்ணக்கூடாது! சிறுவர்கள் போராடினாலும் பெற்றோருக்கு தண்டனை..

மதம் சார்ந்த விதிகள்

சவுதி அரேபியாவில்  இஸ்லாம் அல்லாத  வேறு எந்த மதத்தின் வழிபாடுகளையும பொதுவெளியில் கடைபிடிக்க கூடாது. வெளிநாட்டினர் தங்கள் வீடுகளில் அல்லது தனிப்பட்ட முறையில் தங்களின் மதத்தை பின்பற்ற அனுமதிக்கப்படுகின்றனர், இருப்பினும் பொதுவெளியில் தங்களது மத அடையாளங்களை வெளிப்படையாகக் காட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். சௌதியில் குர்ஆன் மீது எந்த விமர்சனத்தையும் செய்யக் கூடாது. மீறினால் 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்டவை

ஷரியா சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை ஒரு குற்றமாகும். இதற்கு கசையடி முதல் மரணத் தண்டனை வரை பல தண்டனைகள் விதிக்கப்படும். ஆனால், திருமண உறவில் நடக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை இச்சட்டம் ஒரு குற்றமாக கருதுவதில்லை. பொதுவாக பாலியல் தொந்தரவுக்கு  2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை கூறுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. 

இப்படியாக சவுதி அரேபியாவில் பல சட்டங்கள் அமலில் உள்ளன. எனவே, வேலை மற்றும் படிப்பிற்காக வெளிநாடு செல்வோர் மேற்கண்ட சட்டங்களை பின்பற்ற வேண்டும் என இந்திய உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் தம்பதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் எனவும் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஆய்வகத்தில் பாதரசத்தை தங்கமாக மாற்றிய ஸ்டார்ட்-அப்!! இனி தங்கம் விலை குறையுமா?
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES