SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : அனோஜனுக்கு மரண தண்டனை ரத்து! மத உணர்வுகளை புண்படுத்திய வழக்கில் திடீர் மாற்றம் எப்படி?

Saudi Arabia Anojan Case : சவுதி அரேபியாவில் வேலை பார்த்த இலங்கை இளைஞருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Written By Yuvashree M
Published: Oct 15, 2026, 12:45 PM IST | Updated: Oct 15, 2026, 01:17 PM IST
Join

Saudi Arabia Anojan Case Explained : சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த இலங்கை தமிழரான அனோஜன் சிவராசா என்பவர், இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது, அவரை மரண தண்டனை வரை அழைத்து சென்றது; இருப்பினும் அவர் கடைசி நேரத்தில் அந்த தண்டனை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

வேலைக்காக சவுதி அரேபியா சென்ற இளைஞர்!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர் அனோஜன் சிவராசா. இவர், வேலைக்காக, சவுதி அரேபியாவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருக்கிறார். சமூக வலைதளமான பேஸ்புக்கிலும் இவர் ஆக்டிவாக இருந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர், நாய்களை துன்புறுத்தும் வகையிலான ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதற்கு அனோஜன் முகம்மது நபியை கமெண்ட் செய்வது போன்ற கமெண்ட்டை வெளியிட்டிருக்கிறார். உடனடியாக இவருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. பலரும், இவருக்கு கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

மன்னிப்பு கேட்டார்..!

அனோஜனின் கமெண்ட் வைரலானதை அடுத்து, எதிர்ப்புகள் கிளம்பியதால் அவர் தன் கருத்துக்கு மண்ணிப்பு கேட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதில், “அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்; சமூக வலைதளங்களில் சுப்பிரமணி என்ற நாலு கால் ஜீவன் பற்றிய பல வகையான போஸ்ட்கள் உலாவிக்கொண்டிருந்தன. அதில் ஒரு போஸ்டின் கிழ், அதைப்பற்றி ஒரு நபர் இழிவாக பேசியிருந்தார். அவர் மீதிருக்கும் கோபத்தில் நான் முகம்மது நபியை தவறாக கமெண்ட் செய்து விட்டேன்; அது உண்மையிலேயே எனக்கு வருத்தமாக இருக்கிறது; இதை நான் உணர்ந்து 10 நிமிடத்தில் கமெண்டை டெலிட் செய்து விட்டேன். இருப்பினும், அந்த போஸ்ட் சமூக வலைதளத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் நான் சுய நினைவுடன் அந்த வேலையை செய்யவில்லை. திடீரென வந்த ஒரு கோபத்தின் வெளிபாடாக அதை செய்தேன். நான் அதை புரிந்து கொண்டு விட்டேன். நான் செய்தது மிகப்பெரிய பாவம். அத்துடன் இஸ்லாமிய நெஞ்சங்கள் இதனால் மிகவும் காயமடைந்திருப்பீர்கள், உங்களை வருத்தத்திற்குள் உள்ளாக்கியமைக்கு என்னுடைய சிரம்தாழ்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்; என்னை தயவு செய்து மன்னியுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

வழக்குப்பதிவு!

அனோஜன் மன்னிப்பு கேட்டும் அவருக்கு இருந்த எதிர்ப்பு ஓயவில்லை. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அவர் பதிவிட்டதாக குறிப்பிட்டு சவுதி அரேபியாவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியாலையும் (இந்திய மதிப்பில் 70 கோடிக்கும் மேல்) அபராதமாக விதித்தது. இது இலங்கை அரசாங்கத்திற்கும், அனோஜனின் குடும்பத்திற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தண்டனையை குறைக்க கோரிக்கை..!

அனோஜன் மேற்கூறிய குற்றத்திற்காக கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னாட்களில் அவருக்கான தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான், அவருக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தண்டனையை குறைக்க வேண்டும் என்றும் இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருக்கும் இலங்கை தமிழர்கள், தமிழர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கான பேரணிகள் நடைப்பெற்றன, கூடவே சமூக வலைதளங்களிலும் இவர் குறித்து தொடர்ந்து பதிவிடப்பட்டு வந்தன. அவருடைய தாயார் யோகலக்ஷமி கண்ணீர் மல்க தன் பிள்ளையை காப்பாற்றுமாறு வெளியிட்ட பத்திரிகையாளர்கள் முன்பு மன்றாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

மரண தண்டனை ரத்து!

அனோஜனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்ததை அடுத்து, அதனை ரத்து செய்வதற்காக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதன் பலனாக, அனொஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபியா உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | 2100-க்குள் மனிதகுலமே அழியும்.. 17 பேரழிவுகளை சந்திக்கும் உலக நாடுகள்.. விஞ்ஞானிகள் பகீர்

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பேஸ்புக் பதிவில், அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவுதி அரேபியா உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்திருப்பதாகவும், இலங்கை அரசின் தொடர்ச்சியான தூதரக மற்றும் சட்டப்பூர்வ முயற்சியின் மூலம் இந்த நிவாரணம் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து, இதற்கு ஒத்துழைப்பு அளித்த சவுதி அரேபிய அரசு, இலங்கை தூதரகம், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளின் செயல்களை பாராட்டுகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது எப்படி?

கொலம்போவை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் இந்த வழக்கு குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் எப்படி இந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்பதை விளக்கி இருக்கிறார்.

 “அனோஜனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது இலங்கையில் இருக்கும் முஸ்லீம்-தமிழ் மக்களிடையே ஒரு மோதல் போக்கை தோற்றுவிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. கொலை, விபச்சாரம், பெண்களை அவதூராக பேசுவது உள்ளிட்டவை சவுதியில் கொடூர குற்றங்களாக கருதப்படுகின்றன. இதற்கு, Hadd எனும் ஷரியா சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்படும்.

ஆனால், சவுதி நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு மனுவில் அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது Hadd எனும் சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளனர். ஆனால், முகம்மது நபி குறித்து அவதூறாக அனோஜன் பேசியது, அந்த சட்டத்தின் கீழ் வராது என்று மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, சவுதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கும் போது சைபர் க்ரைம் சட்டத்தின் கீழ் இந்த தண்டனையை வழங்கி இருக்கிறது. அந்த சட்டத்தின் படிதான் அனோஜனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பட்டுள்ளது. ஆகவே, சைபர் க்ரைம் சட்டத்தின் கீழ் அனோஜனிடம் பெற்ற இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு மரண தண்டனை முடியாது என்ற தகவல் உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்ட போது, அனோஜனுக்கு போதிய மொழிப்பெயர்ப்பாளர் இல்லை என்ற விஷயமும் இந்த மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எவ்வாறாக இருந்தாலும் உயர்நீதிமன்றம் அதிகம் கவனம் செலுத்தியிருப்பது, Hadd குற்றம் தொடர்பிலானதுதான்.

நபி அவர்களை அவமதிக்கும் வகையில் யாராவது செயல்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பெரும்பாலான மத்ஹபுகளில் குறிப்பிடப்படவில்லை என்ற தகவலும் சவுதியினுடைய உயர்நீதிமன்றத்திலே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது” என பேசியுள்ளார்.

சவுதி அரேபிய சட்டங்கள் சொல்வது என்ன?

தனிநபர் சட்டங்கள்:

மதமாற்றம்:

மேலும் படிக்க | Explained | சவுதிக்கு புதிய அச்சுறுத்தல்: முக்கிய விமான நிலையங்களை மட்டுமே குறிவைக்கும் ஹூதிகள்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES