• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /கோவில் வாசலில் லாரி விபத்து: 12 பக்தர்கள் பலி - மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன?

கோவில் வாசலில் லாரி விபத்து: 12 பக்தர்கள் பலி - மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன?

மத்திய பிரதேசம் குவாலியர் ஷீத்ல மாதா கோவில் அருகே நவராத்திரி வழிபாட்டிற்கு சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். பலரும் காயமடைந்துள்ளனர்.

Written BySudharsan G
Published: Oct 18, 2026, 09:42 AM IST|Updated: Oct 18, 2026, 09:49 AM IST
joinshare
கோவில் வாசலில் லாரி விபத்து: 12 பக்தர்கள் பலி - மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன?
Image Credit: Madhya Pradesh Truck Accident | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் ஒரே நாளில் 354 மி.மீ மழைப்பொழிவு.. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து என்ன?

சென்னையில் ஒரே நாளில் 354 மி.மீ மழைப்பொழிவு.. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து என்ன?

2

அஜித்தின் 12 படங்களுக்கு இசையமைத்த தேவா..இரங்கல் செய்தி கூட இல்லையே! ரசிகர்கள் வருத்தம்..

3

கோவில் வாசலில் லாரி விபத்து: 12 பக்தர்கள் பலி - மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன?

4

இனி 360 டிகிரி சொர்க்க பயணம்.. அக்.23 முதல் கண்ணாடி மேற்கூரை ரயில் சேவை - மதுரை பயணிகள் குஷி!

5

சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Madhya Pradesh Truck Accident: மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள ஷீத்ல மாதா கோவிலை நோக்கி சென்றுகொண்டிருந்த பக்தர் கூட்டத்திற்குள் லாரி புகுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 13 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, போலீசாரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு, கோயிலின் வெளிச்சுவர் மற்றும் நுழைவாயிலில் மோதியதாகக் கூறப்படுகிறது.

உயிருக்கு போராடும் பக்தர்கள்

நவராத்திரி பண்டிகையில் துர்காஷ்டமி தினமான இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. துர்காஷ்டமியை ஒட்டி அதிகளவிலான பக்தர்கள் கோவிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.

பலரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதில் 5-6 பேர் உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் உள்பட மொத்தம் 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குவாலியர் மூத்த காவல் கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் கூற்றின்படி, கோவிலில் காவலுக்கு இருந்த இரண்டு போலீசாரும் காயமடைந்துள்ளனர்.

தடுப்புகளை தாண்டி வந்த லாரி

சினோர் பகுதியில் இருந்து வந்த அந்த லாரி, சரிவான சாலையில் கோயிலை நோக்கி சென்று கொண்டிருந்தது. நவராத்திரி பண்டிகை நேரத்தில், அப்பகுதிக்குள் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே அப்பகுதியில் காவல்துறையினர் தடுப்புகளையும், சோதனை சாவடியையும் அமைத்திருந்தனர்.

மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) கூற்றின்படி, அதிகாலை சுமார் 1.30 மணியளவில் காவல்துறையினர் அந்த லாரியை நிறுத்தி உள்ளனர். ஆனால் அந்த லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்று, சரிவில் இறங்கி சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது மோதியது.

லாரி சோதனைச் சாவடியை கடந்தது எப்படி? ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழக்க காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளன. அந்த வாகனம் கோயிலை நோக்கியும், அங்கு கூடியிருந்த மக்களை நோக்கியும் எவ்வாறு நகர்ந்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது. சரிவான சாலை காரணமாக லாரி கோவிலை நோக்கி வேகமாக நகர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?

சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ANI ஊடகத்திடம் பேசியபோது, "இந்த சம்பவம் அதிகாலை 1 மணியளவில் நடந்தது. சம்பவ இடத்திலேயே சிலர் உயிருக்கு போராடி வருவதை நான் பார்த்தேன். அந்த லாரி அதன் கொள்ளளவை விட அதிக சரக்குகளுடன் இருந்தது. லாரி திடீரென கடைகளையும், மக்களையும் நசுக்கியது. என் சகோதரரும் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்தில் இன்னும் பீதி நிலவுகிறது" என்றார்.

குவாலியர் மாவட்ட ஆட்சியர் 29 பேர் காயமடைந்திருப்பதாகவும் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், மூத்த காவல் கண்காணிப்பாளர் 39 பேர் காயமடைந்திருப்பதாகவும், 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:
India