• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /பெண்கள் டார்க்கெட்.. 38 பேரை கொன்று சமைத்து திண்ற சீரியல் கில்லர்.. 15 வருட கொடூரம்

பெண்கள் டார்க்கெட்.. 38 பேரை கொன்று சமைத்து திண்ற சீரியல் கில்லர்.. 15 வருட கொடூரம்

Uganda Serial Killer: உகாண்டாவில் 38 பேரை கொடூரமாக சொலை செய்து, அவர்களின் மாமிசத்தை திண்ற சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் 38 பேரை கொன்ற சாப்பிட்ட சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தூக்கிலிட அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 28, 2026, 02:38 PM IST|Updated: Oct 28, 2026, 02:54 PM IST
joinshare
பெண்கள் டார்க்கெட்.. 38 பேரை கொன்று சமைத்து திண்ற சீரியல் கில்லர்.. 15 வருட கொடூரம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல், சம்பளம் எவ்வளவு உயரும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல், சம்பளம் எவ்வளவு உயரும்?

2

Explained : ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு! இதனால் வரும் பக்க விளைவுகள் என்ன?

3

போராடி வென்ற தமிழ்நாடு... காப்பாற்றிய ஆன்ட்ரே சித்தார்த் - ரஞ்சி டிராபியில் அசத்தல்

4

சூரியன் பெயர்ச்சி: தீபாவளி முதல் 4 ராசிகளுக்கு குருவின் அருள்.. கோடீஸ்வர யோகம், வெற்றி!

5

விவசாயிகளுக்கு ரூ.3.60 லட்சம் வரை மானியம்! தட்கல் மின் இணைப்பு பெற தமிழ்நாடு அரசு அழைப்பு!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Uganda Serial Killer: உலக நாடுகளில் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, ஆப்பிரிக்கா, அமெரிக்கா நாடுகளில் நடக்கும் சீரியல் கொலை சம்பவங்கள் உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. நாம் நினைத்த கூட பார்க்க முடியாத அளவுக்கு சீரியல் கொலை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 35 கொலைகளை செய்த சீரியில் கில்லரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

15 ஆண்டுகளில் 35 கொலைகள்..

உகாண்டா கிழக்கு ஆப்பிரிக்க நாடாக உள்ளது.  இந்நாட்டில் 2010 முதல் 2025ஆம் ஆண்டுக்குள் 38 பேரை கொலை செய்து அவர்களின் மாமிசத்தை சாப்பிட்டவரை போலீசார் கைது செய்தனர். அவர் மோசஸ் முஜுரிசி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை உகாண்டாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் முஹூசி கைனருகபா அறிவித்தார்.

இவர் நாட்டில் மிகவும் மோசமான தொடர் சீரியில் கொலைக்காரர்களில் ஒருவர் எனவும் தெரிவித்தார். கடந்த 15 ஆண்டுகளில் 35 பேரை தொடர்ந்து கொலை செய்த சீரியல் கீல்லரான மோசஸ் முஜுரிசியை தூக்கிலிடுவோம் எனவும் அவர் உறுதியளித்தார்.  இவருக்கு பொது வெளியில் மரண தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பதாக கூறினார்.

மேலும் படிக்க: இஸ்ரேல் தேர்தல் 2026: உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா... ஏன்? காரணம் என்ன? -Explained

38 பேரை கொன்று திண்ற சீரியல் கில்லர்

2010 முதல் 2025ஆம் ஆண்டு வரை மசகா, இபண்டா மற்றும் காசோ ஆகிய இடங்களில் 38 பேரை கொடூரமாக கொலை செய்து அவர்களின் மாமிசத்தை  இவர் திண்றுள்ளார். மோசஸ் வீடுகளுக்குள் புகுந்து, அங்கிருப்பவர்களை வெட்டிக் கொன்று, உடல்களை சமைத்து சாப்பிட்டுள்ளதாக அந்நாட்டின் போலீசார் கூறுகின்றனர்.

போலீசாரின் கூறறுப்படி, மசகா, இபண்டா மற்றும் காசோ ஆகிய இடங்களில் உள்ள குடும்பங்களை குறிவைத்து தொடர்ந்து  கொலை செய்து வந்துள்ளாராம். வீடுகளுக்குள் புகுந்து, குடும்பத்திரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளாராம். இவர் கொலை செய்யும் பாணியே சற்று வித்தியாசமாக இருக்குமாம். இவர் வீடுகளில் சுவர்களில் ஓட்டை போட்டு, அதற்குள் நுழைந்து வீட்டில் இருப்பவர்களை அரிவாளால் வெட்டிக் கொல்வதையே வழக்கமாக வைத்துள்ளாராம்.

மேலும், பெண்களாக இருந்தால், அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி, காதலிப்பது போல் நடித்து தனியாக இருக்கும் போது கொலை செய்துள்ளாராம். இப்படியாக மொத்தம் 38 பேரை கடந்த 15 ஆண்டுகளில் கொலை செய்துள்ளார்.  முஜுலிசி கடந்த காலத்தில் பலமுறை பிடிபட்டதாகவும், ஆனால் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபரின் இல்லத்திலிருந்து தடயப் பொருட்களை அதிகாரிகள் மீட்டெடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: செர்பியாவில் மாணவர்கள் ஆட்சி! 14 ஆண்டு கால கொடுங்கோலாட்சிக்கு முடிவு.. Students இயக்கம் வெற்றி பெற்றது எப்படி?

பொதுவெளியில் மரண தண்டனை

பல ஆண்டுகளாகவே போலீசார் அலைய வைத்தார் மோசஸ். கொலை சம்பவம் நடக்க துவங்கியதில் இருந்தே போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தன்ர.  இந்த தொடர் கொலைகளை செய்த சீரியில் கில்லர் மோசஸை இப்போது கைது செய்தனர். இவருக்கு பொதுவெளியில் மரண தண்டனை கொடுக்கப்படும் என உகாண்டா ராணுவத் தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா கூறியுள்ளார். முன்னதாக, 2013ஆம் ஆண்டு   ஃபிரெட் முஜுலிசி என்ற நபர் மசாகா, ரகாய், லியாண்டோண்டே, சங்கா மற்றும் கலிசிசோ ஆகிய இடங்களில் நடந்த கொலை சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 17 கொலைகளை செய்துள்ளாராம். ஆனால், இவரும் தப்பித்து சென்றுவிட்டார். இப்போது கைதாகி உள்ள மோசஸை அந்த நபரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதை பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.  38 பேரை கொன்ற கூறப்படும் மோசஸ் முஜூரிசிக்கு தண்டனை கொடுக்க ஆதாரங்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கான நடவடிக்கைளில் போலீசார் ஈடுபடுகின்றனர்.  கடந்த 15 ஆண்டுகளில் 38 கொலைகளை செய்து சமைத்து சாப்பிட்ட சீரியல் கில்லரை கைது செய்யப்பட்டது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க: Israel Election Result 2026: யாருக்கும் பெரும்பான்மை இல்லை! இஸ்ரேலில் 'கிங்மேக்கர்' ஆன அரபுக் கட்சிகள்

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime