• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /Explained : ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு! இதனால் வரும் பக்க விளைவுகள் என்ன?

Explained : ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு! இதனால் வரும் பக்க விளைவுகள் என்ன?

கருத்தடை மாத்திரைகள், பெண்களுக்கு மட்டும் இருந்து வந்த சமயத்தில், தற்போது ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 28, 2026, 03:38 PM IST|Updated: Oct 28, 2026, 03:48 PM IST
joinshare
Explained : ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு! இதனால் வரும் பக்க விளைவுகள் என்ன?
Image Credit: Male Birth Control | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரயில் நேருக்கு நேர் மோதல்! 39 பேர் பலி..எண்ணிக்கை அதிகரிக்குமா..? அச்சத்தில் அரசு

ரயில் நேருக்கு நேர் மோதல்! 39 பேர் பலி..எண்ணிக்கை அதிகரிக்குமா..? அச்சத்தில் அரசு

2

பசும்பொன் பயணத்தை தவிர்க்கும் CM விஜய்? பின்னணியில் உளவுத்துறை.. தேவர் குரு பூஜை அரசியல்!

3

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல், சம்பளம் எவ்வளவு உயரும்?

4

Explained : ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு! இதனால் வரும் பக்க விளைவுகள் என்ன?

5

போராடி வென்ற தமிழ்நாடு... காப்பாற்றிய ஆன்ட்ரே சித்தார்த் - ரஞ்சி டிராபியில் அசத்தல்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கருவுறுதலை தவிர்க்க, உடலுறவின் போது பல்வேறு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் உள்ளிட்ட சில வழிமுறைகள் இருக்கின்றன. இதில், கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கானதாக மட்டுமே இருந்து வருகின்றன. இந்த வகையான மாத்திரைகளால், பெண்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. இதனால் பெண்கள் பலர், “நாங்கள் மட்டும் ஏன் இதனை சாப்பிட வேண்டும், ஆண்களுக்கு ஏன் கருத்தடை மாத்திரைகள் இல்லை?” எனும் கேள்வியை அடிக்கடி முன்வைப்பர். அவர்களுக்காகவே இப்போது ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது.

உடலுறவுக்கு முன் ஒரு மாத்திரை..!

”நீங்கள் உடலுறவுக்கு முன்பு ஒரு மாத்திரையை போட்டுக்கொண்டால், கருவுறுதலை தவிர்க்கலாம்” என்று கூறுவது ஏதோ எதிர்காலத்தில் இருந்து வந்த செய்தி போல இருக்கலாம். ஆனால், அது இன்னும் சில காலங்களில் உண்மையாக போகிறது. அமெரிக்காவின் Weill Cornell Medicine நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்தக்கூடிய ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளை மனிதர்களிடையே பயன்படுத்த தேசிய சுகாதார நிறுவனங்களிடமிருந்து 8.2 மில்லியன் டாலர் மானியத்தைப் பெற்றுள்ளனர். இந்த மாத்திரை, வழக்கம் போல ஹார்மோன் மாத்திரைகளை போல இருக்காது. ஆனால், இது விரைந்து செயல்படக்கூடிய ஒன்றாக இருக்கும்.

ஆண்களுக்கு ஏன் இது முக்கியம்?

கருவுறுதலை தடுப்பது என்பது, பெரும்பாலான சமயங்களில் மகளிரின் கையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கருத்தடை மாத்திரைகள், தினந்தோறும் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், IUD உள்ளிட்டவற்றால் பல்வேறு பக்கவிளைவுகளை பெண்கள் சந்திக்கின்றனர். அதுவே ஆண்கள் தரப்பில் ஆணுறைகளும், Vasectomy எனப்படும் நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சையும் இருக்கின்றன. இது போன்ற மாத்திரைகளை அறிமுகம் செய்வதால், அவர்களாலும் குடும்பத்தின் பாதி பொறுப்பை ஏற்று, குடும்ப கட்டுப்பாட்டிலும் கவனம் செலுத்த முடியும்.

இந்த மாத்திரையை உடலுறவு கொள்வதற்கு அரை மணி நேரம் முன்பு ஆண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இது, அடுத்த ஆறு முதல் எட்டு மணி நேரத்திற்கு வேலை செய்யும் என கூறப்படுகிறது.

மனிதர்களின் பயன்பாட்டில் உள்ளதா?

இந்த கருத்தடை மாத்திரைக்கு, என்னதான் வரவேற்பு இருந்தாலும் நாம் ஒரு சில விஷயங்களை உற்று நோக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இவை, முன்கூட்டிய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் ஆகும். இதை இன்னும் மனிதர்கள் மீது யாரும் பயன்படுத்தி பார்க்கவில்லை. அதனால், இப்போதைக்கு இந்த மாத்திரை பொதுமக்களிடையே பயன்பாட்டில் இல்லை.

இப்போது புதிதாக தரப்பட்டிருக்கும் மானியம், பாதுகாப்புச் சோதனைகள், நச்சுத்தன்மை ஆய்வுகள் மற்றும் ஆண்கள் முயற்சி செய்து பார்க்கும் அளவுக்குப் பாதுகாப்பான ஒரு மாத்திரையை உருவாக்குவதற்கான நுணுக்கமான பணிகளுக்காகச் செலவிடப்பட உள்ளது.

இது எப்படி வேலை செய்யும்?

ஆண்களுக்கான இந்த கருத்தடை மாத்திரை எப்படி வேலை செய்யும் என்பது குறித்து, மருத்துவ நிபுணர்களான ஜோக்கன் பக் மற்றும் லோனி லெவின் உள்ளிட்டோர் பேசியிருந்தனர். இந்த மாத்திரையானது, கரையக்கூடிய அடினைலில் சைக்ளேஸ் (sAC) எனப்படும் ஒரு நொதியின் மீது கவனம் செலுத்தப்பட்டதாக இருக்கிறது என கூறுகின்றனரர். விந்தணுக்களின் இயக்கத்திற்கு sAC முற்றிலும் இன்றியமையாததாக உள்ளது. ஏனெனில் அது அவற்றை கருமுட்டையை நோக்கி நீந்திச் செல்ல அனுமதிக்கிறது. இந்த சோதனை மாத்திரையானது, இந்த நொதியைத் தற்காலிகமாகத் தடுத்து, விந்தணுக்களை அசையாமல் ஆக்கி, அவை கருமுட்டையை சென்றடைவதைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்கலாமா? அல்லது சிறிது காலம் காத்திருக்கலாமா? -முதலில் இதைத் தெரிந்துகொள்ளுங்கள்!

இதுவரை நடந்த ஆராய்ச்சியில், விந்தணுக்கள் இதனால் அசையாமல் இருப்பதும், கர்ப்பம் தரிக்காமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை வைத்துதான் தற்போது ஆண்கள் உபயோகிக்கக்கூடிய கருத்தடை மாத்திரைகள் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மாத்திரையை எடுத்து 6-8 மணி நேரத்திற்குள், அவர்களின் விந்தணு பழைய நிலைக்கு மாறிவிடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதை பற்றிய ஆர்வமும் எதிர்பார்ப்பும் அனைவருக்கும் இருந்தாலும், இதை எந்த அளவிற்கு நம்ப முடியும்? இதன் பக்க விளைவுகள் என்ன?  இதை நீண்ட நாள் பயன்படுத்தினால் என்ன நடக்கும்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கிறது.

இதை ஆண்களால் எப்போது உபயோகிக்க முடியும்?

இது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தாலும், அவை மருந்துகடைகளில் வந்து அமர பல நாட்கள் ஆகலாம். மேற்குறிப்பிட்ட 8.2 மில்லியன் டாலர் மானியமானது, நான்கு வருட ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. இதில், பாதுகாப்பு நடவடிக்கைகள், அந்த மாத்திரையை சீர்படுத்துவது, இதனை தயாரிப்பது உள்ளிட்ட செலவுகளுக்காக இது ஒதுக்குப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக, பாதுகப்பு மற்றும் சகிப்புத்தன்மை குறித்து பரிசோதிக்கப்பட இருக்கிறது. இந்த மாத்திரையால் எந்த ஆபத்தும் வராது என்பதையும், இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் விந்தணுக்கள் நகராமல் இருக்கும் என்பதையும், மாத்திரையின் வீரியம் குறைந்த பின்னர் பழைய மாதிரியே நகரும் என்பதையும் உறுதிப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்ட பரிசோதனைகளில், அந்த மாத்திரை கர்ப்பத்தை தடுக்குமா இல்லையா என்பதை கண்டுபிடிக்க இயலாது. அடுத்தக்கட்டத்தில்தான், இது குறித்த முழு விவரங்களும் விஞ்ஞானிகளுக்கு தெரிய வரும்.

ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் ஒரு விலங்கிற்கு இந்த மருந்து வேலை செய்தது என்பதற்காக, மனிதர்களுக்கும் வேலை செய்யும் என நாம் எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு சாதாரண, ஹெல்தியான மனிதர் ஒருவருக்கு இந்த மருந்து வேலை செய்கிறதா என்பதை நாம் பரிசோதனை செய்வது நல்லது.

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு ரூ.3.60 லட்சம் வரை மானியம்! தட்கல் மின் இணைப்பு பெற தமிழ்நாடு அரசு அழைப்பு!

Add Zee News as a Preferred Source
TAGS:
Health Tips