SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இந்தியர்களை சுட்டுத்தள்ள திட்டம்! அமெரிக்காவில் இந்த நிலையா? மத்திய அரசு கவலை..

அமெரிக்காவில் இருக்கும் ஒரு பிரபல கோயிலில், துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், இந்தியர்கள் மீது அமெரிக்காவில் இனவெறி தாக்குதல் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

Written By Yuvashree M
Published: Oct 16, 2026, 03:57 PM IST | Updated: Oct 16, 2026, 04:09 PM IST
Join

அமெரிக்காவின், இல்லியான்ஸ் மாகாணத்தின் அரோராவில், இந்து கோயில் ஒன்று உள்ளது. இங்கு வந்த இந்தியர்கள் மீது, ஒரு 19 வயது இளைஞர் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற சம்பவம், கடும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. இதனால் மத்திய அரசும் அந்நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறது.

துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி!

இந்தியர்கள், கணிசமான அளவில் வாழும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது அமெரிக்கா. இந்த நாட்டில், சமீபகாலமாக இனவெறி பிரச்சனைகள் மற்றும் அது குறித்த தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியர்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகும் வகையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

அமெரிக்கா, இல்லியான்ஸில் உள்ள ஒரு இந்து கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி பல இந்தியர்கள் சாமி கும்பிட வந்துள்ளனர். அவர்களை, ஒரு 19 வயது இளைஞன் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, போலீசார் உடனடியாக விரைந்து வந்து அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அவனை தடுத்தி நிறுத்தி கைது செய்துள்ளனர்.

அந்த இளைஞர் இந்திய வம்சவளியினருக்கு எதிரான வன்முறை தொடர்பான காகிதங்களையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கூடவே அந்த இளைஞரின் பெயர் அலெக்சாண்ட்ரோஸ் பபோராக்கிஸ் என்பது தெரிய வந்துள்ளது. இவர் அக்டோபர் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

எப்படி தெரிந்தது?

பபோராக்கிஸ், தன்னுடைய நோக்கங்கள் குறித்து, தன் நண்பர் ஒருவரிடம் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதை வைத்து அந்த நபர் தகவல் கொடுத்ததன் பேரில்தான் போலீசார் அவரை பிடித்துள்ளனர்.

மேலும் படிக்க | Explained | சவுதிக்கு புதிய அச்சுறுத்தல்: முக்கிய விமான நிலையங்களை மட்டுமே குறிவைக்கும் ஹூதிகள்!

துப்பாக்கிகள் கண்டெடுப்பு!

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, எக்கச்சக்க துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், தாக்குதலுக்கான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசம் கொண்ட உடைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் white supremacist கொண்ட சின்னங்கள்ம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

அவரை, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் விடுத்தது, சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளில் பபோரக்கிஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தை, அமெரிக்க புலனாய்வு துறையான FBI உடன் இணைந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து, இல்லியான்ஸின் 8வது நாடாளுமன்ற தொகுதியின் அமெரிக்க பிரதிநிதியாக சுப்ரமணியன் ராஜா கிருஷ்ணமூர்த்தி, தன்னுடைய காலை பிரார்த்தனைக்காக அரோராவில் உள்ள கோவிலில் இந்த சம்பவம் நடந்த போது அந்த கோயிலில்தான் இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய அவர், பாபோராகிஸின் ஆயுதம் ஏ.ஆர்-15 ரக துப்பாக்கி பழுதடைந்ததால் அவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்த முடியாமல் போனதாகவும், இதனால் ரத்த ஆறு ஓடுவது தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் அவருக்கு எப்படி ஏஆர்-15 போன்ற ஒரு ஆயுதம் அவரிடம் எப்படி வந்தது என்றும் கேள்வி எழுப்பினார். மத்திய அரசும், அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க | Explained : அனோஜனுக்கு மரண தண்டனை ரத்து! மத உணர்வுகளை புண்படுத்திய வழக்கில் திடீர் மாற்றம் எப்படி?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES