• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னை மாநகரில் நேற்றிரவு தொடங்கி நள்ளிரவு வரை கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு சில பகுதிகளில் 300 மி.மீ., மேல் மழை பதிவாகி உள்ளது. குறுகிய காலத்தில் தீவிர மழை பெய்துள்ளது. இந்தச் சூழலில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மிக்ஜாம் புயலுக்கு பின்னர் சென்னையில் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு அறியலாம்.

Written BySudharsan G
Published: Oct 18, 2026, 07:03 AM IST|Updated: Oct 18, 2026, 07:32 AM IST
joinshare
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு
Image Credit: Chennai Heavy Rain | AI Designed Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

2

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்... சூர்யவன்ஷி ஏன் விளையாடவில்லை - கேப்டன் சொன்ன காரணம்

3

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

4

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

5

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Rain Latest News Updates: ஐப்பசி மாதம் இன்று பிறந்திருக்கிறது. சென்னையில் விடிய விடிய அடைமழை வெளுத்து வாங்கிவிட்டது. இடி மின்னலுடன் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

இரவில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவோர் மிகவும் அவதிக்குள்ளாகினர். பலரும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குப் புறப்பட்ட நிலையில் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | கிளாம்பாக்கத்தில் கடும் டிராஃபிக்.. அக்டோபர் 21 வரை போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த ரூட்ல?

மேகவெடிப்பு இல்லை

மாலையில் தொடங்கிய மழை சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு வரை நீடித்ததால், மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், சென்னை வானிலை ஆய்வு மையம் அதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Gowtham Shanmugam (@gowthamshanmugam1)

இதுகுறித்து வானிலை மையம் அளித்த விளக்கத்தில், "சென்னை பெருநகரில் மேக வெடிப்பு ஏற்படவில்லை. குறுகிய நேரத்தில் தீவிர மழைப் பொழிவு மட்டுமே. ஆங்காங்கே ஆரம்பித்த மழை, இரவு 8 மணிக்கு மேல் தீவிரமடைந்தது.

அக்.17ஆம் தேதி இரவு 9-10 மணிவரையிலான ஒருமணிநேரத்தில் மட்டும், சென்னையில் அதிகபட்சமாக திருவொற்றியூரில் 5.5 செ.மீ., எண்ணூர் மற்றும் மணலியில் 4.7 செ.மீ., அடையாறில் 3.9 செ.மீ., திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் 3.6 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது. சென்னையின் ஒரு சில இடங்களில் மேகதிரட்சியின் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு" என தெரிவிக்கப்பட்டது.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Tambaram Dhamu (@tambaram_dhamu)

கடுப்பான தமிழ்நாடு வெதர்மேன்

ஆனால், சென்னையில் மேக வெடிப்பு இல்லை என வானிலை மையத்தின் கூற்றில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முரண்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது X பக்கத்தில், "இது மேக வெடிப்பு இல்லையென்றால், மேக வெடிப்பு குறித்த வரையறையை அவர்கள் மாற்ற வேண்டும்" என குறிப்பிட்டு No Comments, Simply Waste என பதிவிட்டுள்ளார்.

சென்னையில் மேக வெடிப்பு

மேக வெடிப்பு என்றால் என்ன?

மேக வெடிப்பு (Cloudburst) என்பது 20 முதல் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு சிறிய பகுதியில், சுமார் ஒரு மணிநேரத்தில் 10 செ.மீ., (100 மி.மீ.,) அளவுக்கு மேல் மழை பெய்வதாகும். ஆனால், சென்னை வானிலை ஆய்வு மையம் ஒருமணிநேரத்தில் எங்கும் 10 செ.மீ., மழை பதிவாகவில்லை என கூறுகிறது.

மிக்ஜாம் புயலுக்குப் பிறகு...

அக். 18 அதிகாலை 1.30 மணிவரை பதிவான மழை என்பது 2023ஆம் ஆண்டு டிசம்பருக்கு சென்னையில் பெய்திருக்கும் அதிகபட்ச மழைப்பொழிவு என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | Explained: இனி குடிநீர் பஞ்சம் இருக்காது! சென்னையில் ரூ.3,108 கோடியில் மெகா திட்டம்.. முழு விவரம்

அவரது X பதிவில், "2023 டிசம்பரில் மிக்ஜாம் புயலுக்குப் பிறகு சென்னை கண்ட மிக அதிக மழைப்பொழிவு இதுவாகும். அப்போது ஒரே நாளில் சுமார் 400-450 மி.மீ., மழை பெய்தது. தற்போது மழையில்லாத 25 நாட்களுக்கு பிறகு, வடகிழக்கு பருவமழையின் வருகையுடன் பெய்த இந்த மழை, இந்த காலகட்டத்தை மேலும் சிறப்பானதாக மாற்றி உள்ளது.

Rainfall recorded till 1:30 AM - Chennai's heaviest rainfall since December 2023 =================== This is the heaviest rainfall Chennai has witnessed since Cyclone Michaung in December 2023, which brought around 400–450 mm of rain in a day. After nearly 25 dry days, these rains arriving with the onset of the Northeast Monsoon make this spell even more special. Today event will have a special entry in my diary. Certain rainy days are unforgettable for pluviophiles, we remember them for a lifetime and today is certainly one of them.

— Tamil Nadu Weatherman (@praddy06) October 17, 2026

இன்றைய நிகழ்வு எனது நாட்குறிப்பில் ஒரு சிறப்பான பதிவாக அமையும், மழையை விரும்புபவர்களுக்கு சில நாட்கள் மறக்க முடியாதவை. அவற்றை நாங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்போம். இன்று நிச்சயமாக அவற்றில் ஒன்றாகும்" என குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலை 1.30 மணிவரை - மழைப்பொழிவு அளவு

பகுதி    மழைப்பொழிவு (மி.மீ.,)
பாரிஸ்  354.5 
கத்திவாக்கம் 334.2 
சத்தங்காடு  253.6
திருவொற்றியூர்  218.1
எண்ணூர் 208.0

*தரவு: தமிழ்நாடு வெதர்மேன் X பதிவு

முதல்முறையாக 300 மி.மீ.,

"ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல்முறையாக 300 மி.மீ., மழைப்பொழிவு சென்னையில் பதிவாக உள்ளது. இன்றைய மழைப்பொழிவு மிகவும் பயங்கரமாக இருக்கிறது" என நள்ளிரவு போட்ட ஒரு பதிவில் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

First 300 mm event of the NEM in entire Tamil Nadu and it is in Chennai. Absolute madness today spell !!!! Rains in North Chennai to slow down at same time Rains in South Chennai to ECR will continue to increase. https://t.co/Py6j3YXrst

— Tamil Nadu Weatherman (@praddy06) October 17, 2026

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

சென்னை மாநகராட்சி தரப்பில் சாலைகளில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், எடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை நள்ளிரவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்தார்.

வடகிழக்குப் பருவமழை 2026 மழைக்கால புகார்கள் மற்றும் உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள்! பொதுமக்கள் தங்களது மழைக்கால புகார்களை கீழ்க்காணும் எண்களில் தெரிவிக்கலாம். #ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai https://t.co/1tjLwQqsOv

— Greater Chennai Corporation (@chennaicorp) October 18, 2026

அப்போது பேசிய அவர், வெறும் 8 மணிநேரத்தில் (மாலை 6 முதல்) சென்னையில் 35.8 செ.மீ., மழை பெய்துள்ளது. இதை சாதாரண மழையாக எடுத்துக்கொள்ள முடியாது. பழைய கட்டடங்களில், வீடுகளில் குடியிருப்பவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை. மழைநீர் தேங்கினாலோ, உதவி தேவைப்பட்டாலோ '1913' என்ற அவசர உதவி எண்ணில் அழைக்கலாம்." என தெரிவித்தார்.

மேலும் படிக்க | சதுப்புநிலம் அருகே வீடு கட்டலாமா? வந்தாச்சு புது அறிவிப்பு!

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather