திபெத் எல்லைக்கு அருகில் உள்ளே லெண்டே கோலா ஆற்றின் செங்குத்தான மேல் பள்ளத்தாக்கு பகுதியில், லாங்டாங் லிருங் சிகரத்தில் பெரும் பகுதி பனி மற்றும் பாறைகள் உடைந்து விழுந்ததன் காரணமாகவே திபெத் - நேபாள எல்லையில் இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த பெரும் பகுதி பனியும் பாறையும் ஏறக்குறைய 50 ஏக்கர் பரப்பளவை மூடியிருந்ததாகவும், இது லண்டனில் இருக்கும் கிரீன் பார்க் அளவிற்கு சமமானது என்றும் கால்கரி பல்கலைகழகத்தின் நிலவடிவவியலாளரான டேனியல் ஷூகர் தெரிவித்திருந்தார்.
திபெத் மற்றும் நேபாளத்தில் பெருவெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையே உருக்குலைந்துவிட்டது. இன்றைய நிலவரப்படி (ஆகஸ்ட் 31), நேபாளத்தில் 903 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. இன்னும் 4,247 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சிட்வான் பகுதியில் இருந்து 272 பேரின் உடல்களும், நவல்பாரசி கிழக்கு பகுதியில் இருந்து 207 உடல்களும், நவல்பாரசி மேற்கு பகுதியில் 151 உடல்களும், கோர்கா மாவட்டத்தில் இருந்து 62 உடல்களும் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக நேபாளின் தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) தெரிவித்துள்ளது.
அதேபோல் நுவாகோட் மாவட்டத்தில் இருந்து 95 உடல்களும், தாடிங் மாவட்டத்தில் இருந்து 55 உடல்களும் தனாஹூ மாவட்டத்தில் இருந்து 37 உடல்களும், ரசுவா மாவட்டத்தில் இருந்து 24 உடல்களும் எடுக்கப்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவிக்கிறது.
99 பாதுகாப்புப் படை வீரர்கள், 591 வெளிநாட்டவர்கள் உள்பட 4,247 பேரை இதுவரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேபாளம் முழுவதும் 6க்கும் மேற்பட்ட நீர்மின் நிலையங்களில் சுரங்கத்திற்குள் பணியாற்றி வரும் குறைந்தபட்சம் 933 பணியாளர்களை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்திலும், நேபாளத்திலும் இந்தளவிற்கு ருத்ரதாண்டவமாடிய பெருவெள்ளம் மனிதர்களுடன் பள்ளிகள், கட்டடங்கள், பாலங்கள், சாலைகள் என உட்கட்டமைப்பையே ஒட்டுமொத்தமாக அள்ளிச்சென்றுவிட்டது. பெருவெள்ளம் ஏற்பட்டதால் கட்டடங்கள் நொடிக்குள் மண்ணோடு மண்ணாகி போகும் வீடியோக்கள் பல இணையத்தில் வைரலாகின.
அப்படியிருக்க, பச்சை நிறத்திலான ஒரே ஒரு வீடு மட்டும் ஆற்றின் பெருவெள்ளத்திற்கு இடையே எவ்வித பாதிப்பும் இன்றி அப்படியே தன்னந்தனியாக நிற்கும் வீடியோவும் வைரலானது. சுற்றி இருந்த வீடுகள், கட்டடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில், இந்த வீடு மட்டும் எவ்வாறு தப்பியது...? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
The House in Green which survived against all Odds.
Even the brutal wrath of Nature which destroyed everything in its path couldn't shake it's foundation.#Nepal #NepalDisaster pic.twitter.com/sgVRF57jsW— D (@Deb_livnletliv) August 28, 2026
இந்நிலையில், Architecture Presentation என்ற கட்டடக்கலை சார்ந்த நிறுவனம் அதன் X பக்கத்தில், வைரல் வீடியோவில் தென்பட்ட அந்த பச்சை வீடு மட்டும் எவ்வாறு பெருவெள்ளத்தில் இருந்து தப்பியது என்பதற்கான பொறியியல் மற்றும் புவியியல் காரணங்களை விளக்கி உள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
Explanation into how this house survived Nepal flood. pic.twitter.com/DAHHG0BSyh
— Architecture Presentation (@arcpresentation) August 30, 2026