Warren Buffett News: மனிதர்கள் உயிர் வாழ தண்ணீர் மிகவும் முக்கியம். தண்ணீர் குடிக்காமல் ஒரு நாள் யாராலும் இருக்க முடியாது. உடலை நீரேற்றமாக வைக்க தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உயிர் வாழ முக்கியமான ஆதாரமாக இருக்கும் தண்ணீரை, உலக பணக்காரரான வாரன் பஃபெட் (வயது 96) 48 ஆண்டுகளாக குடிக்காமல் இருந்துள்ளாராம்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு வாரன் பஃபெட் யார் என்று தெரியாமல் இருக்காது. உலகின் தலைசிறந்த முதலீட்டாளர் என்று இவர் அழைக்கப்படுகிறது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். உலக பணக்காரரான வாரன் பஃபெட் 1970களில் இருந்து ஒரு டம்ளெர் தண்ணீர் கூட அருந்தியதில்லை என்று கூறியுள்ளார். அவருக்குப் பிடித்தமான 'செர்ரி கோக்' மட்டுமே அருந்தியுள்ளராம்.
பிரபல கோடீஸ்வர முதலீட்டாளரும், ஹெட்ஜ் பண்ட் மேலாளருமான பில் அக்மேன், சமீபததில் ஈக்விடடி மேட்ஸ் இன்வெஸ்டிங் என்ற பாட்காஸ்டில் பங்கேற்றார். அப்போது, வாரன் பஃபெட் உடன் இரவு விருந்தில் கலந்து கொண்டது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது, தான் இந்த தகவலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பில் அக்மேன் கூறுகையில், "விருந்தின்போது வாரன் பஃபெட்டிடம் சாதாரண தண்ணீர் வேண்டுமா, மினரல் வாட்டர் வேண்டுமா என்று கேட்டேன். அவர் இரண்டையும் வேண்டாம் என்று கூறி அவர், தனக்கு குளிர்பானம் தான் பிடிக்கும் என கூறினார். ஏன் தண்ணீர் குடிக்க மாட்டீர்களா என்ற கேட்டேன்.
அதற்கு அவர, நான் 48 ஆண்டுகளாக தண்ணீர் குடித்ததில்லை. தண்ணீர் பதிலாக சோடாவே அதிகம் பிடிக்கும் என கூறியுள்ளார். இதற்காகவே ஆக்மேனை பார்க்க வாரன் வரும்போது, ஒவ்வொரு முறையும் செர்ரி கோக்கை ஆக்மேன் வாங்கி வைத்திருக்கிறார்" என பகிர்ந்துள்ளார்.
96 வயதான வாரன் பஃபெட் ஒரு நாளைக்கு ஐந்து கேன் கோக் குடித்து வருகிறாராம். அவர் 50 ஆண்டுகளாக பெப்சி மட்டுமே குடித்து வந்தார் என பத்திரிககை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வாரன் பஃபெட், "எனது உடலில் கால் பங்கு கோகோ கோலாதான் உள்ளது. நான் ஒரு நாளைக்கு 2700 கலோரிகள் உணவு எடுத்துக் கொள்கிறேன் என்றால், அதில் கால் பங்கு கோகோ கோலா மூலமாகவே கிடைக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 5 கோகோ கோலா பாட்டில்களையாவது குடிப்பேன்" என கூறினார்.
அவருடைய மகன் ஹோவர்ட் அவரை 'பெப்சி வாரன்' என்று அழைப்பார் என ஹோவர்டின் சிறுவயது நண்பர்களில் ஒருவர் சிஎன்பிசி-யிடம் தெரிவித்தார். கடந்த 1989ஆம் ஆண்டு நடைபெறற பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் தனது நிறவனத்தில் வருடாந்திர கூட்டத்திற்னா அதிகாரப்பூர்வ பானமாக செர்ரி கோக் குளிர்பானத்தை அறிவித்தார். அந்த நிகழ்ச்சியில் 50 ஆண்டுகளாக பெப்சி குடித்து வந்ததாகவும், தற்போது அதனை மாற்றி இருப்பதாகவும் கூறியிருந்தார்.
பல அமெரிக்கர்களைப் போலவே, தனது உணவிலும் மெக்டொனால்ட்ஸ் பர்கர்கள், ஹாட் டாக்ஸ், ஃபிரைஸ், பாப்கார்ன், குக்கீஸ், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்ற துரித உணவுகள் நிரம்பியுள்ளன எனவும் பப்பெட் கூறியுள்ளார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளுக்கு தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தனது கோடிக்கணக்கான சொத்து மதிப்பை வைத்து அவர் தினமும் ஆடம்பரமாக வாழ்வதில்லை; மாறாக, அன்றைய பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்பவே தனது காலை உணவின் விலையைக் கூட தீர்மானிக்கிறார்.
பிகமிங் வாரன் பஃபெட்' ஆவணப்படத்தில் பேசிய அவர், பங்குச்சந்தை வீழ்ச்சியடையும் நாட்களில் வெறும் 2.61 டாலர் (சுமார் ரூ.215) மதிப்பிலான எளிய உணவையும், சந்தை நன்றாக லாபம் தரும் நாட்களில் 3.17 டாலர் (ரூ.260) மதிப்பிலான உணவையும் வாங்குவதாகத் தெரிவித்துள்ளார். காலை சந்தை சரிவில் இருப்பதால், அதிக விலை உணவைத் தவிர்த்துவிட்டேன் என கூறியுள்ளார்.
சிஎன்பிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடுவதன் மூலம் ஆயுளை ஒரு வருடம் நீட்டிக்க முடியும் என்றால், அந்த ஒரு வருடத்தை தியாகம் செய்யவே தான் தயாராக இருப்பதாகக் கூறினார். "எனக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிட முடியாத வாழ்க்கையில் கூடுதல் ஆண்டுகள் தேவையில்லை. பிடித்ததை சாப்பிட்டு மகிழ்வதே முக்கியம்" என்ற அவரது இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.