SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Bigg Boss Tamil 10 LIVE : தொடங்கியது பிக்பாஸ் 10 - வீட்டுக்குள் 19 போட்டியாளர்கள்...

Bigg Boss Tamil Season 10 Grand Premiere LIVE Updates : பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று முதல் தொடங்குகிறது. இன்று ஒளிபரப்பாகும் தொடக்க விழாவின் நேரலை அப்டேட்ஸை இங்கு உடனுக்குடன் கண்டு ரசிக்கலாம்.

Written By Sudharsan G
Published: Sep 06, 2026, 17:10 IST | Updated: Sep 06, 2026, 22:49 IST
Image Credit: Bigg Boss Tamil 10 LIVE | Screen Grab : X/@vijaytelevision
Join

Bigg Boss Tamil Season 10 Grand Premiere LIVE Updates : இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழிலும் மிகப்பெரிய ஹிட் எனலாம். அந்த வகையில், பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10வது சீசன் இன்று தொடங்குகிறது. 

இந்த வருடமும் விஜய் சேதுபதி நிகழ்வை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் தமிழ் 10வது சீசனின் தொடக்க விழா இன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலிலும் ஒளிப்பரப்பாகிறது. அந்த வகையில், இந்த சீசனின் பங்கேற்பாளர்கள் யார், தொடக்க விழாவில் நடப்பது என்ன உள்ளிட்டவற்றை உடனுக்குடன் இங்கு காணலாம்.

 

06 Sep 2026 22:01 IST

Bigg Boss Tamil 10 LIVE : பிக்பாஸ் வீட்டில் தன்யா தல்லத்

06 Sep 2026 21:35 IST

Bigg Boss Tamil 10 Live : இரண்டு நடிகர்கள் உள்ளே...

பிரபல சின்னத்திரை நடிகரான குமரன் மற்றும் திரைப்பட நடிகரான ராகவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.

06 Sep 2026 20:37 IST

Bigg Boss Tamil : அண்ணன் - தங்கை போட்டி... வென்றது யார்...?

சின்னத்திரை நடிகர் அவினாஷ் அசோக் மற்றும் சின்னத்திரை நடிகர் அக்ஷிதா அசோக் ஆகியோர் பிக்பாஸ் மேடை ஏறினர். இவர்கள் இருவரும் அண்ணன் - தங்கை ஆவார். இவர்கள் இடையே கடும் போட்டி இருந்தது. பார்வையாளர்கள் அவினாஷை தேர்ந்தெடுக்க அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். 

அவரது தங்கை அக்ஷிதா கண்ணீருடன் அண்ணனை வாழ்த்திவிட்டு கனத்த மனதுடன் வீடு திரும்பினார். அக்ஷிதா கடந்த 5 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போராடியதாக அவரது தாயார் கண்ணிருடன் கூறினார்.

06 Sep 2026 20:09 IST

Bigg Boss Tamil 10 LIVE : வீட்டிற்குள் சென்ற மேலும் 2 பெண்கள்

சின்னத்திரை நடிகை முத்தழகி, பிரபல ஒப்பனை கலைஞர் அஸ்மிதா ஆகியோர் பார்வையாளர்களால் அதிக வாக்குகளை வாங்கி வீட்டிற்குள் சென்றனர்.

06 Sep 2026 19:47 IST

Bigg Boss Tamil : உள்ளே சென்ற காமன் மேன் வெற்றியாளர்கள்

காமன் மேன் நிகழ்ச்சியின் வெற்றியாளர்களான முன்னியம்மா, ஷமா, ஜேசன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இப்போது வரை 7 பேர் உள்ளே சென்றிருக்கிறார்கள்.

06 Sep 2026 19:30 IST

Bigg Boss Tamil 10 Live : பிக்பாஸ் இல்லத்தில் ஷெரீஃப்

06 Sep 2026 19:19 IST

Bigg Boss Tamil 10 LIVE : பிக்பாஸ் வீட்டில் பிருத்வி

06 Sep 2026 18:48 IST

Bigg Boss Tamil 10 LIVE : முதல் சுற்றில் உள்ளே போனது யார் யார்?

மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா, திரைப்பட நடிகை சத்திகா, நடிகை ஷப்னம் ஆகியோர் முதல் சுற்றில் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். அதில் பார்வையாளர்கள் வாக்களித்ததன்படி லட்சுமி பிரியா, சத்திகா ஆகியோர் வீட்டுக்குள் சென்றனர். ஷப்னம் வெளியேறினார். 

06 Sep 2026 18:33 IST

Bigg Boss Tamil 10 LIVE : முதல் ஆளாக வந்த லட்சுமி பிரியா

மகாநதி சீரியலில் காவேரி கதாபாத்திரம் மூலம் புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை லட்சுமி பிரியா முதல் ஆளாக அறிமுகமானார். ஆனால் அவர் இன்னும் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. பன்னிக்குட்டி, பத்து தல, The Road உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

06 Sep 2026 18:23 IST

Bigg Boss Tamil 10 LIVE : ஒரே திரையில் 4 ஸ்டார்கள்

மோகன் லால் (மலையாளம்), நாகர்ஜுனா (தெலுங்கு), விஜய் சேதுபதி (தமிழ்), கிச்சா சுதீப் (கன்னடம்) ஆகிய தென்னிந்தியாவின் நான்கு நட்சத்திரங்களும் ஒன்றாக திரையில் தோன்றி உரையாடினர். இந்த ஆண்டு நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குகிறது.  அதற்காக இந்த சிறப்பு ஏற்பாடு.

06 Sep 2026 18:13 IST

Bigg Boss Tamil 10 LIVE : ஒரே பெட்ரூம்...

கடந்த சீசனில் இரண்டு படுக்கையறைகள் வீட்டில் இருந்தது. ஆனால், இந்த முறை பிக்பாஸ் வீட்டில் ஒரே ஒரு படுக்கையறை மட்டுமே. அதேநேரத்தில் கேப்டனுக்கு தனி பெட்ரூம் இருக்கிறது.

06 Sep 2026 18:06 IST

Bigg Boss Tamil 10 LIVE : கமல்ஹாசனுக்கு நன்றி

முதல் 7 சீசன்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை வழிநடத்திய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு, தற்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்தார். விஜய் சேதுபதி 2024, 2025 சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். 

06 Sep 2026 18:05 IST

Bigg Boss Tamil 10 LIVE : தொடங்கியது நிகழ்ச்சி

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் தொடக்க விழாவின் ஒளிப்பரப்பு தொடங்கியது.

06 Sep 2026 17:49 IST

Bigg Boss Tamil 10 LIVE : பிக்பாஸ் வீட்டில் சட்டமன்றம் செட்...?

இந்த சீசனில் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது. அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் இந்த முறை சட்டப்பேரவை போன்ற செட் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றனர்.

*Screen Grab : X/@vijaytelevision

06 Sep 2026 17:43 IST

Bigg Boss Tamil 10 LIVE : மூன்று காமன் மேன்...

அந்த வகையில், Bigg Boss - The Common Man என பிரபலம் இல்லாத பொதுமக்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பும் நிகழ்ச்சியில் மூன்று பேர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முனியம்மா, ஜேசன், ஷமா ஆகியோர் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

06 Sep 2026 17:41 IST

Bigg Boss Tamil 10 LIVE : பங்கேற்பாளர்கள் யார் யார்...?

  • மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா
  • திரைப்பட நடிகை சத்திகா
  • நடிகர் ராகவ்
  • நடிகை சாந்தினி தமிழரசன்
  • சின்னத்திரை நடிகர் அவினாஷ் அசோக்
  • சமூக ஊடக பிரபலம் மற்றும் நடிகை தன்யா பல்லத்
  • குக்கு வித் கோமாளி புகழ் முகமது அன்சர்
  • சின்னத்திரை நடிகர் வினோத் பாபு
  • மாடல் அழகி மற்றும் சின்னத்திரை நடிகை முத்தழகி
  • பிரபல ஒப்பனை கலைஞர் அஸ்மிதா
  • நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி
  • நடிகர் குமரன் தங்கராஜன்
06 Sep 2026 17:32 IST

Bigg Boss Tamil 10 LIVE : பிக்பாஸில் முதல் முறையாக...

  • வழக்கமாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப்போவது யார் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முடிவு செய்வார்கள். ஆனால் இம்முறை அந்த பொறுப்பு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • ஒரே நேரத்தில் மூன்று போட்டியாளர்கள் மேடையில் நிறுத்தப்பட்டு அவர்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல தகுதியானவர்கள் யார் என தொடக்க விழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள் வாக்களிக்க வேண்டும். அதில் அதிக வாக்குகளை பெற்ற முதலிரண்டு பேர் வீட்டுக்குள் செல்வார்கள்.
  • குறைந்த வாக்குகளை பெற்றவர் வெளியேற்றப்படுவார். வழக்கமாக வீட்டுக்குள் இருந்து வெளியேற்றவே மக்கள் வாக்களிப்பார்கள்.
  • இம்முறை வித்தியாசமாக வீட்டுக்குள் செல்லவே தொடக்க விழாவில் மக்களை வாக்களிக்க வைத்துள்ளார்கள்.
06 Sep 2026 17:23 IST

Bigg Boss Tamil 10 LIVE : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இன்று முதல்...

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் பிக்பாஸ் நிகழ்ச்சியும் இன்று முதல் ஒளிப்பரப்பாகிறது. இந்நிலையில், தொடக்க விழாவில் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி உடன் மலையாள நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் மோகன்லால், தெலுங்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் நாகர்ஜுனா, கன்னட நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் உரையாடி உள்ளனர்.

 

06 Sep 2026 17:22 IST

Bigg Boss Tamil 10 LIVE : மாலை 6 மணிமுதல்...

  • பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று மாலை 6 மணிமுதல் ஒளிபரப்பாகும்.
  • ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலிலும் ஒளிபரப்பாகிறது.

     

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES