பிரபல ரவுடி 'குட்டி சாக்கு' படுகொலை... 12 மணிநேரத்தில் 5 பேர் கைது - மதுரை போலீசார் அதிரடி
மதுரை சமயநல்லூர் பகுதியில் பிரபல ரவுடி குட்டி சாக்கு என்ற சூர்யா பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 12 மணிநேரத்தில் 5 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
Madurai Crime News Updates: மதுரை மாவட்டம் சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், இளைஞர் ஒருவர் பயங்கர ஆயுதங்களால் வெட்டி முகத்தை சிதைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்பட்டவர் சமயநல்லூர் சடச்சியம்மன் நகரை சேர்ந்த 'குட்டி சாக்கு' என்ற சூர்யா என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உட்பட பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு... மதுரை கோட்டத்தில் வழித்தடம் மாற்றம் - முழு விவரம்
பயங்கர ஆயுதங்களால்
மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய ஊராட்சி மன்றக் கட்டிடத்தில் சூர்யா நேற்று (நவ. 1) மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவரைப் பயங்கர ஆயுதங்களால் தாக்கியிருக்கிறது. தாக்குதலில் இருந்து தப்பி ஓட சூர்யா முயற்சித்துள்ளார். இருப்பினும் அவரை துரத்திச் சென்று கும்பல் தாக்கியிருக்கிறது
இதில் அவரது முகம் சிதைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக
உயிரிழந்தார். தாக்குதலை நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. சம்பவ இடத்தை கடந்து பொதுமக்கள் இன்று காலை சென்றபோது, சூர்யா பிணமாக கிடைந்ததை பார்த்துள்ளனர்.
பழிக்குப் பழி கொலையா?
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் காவல் துறையினர், சூர்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்தப் பழிக்குப் பழி கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும், கொலை செய்து வீட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களைப் பற்றியும் சமயநல்லூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க | இந்து மத விஷயத்தில் மட்டும்... கடும் நடவடிக்கைகளை எடுத்த அரசு... நீதிபதி கருத்து
குற்றவாளிகள் 12 மணிநேரத்திற்குள் கைது
இந்நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக, வெறும் 12 மணிநேரத்திற்குள் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக மதுரை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக, மதுரை மாவட்ட காவல்துறை சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நடை ரோந்து, வாகன தணிக்கை, கிராம விழிப்புணர்வு கூட்டம் ஆகியவை காவல்துறை தரப்பில் நடத்தப்படுகிறது.
ஆயுதங்கள் ரீல்ஸ் போட்டாலும் கைது
குறிப்பாக, ஆயுதங்களை கையில் ஏந்தி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டதாக தொடர்ச்சியாக பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று கூட யா.ஒத்தக்கடை காவல் நிலையத்தினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் ஆயுதச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆயுதங்களை வைத்திருப்பதும், சமூக வலைதலங்களில் பகிர்வதும் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் சட்டத்தை மதித்து அமைதியுடன் இருங்கள் என்றும் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும் படிக்க | ஒரு தமிழர் பிரதமராக நிச்சயம் வாய்ப்பு இருக்கு... மதுரையில் துணை ஜனாதிபதி பேட்டி