• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ஒரு தமிழர் பிரதமராக நிச்சயம் வாய்ப்பு இருக்கு... மதுரையில் துணை ஜனாதிபதி பேட்டி

ஒரு தமிழர் பிரதமராக நிச்சயம் வாய்ப்பு இருக்கு... மதுரையில் துணை ஜனாதிபதி பேட்டி

Written BySudharsan G
Published: Oct 30, 2026, 10:57 PM IST|Updated: Oct 30, 2026, 11:02 PM IST
joinshare
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார். அவர் கோவிலுக்கு வெளியே பேட்டியளித்தபோது திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சரும் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (அக். 29) மீனாட்சி கோவிலுக்குள் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும்போதே மின்தடை ஏற்பட்ட நிலையில், இன்று துணை ஜனாதிபதி வந்திருக்கும் போதும் மின்தடை ஏற்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று துணை ஜனாதிபதி பேட்டியளித்தபோது, ஒரு தமிழர் பிரதமர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார். அவரது பேட்டியை இங்கு முழுமையாக காணலாம்.

Madurai News1/6

துணை ஜனாதிபதி சாமி தரிசனம்

குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோர் இன்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அறங்காவலர் குழு தலைவர் ருக்மிணி பழனிவேல்ராஜன் அவர்களை வரவேற்றார். அவர்களுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
Madurai News2/6

அணைந்திருந்த கோபுர விளக்குகள்

குடியரசுத் துணை தலைவர் கோவிலுக்குள் சென்ற கிழக்கு வாயில் அஷ்டசக்தி மண்டப உச்சியில் வழக்கமாக 6 மணிக்கு ஒளிரும் மின்விளக்கு இன்று அணைந்து இருந்தது. மதியம் 3 மணி முதல் ஜெனரேட்டர் மூலம் மின்விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், கோபுர விளக்கிற்கான விநியோகம் விடுபட்டதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் கோபுர விளக்கு ஒளிர்ந்தது.
Madurai News3/6

துணை ஜனாதிபதி பேட்டியளித்தபோது மின்வெட்டு

1 மணி நேர சுவாமி தரிசனத்திற்கு பின்னர் 6.30 மணியளவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியே வந்து, செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது கோவில் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. தொடர் இடையூறுகளுடன் சுமார் 2 நிமிடம் கழித்து மின்விநியோகம் சீரானது. அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (அக். 29) மீனாட்சி கோவிலுக்குள் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும்போதே மின்தடை ஏற்பட்ட நிலையில், இன்று துணை ஜனாதிபதி வந்திருக்கும் போதும் மின்தடை ஏற்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Madurai News4/6

மீனாட்சியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்...

இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மிணி பழனிவேல்ராஜன் அளித்த பேட்டியில், "கோவிலில் துணை ஜனாதிபதி வந்திருந்த போது ஜெனரேட்டர் மூலம்தான் மின் விநியோகம் செய்யப்பட்டது. நாட்டில் எவ்வளவு மின்தடை இருக்கிறது என்பதை கடவுள் காண்பிக்கிறார். மின்தடை நிவர்த்தியாக வேண்டும் என நாம் மீனாட்சியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். மின்வெட்டு தான் இந்த நிலைக்கு காரணம். மின்வெட்டின் நிலையை அம்மன் நாட்டுக்கு காண்பிக்கிறார் போல..." என்றார்.
Madurai News5/6

அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமாரின் விளக்கம்

மின்தடை தொடர்பாக X தளத்தில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "துணை ஜனாதிபதியின் வருகையின் காரணமாக, பிற்பகல் 3.30 மணி முதல் கோவிலுக்கு முழுவதுமாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளர் (TNEB AEE) கோவில் மின் நிலையத்தில் இருந்தார். தரிசனத்திற்குப் பிறகு, துணை ஜனாதிபதி கிழக்கு கோபுரத்தின் முன்பு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது, கோவில் மின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கோவிலுக்குள் மின் விநியோகம் தடைபட்டது. உடனடியாக 2 நிமிடங்களில் மின்சாரம் ஜெனரேட்டரிலிருந்து மின்சார வாரியத்திற்கு மாற்றப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.
Madurai News6/6

தமிழர் பிரதமராக வாய்ப்பு...

முன்னதாக, துணை ஜனாதிபதி அளித்த பேட்டியில், "துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், "ஒரு தமிழர் பிரதமர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. ஒரு கன்னடர், குஜராத்தை சேர்ந்தவர் பிரதமராக ஆகும்போது தமிழரும் பிரதமர் ஆகலாம். ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியா வல்லரசு ஆவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மகத்தான நாடாக, எல்லோருக்கும் வழிகாட்டும் நாடாக இந்தியா உருவாகும். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வல்லரசு ஆகும் என கூறினால் நம்பிக்கை இருக்காது. ஆனால், இப்போது இந்தியா வல்லரசு ஆகும் என சொன்னால் மக்களுக்கு நம்புவார்கள். அதே நம்பிக்கை தான் உலகின் நான்காவது வல்லரசாக இந்தியாவை உருவாக்கியுள்ளது. நிச்சயம் உலகின் முதல் வல்லரசு நாடாக இந்தியா மாறும்" என்றார்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா மட்டும் பிரச்னை இல்லை...? தீர்வுகள் இதோ Explained

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா மட்டும் பிரச்னை இல்லை...? தீர்வுகள் இதோ Explained

2

ஜீ எண்டர்டெயின்மெண்ட் 2ஆம் காலாண்டு வருவாய்! கடந்த ஆண்டை விட 13% உயர்வு..

3

Explained : El Nino-வை அடுத்து La Nina தாக்குமா? இதனால் ஏற்படும் மாற்றம் என்ன?

4

ஜீ நிறுவனத்திற்கு தலைமை இணக்க அதிகாரி & நிறுவன செயலாளராக சங்கீதா ஷெட்டி நியமனம்!

5

பிக்பாஸ் 10 : முக்கிய போட்டியாளருக்கு ரெட் கார்ட்? குக்கர் மூடியை வைத்து தாக்கியதால் அதிர்ச்சி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.