SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையாக 5 ஆண்டுகளாக இருந்தவர்கள் ஸ்டாலினும் உதயநிதியும்தான் என்றும்; இப்போது வரைக்கும் மோடி பற்றியோ, அமித்ஷா பற்றியோ எங்கேயாவது பேசுகிறார்களா? என்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கேள்வி எழுப்புகிறார்.

Written By Sudharsan G
Published: Oct 10, 2026, 05:44 PM IST | Updated: Oct 10, 2026, 05:52 PM IST
Join

மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (அக். 10) மதுரா கல்லூரியில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர்

மதுரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல் குமார், மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமார் ஆகியோர் 70க்கும் மேற்பட்டோருக்கு பணி ஆணைகளை வழங்கினர். இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்பையா, தங்கபாண்டியன், முஸ்தபா ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்

இதை அடுத்து, சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளதாகவும்; 70க்கும் மேற்பட்டோருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது நல்ல ஒரு தொடக்கமாக அமைந்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் இதேபோன்று மதுரை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளோம் என்றும் அவர் தகவல் தெரிவித்தார்.

பாஜகவை எதிர்க்காத திமுக...

நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்திப்பது குறித்து பேசிய அவர், "மோடிக்கு எதிராக கருப்பு பலூன் விட்டவர்தான் ஸ்டாலின். 5 வருடமாக ஆட்சியில் இருந்தபோது பிரதமர் வந்தால் பட்டு வேஷ்டி கட்டி குடும்பத்துடன் சென்று அனைத்து மரியாதையும் வழங்கினார்.

ஆட்சியில் இருந்தபோது உதயநிதியோ ஸ்டாலினோ பாஜகவை எதிர்த்தோ மோடியை எதிர்த்தோ பேசி இருக்கிறார்களா? எப்போது பார்த்தாலும் கவர்னரை பற்றி தான் பேசுவார்கள்... தவெக ஆட்சியில் அப்படி அல்ல... முதல் நாளில் முதல் மாநாட்டிலேயே பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என அறிவித்தவர் முதல்வர் விஜய்.

கத்துக்குட்டி உதயநிதி...

காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணி பாதையில் கொள்கையில் எந்தவித சமரசமும் இல்லை. ஒவ்வொரு இடத்திலும் சொல்கிறோம், இதற்கு மேல் தெளிவான மெசேஜ் சொல்ல முடியாது. தெளிவான கொள்கையை டிக்ளேர் செய்துவிட்டு வந்தவரை பார்த்து பேசுவதற்கு அருகதை இல்லை.

மேலும் படிக்க | டெல்லியின் அடிமை முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல் - என்ன மேட்டர்?

திமுகவும் அதிமுகவும் யாருடைய பின்புலத்தில் ஆட்சி அமைக்க முயன்றார்கள் என காதர் மைதீன் சொன்னார். பாஜகவின்  உதவியுடன் பாஜகவிடம் பேசி விட்டோம் என கூறியதாக அதிமுக தலைவர்கள் அதைத்தான் சொன்னார்கள், டெல்லியில் பேசிவிட்டோம், டெல்லியின் ஆதரவோடு திமுகவும் அதிமுகவும் ஆட்சி அமைப்போம் என சொல்லி இருக்கிறார்கள். உதயநிதிக்கு அரசியல் என்னவென்றே தெரியவில்லை, கத்துக்குட்டி போல பேசுகிறார். பாஜகவை கொள்கை எதிரி என அறிவித்தவரிடம் இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை" என பதிலளித்தார்.

அனுமதி உள்ள இடத்தில் போராடலாம்...

மேலும், சென்னையில் போராடியவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு, "எஸ்ஐஆர் பற்றி நாம் தெளிவாக சொல்லி இருக்கிறோம். எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் போராடிய ஒரே கட்சி தமிழக வெற்றி கழகம் மட்டும்தான். எஸ்ஐஆர் நடவடிக்கையில் தவறு  நடந்துள்ளது; எஸ்ஐஆர் நடவடிக்கையை முறையாக செய்யவில்லை என எதிர்ப்பு தெரிவித்தோம்.

அனுமதிக்கப்பட்ட இடத்தில் யாருக்கும் போராட்டம் நடத்த எந்த தடையும் கிடையாது, அனுமதிக்கப்பட்ட இடத்தில் தடுப்பது கிடையாது. எந்த அரசாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தினால் காவல்துறை தடுக்கவே செய்வார்கள். தவெக நிர்வாகிகளே எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அனுமதி பெற்று தான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

கடந்த ஆட்சியில் கொண்டு வந்த  SOP-ல்  எந்தெந்த இடத்தில் தான் அனுமதி உள்ளதோ அங்கு கூட்டங்கள் போராட்டங்கள் நடத்தலாம்; அங்கு அனுமதி கொடுப்பதற்கு தயாராக அரசு உள்ளது. எங்கள் தலைவரின் நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கு கீழ்தான் அனுமதிக்க இருப்பதாக சொல்லி இருக்கிறோம். அனுமதிக்கப்பட்ட இடத்தில்  பொதுப்பணித்துறையிடம் ஸ்டெபிலைட்டி கேட்டு அவர்கள் அனுமதி கொடுத்தால் செய்ய வேண்டும்" அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்தார்.

CJP-க்கு ஆதரவா...?

CJP போராட்டத்திற்கு ஆதரவா என்ற கேள்விக்கு, "ஒரு சில விஷயங்களைப் பற்றி கேட்டால் சொல்ல முடியும் இன்னொரு தனி அமைப்பு இயக்கங்கள் பண்ணுகின்ற போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பது என்பது வேறு விஷயம். நமது கருத்தை தெளிவாக சொல்லி விட்டோம். யார் யாரோ பண்ணுகிற போராட்டத்தில் நாம் எப்படி கலந்து கொள்ள முடியும்.

எல்லா இயக்கமும் எதை நோக்கி பயணிக்கிறார்கள் என தெரிய வேண்டும். அவர்களுக்கு பின்னால் வேறொரு இயக்கம் இருந்து ஆப்ரேட் செய்கிறார்களா என்பது என்னவென்று தெரியாது. SIR பற்றியோ பாஜக பற்றியோ கருத்து தெரிவிக்கிறோம். அவர்களுக்கும் நமக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஒரு விஷயத்தில் ஆதரவு கொடுத்துவிட்டு அப்படி பண்ண முடியாது" என பதிலளித்தார்.

170 தொகுதிகளில் வென்றிருப்போம்...

ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்துவதால் ஆதரவு தருவீர்களா? என்ற கேள்விக்கு, "எஸ்ஐஆர் நடவடிக்கையில் தவறு நடந்துள்ளது என்றால்; அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் என்ன மாற்றம் செய்ய வேண்டுமோ அதனையும் செய்ய வேண்டும்

எஸ்ஐஆர் நடவடிக்கை நடக்காமல் இருந்தால் 170 தொகுதிகளில் தவெக வென்றிருக்கும். எஸ்ஐஆர் நடந்தபோது திமுகவின் கட்டுப்பாட்டில்தான் லிஸ்ட் இருந்தது. திமுக மாவட்ட செயலாளர்கள்தான் வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு வாக்காளர்களை நீக்கினார்கள். வாக்களிக்க முடியாமல் செய்தார்கள். அப்போதே கண்டனங்களை தெரிவித்தோம்; ஒருதலைபட்சமாக நடந்துள்ளதாக தெரிவித்தோம்.

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமை ஸ்டாலின்

ஞானேஷ் ராஜினாமா செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் அதனை சீர்செய்ய வேண்டும். நமக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. மறு தேர்தல் வந்தால் எங்களுடைய தலைவர் மீது மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கை இதேபோன்று நல்லாட்சியாக 30 ஆண்டுக்கு எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்

தமிழகத்தில் எங்களது போராட்டத்திற்கு பின்புதான் எஸ்ஐஆர் குறித்து விழிப்புணர் வந்தது. எஸ்ஐஆர்-ல் தவறு நடந்திருப்பது 100 சதவீதம் உண்மை. பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையாக 5 ஆண்டுகளாக இருந்தவர்களே திமுகவின் ஸ்டாலின், உதயநிதி. இப்போது வரைக்கும் மோடி பற்றியோ, அமித்ஷா பற்றியோ எங்கேயாவது பேசுகிறார்களா? மிகப்பெரிய கொத்தடிமையாக இருந்தவர்கள்தான் அவர்கள்..." என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அதிமுக கோட்டையில் தவெக! எடப்பாடிக்கு நெருக்கடி?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES