• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /15 நாளில் முடிந்த திருமணம்.. தாயின் மறைவு.. நடிகை கனகாவின் வாழ்வில் நடந்த சோகங்கள்!

15 நாளில் முடிந்த திருமணம்.. தாயின் மறைவு.. நடிகை கனகாவின் வாழ்வில் நடந்த சோகங்கள்!

Actress Kanaka : கரகாட்டக்காரன் நாயகி நடிகை கனகா வாழ்வில் நடந்த மிகப்பெரிய சோகம், அவர் சினிமாவை விட்டு விலகியது ஏன்? என்ற முக்கய தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Aug 16, 2026, 05:15 PM IST|Updated: Aug 16, 2026, 05:23 PM IST
joinshare
15 நாளில் முடிந்த திருமணம்.. தாயின் மறைவு.. நடிகை கனகாவின் வாழ்வில் நடந்த சோகங்கள்!
Image Credit: Actress Kanaka

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை தேவிகா மற்றும் இயக்குநர் ஏ.பீம்சிங்கின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தேவதாஸ் தம்பதியின் மகள்தான் நடிகை கனகா. பெற்றோர் காதல் திருமணம் செய்துகொண்ட போதிலும், கனகா பிறந்த மூன்று ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். இதனால் தனது தாயார் தேவிகாவின் அரவணைப்பிலேயே கனகா வளர்ந்தார். 1989-ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில், ராமராஜன் கதாநாயகனாக நடித்த 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தின் மூலம் தனது 16-வது வயதில் கனகா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

வெள்ளி விழா கொண்டாடிய 'கரகாட்டக்காரன்' திரைப்படம் வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கனகா ஒரே இரவில் தமிழ்நாட்டின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் 'அதிசயப் பிறவி', விஜயகாந்த் உடன் 'செந்தூரப் பாண்டி', பிரபு, கார்த்திக், முரளி, மம்மூட்டி, மோகன்லால் என தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ச்சியாகப் பல வெற்றிப் படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் வலம் வந்தார். குறிப்பாக, மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த 'காட்பாதர்' மற்றும் 'வியட்நாம் காலனி' போன்ற திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.

நிற்க நேரமில்லாமல் படுபிஸியாக நடித்து வந்த கனகாவின் திரைப்பயணம் அவரது 26-வது வயதில் திடீரென முடிவுக்கு வந்தது. 1999-ஆம் ஆண்டு வெளியான 'விரலுக்கேத்த வீக்கம்' திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடிப்பதை முழுமையாகத் தவிர்த்தார். திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோதே அவர் விலகியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அடுத்தடுத்த சோகங்களே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

கனகாவுக்கு தாயார் தேவிகா மட்டுமே உலகமாக இருந்தார். ஆனால், 2002-ஆம் ஆண்டு தேவிகா தனது 59-வது வயதில் காலமானார். தாயின் மறைவு கனகாவை நிலைகுலையச் செய்து, அவரை மிகக் கடுமையான மன உளைச்சலுக்கும் தனிமைக்கும் தள்ளியது. தாயாரின் மறைவுக்குப் பிறகு சொத்துக்கள் தொடர்பாக தந்தைக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினைகளும், சட்டப் போராட்டங்களும் அவரை வெளியுலகத்தை விட்டு மேலும் தனிமைப்படுத்தின.

இதனிடையே, 2007-ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவரை கனகா ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் 2010-ஆம் ஆண்டு இதுபற்றி மனம் திறந்த கனகா, "திருமணம் முடிந்த வெறும் 15 நாட்களிலேயே கணவர் மாயமாகிவிட்டார், அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை" என்று கூறி திரையுலகையே அதிர வைத்தார். தொடர் ஏமாற்றங்களால் அவர் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது வீட்டில் யாருடனும் தொடர்பில்லாமல் முழுமையான தனிமையில் வாழத் தொடங்கினார்.

இதற்கிடையில், கனகா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகப் பலமுறை சமூக வலைத்தளங்களில் தவறான வதந்திகள் பரவின. இதனால் நேரில் தோன்றி தான் நலமுடன் இருப்பதாக அவர் விளக்கம் அளிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு மூத்த நடிகை குட்டி பத்மினி அவரை நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. அதில் பழைய கதாநாயகி தோற்றம் முற்றிலும் மாறி, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் காணப்பட்டார். பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாக ஒரு வீடியோ வெளியிட்டாலும், திரையுலகைத் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு முன்னணி நட்சத்திரத்தின் வாழ்க்கை இவ்வாறு தனிமையிலேயே தொடர்வது தமிழ் திரையுலகின் சோகமான பக்கங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

 

Add Zee News as a Preferred Source