நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு
Constitution Day Explained: இந்திய அரசியலமைப்பு தினம் இன்று (நவம்பர் 26)கொண்டாடப்படுகிறது. இதே நாளில் சாதியை பாதுகாக்கிற அரசியல் சாசனத்தின் பிரிவுகளை எரித்து தந்தை பெரியார் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார். இந்த போராட்டம் ஏன் நடந்தது? எந்த அரசியல் சாசனப் பிரிவுகளை பெரியார் எதிர்த்தார் என்பது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Constitution Day Explained: 2015 ஆம் ஆண்டு முதல் அரசியல் சாசன தினம் என்பது நவம்பர் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியல் சாசனம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை அரசியல் சாசன தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 26 'அரசியலமைப்பு தினமாக' அனுசரிக்கப்படுகிறது. இதற்கு முன்பு இது 'தேசிய சட்ட தினம்' (National Law Day) என்று அழைக்கப்பட்டது. அந்த வகையில், இன்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், இதே நவம்பர் 26ஆம் தேதி தான் தந்தை பெரியார் அரசியல் சாசனப் பிரிவுகளை எரித்து போராட்டம் நடத்தினார். இந்த போராட்டம் இந்தியாவையே அன்றைக்கு உலுக்கியது. இந்த போராட்டத்தில் உயிரிழப்புகளும், கைது நடவடிக்கைகளும் இருந்தன. தந்தை பெரியாளர் அரசியல் சாசன எரிப்பு போராட்டத்தை ஏன் கையில் எடுத்தார்? என்பது குறித்து பார்ப்போம்.
அரசியல் சாசன எரிப்பு போராட்டம்
சாதி ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் அமைந்திட தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் பெரியார். தந்தை பெரியார் 1926ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியது முதலே சாதி ஒழிப்புக்கான போராட்டங்களை கையில் எடுத்து வந்தார். நீதிக்கட்சி, திராவிட கழகம் என இயக்கங்களின் பெயர் மாறினாலும், தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பு தொடர்ந்தன.
இதன் உச்சம் தான், சாதியை பாதுகாக்கும் அரசியல் சாசன பிரிவுகளை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார். ஓட்டுமொத்த இந்தியா வையும் தெற்குத் திசை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது திராவிட இயக்கம் வர லாற்றின் பக்கங்களில் எழுதப்பட்டுள்ள போராட்டங்களின் வரிசையில் தந்தை பெரியார் முன்னெடுத்த சாதியைப் பாது காக்கும் அரசியல் சட்ட எரிப்புப் போராட் டம் மகத்தான ஒன்றாகும்.
1957ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் நாள் தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், இந்திய அரசியல் சட்டத்தில் சாதியை ஆதரிக்கும் பிரிவுகள் நீடிப்பது கூடாது என்பதால், அவற்றை நீக்க வலியுறுத்தி அரசியல் சட்டத்தில் உள்ள பிரிவுகளை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை பெரியார் அறிவித்தார்.
அவருடைய அறிவிப்புக்கு மாநாட்டில் திரண்டிருந்த தொண்டர்கள் ஆதரவளித்து முழக்கங்கள் எழுப்பினர். 1957 நவம்பர் 26 அன்று அரசி யல் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராடடம் நடத்தப்படும் என கூறப்பட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக 1957ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் நாள் தஞ்சையில் போராட்டம் நடத்தப்பட்டது. அரசியல் சாசன பிரிவுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
எந்த அரசியல் சாசனப் பிரிவகளை பெரியார் எதிர்த்தார்?
- சட்டப்பிரிவு 13(2) - அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அல்லது குறைக்கும் சட்டங்களை அரசு இயற்றுவதற்கு தடை
- சட்டப்பிரிவு 26 - மத அமைப்புகள் தங்களது மத விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
- சட்டப்பிரிவு 29 (1) - தனித்துவமாக மொழி, எழுத்து, பண்பாட்டைப் பாதுகாக்கும் உரிமை
- சட்டப்பிரிவு 29(2) - அரசு நடத்தும் அல்லது அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மறுக்கத் தடை
- சட்டப்பிரிவு 368 - அரசியல் சாசனத்தை திருத்தவதற்கான நடைமுறை
- சட்டப்பிரிவு 25(1) - மனசாட்சி சுதந்திரம், மதத்தை பின்பற்றுதல், கடைப்பிடித்தல், பரப்புதல் ஆகியவற்றுக்கான உரிமை
பெரியார் போராட்டமும்.. காமராஜர் கொண்டு வந்த சட்டமும்
அப்போது சென்னை மாநிலத்தை காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்தது. அப்போது, அரசியல் சட்டத்தை எரித்தால் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்டமுன்முடிவை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. அதற்கு முன்பு இந்த சட்டம் எதுவும் கிடையாது. எனினும், பெரியார் முன்னெடுக்கும் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தைத் தடுப்பதற்கும் மீறினால் தண்டனை வழங்குவதற்கும் ஆலோசனைகள் நடத்தியது காங்கிரஸ் அரசு. இதனைத் தொடர்ந்து தேசிய அவமதிப்புத் தடைச் சட் டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடிவு செய்தது. அரசியல் சாசன எரிப்பு போராட்டத்தை தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த காமராஜர் தேசிய அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தை நவம்பர் 18ஆம் தேதி கொண்டு வந்தார்.
பெரியார் கைதும், 10,000 பேர் எரித்தனர்..
1957ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் பெரியார் அறிவித்த அரசியல் சாசன எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. திரவிட கழகத்தின் ஆண், பெண் தொண்டர்கள், தொழிலாளர்கள், முதியவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். இதில், 10,000க்கும் மேற்பட்டோர் மேல் அரசியல் சட்டத்தில் உள்ள சாதிப் பிரிவுகளைக் தீயிட்டு கொளுத்தினர். 4000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை ஒவ்வொருவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டன. பெரியாரும் முன்கூட்டியே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசியலமைப்பின் முதல் திருத்தம்
இந்திய அரசியலமைப்பு (முதல் திருத்தம்) சட்டம், 1951 ஜூன் 18, 1951 அன்று நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த 15 மாதங்களுக்குப் பிறகு, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையிலான அரசு கொண்டு வந்தது. 1951-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தத்தில் (பிரிவு 15(4)), வகுப்புரிமை மற்றும் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் முக்கியப் பங்கு வகித்தன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டது. பெரியாரின் இடைவிடாத கோரிக்கையினாலும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் அவர் மேற்கொண்ட வற்புறுத்தலினாலும் திருத்தம் செய்யப்பட்டன. இந்தியா முழுவதும் சமூக நீதியைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.